ஜனாசா சட்டங்கள் – மையித்தைக் கபனிடுதல் – பாகம் 1
ஒரு மையித்தைக் குளிப்பாட்டி முடிந்தவுடன் அதனைக் கபனிடுவது கட்டாயமாகும். அதற்குரிய நபி மொழி ஆதாரம் மூன்றாவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. (இஹ்ராம் கட்டிய நிலையில் வாகனத்திலிருந்து வீழ்ந்து மரணித்தவர் செய்தியில் பார்த்துக் கொள்ளலாம்). மரணமடைந்தவரின் சொந்தப் பணத்திலிருந்து கபனிடுதல் வேண்டும். வேறு யாராவது முன் வந்தும் செலவு செய்யலாம். கப்பாப் இப்னுல் அரத் (ரழி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழி இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. “நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். அல்லாஹ்வின் ... Read more