9️⃣ பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது?

கேள்வி: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது? பதில்: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை செவிமடுப்பதும் ஆகுமாக மாட்டாது. ஆனால், அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தி அவர்களின் (கருத்துகளுக்கு) மறுப்புக் கூற விரும்பும் மார்க்க விடயங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுக்கு வாசிக்க முடியும். ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்களும், அறிவைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவர்களின் புத்தகங்களை வாசிக்கக் ... Read more

பாவி,பித்அத்-வாதி இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்?

கேள்வி: இவர்கள் இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்? பாவத்தில் ஈடுபடும் பாவிகளா? அல்லது மார்க்கத்தில் புதுப் புது விடயங்களை உருவாக்கும் பித்அத்வாதிகளா? பதில்: பித்அத் செய்பவர்களே கடுமையாக தண்டிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், பித்அத் என்பது பாவத்தை விட மிகக் கடுமையானதாகவும், ஷைத்தானுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கிறது. ஏனெனில் பாவம் செய்பவர்கள் தனது (பாவத்தை நினைத்து) அல்லாஹ்விடம் பாவமீட்சியில் ஈடுபடுபவர்கள். அத்துடன் தான் ஒரு பாவி என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். (அதற்கு மாறாக) பித்அத் செய்பவர் ... Read more

அறிஞர்களின் கருத்துகளில் பிடிவாதமாக இருப்பவர்களுக்கான அறிவுரை என்ன?

கேள்வி: மக்களில் சிலர் சில மனிதர்களை அதிகமாக கண்ணியப்படுத்துவதோடு, அவர்கள் கூறும் கருத்துக்கள் (பிழையாக இருப்பினும் அவைகளில்) பிடிவாதமாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் கூறும் உபதேசம் என்ன? பதில்: ஒருவர் யாருடன் இருந்தாலும் அவர் சத்தியத்தையே பின்பற்ற வேண்டும். சத்தியத்துக்கு முரணான கருத்துக்களை கூறும் மனிதர்களை அல்ல. இமாம் அஹ்மத் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு கூட்டத்தினர் விடயத்தில் நான் ஆச்சரியமடைகிறேன். அவர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையையும், அது ஆதாரப்பூர்வமானது என்றும் அறிந்துள்ளார்கள். (ஆனால்) அவர்கள் ... Read more

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது? கேள்வி- இன்று நான் ஆஷூரா நாள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் படித்துவிட்டேன், ஆனால் யூதர்களுக்கு மாற்றமாக முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்குமாறு நபி ﷺ கூறிய எந்த ஹதீஸையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ,“இன்ஷா அல்லாஹ் – அடுத்த ஆண்டில் நான் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி ﷺ ... Read more

அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம்

கேள்வி: இவ்விரண்டிலும் எது மிகவும் சிறப்புக்குரியதாகும்?முதலில் மார்க்க அறிவை தேடுவதா? அல்லது அழைப்புப் பணியை மேற்கொள்வதா? பதில்:- முதலில் மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு இல்லாவிட்டால் அவனுக்கு இந்த அழைப்பு பணியை (சிறப்பாக) மேற்கொள்ள முடியாமல் போய்விடும். (மார்க்க அறிவு இல்லாத நிலையில்) ஒருவன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் அவனின் மூலம் அதிகமான தவறுகள் ஏற்படும். அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் மார்க்கத்தை கற்று (தெளிவு பெற்றுக் கொள்வது) ... Read more

நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா?

கேள்வி: நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா? பதில்:- ஆம், நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை (விட்டும் மக்களை) எச்சரிக்கை செய்வது நம் மீது கடமையாகும். இது, அல்லாஹ்வுடனும், அவனுடைய வேதமான அல்குர்ஆனுடனும், அவனுடைய தூதருடனும், முஸ்லிமான தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் மனத்தூய்மையாக நடந்து கொள்வதில் உள்ளதாகும். கெட்டவர்களை விட்டும் மக்களை நாம் எச்சரிக்கை செய்வதோடு, இவ்விடயங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அவர்களுக்கு ... Read more

நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா? விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? பதில்: அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும்.‌ எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ... Read more