ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்கலாமா

ஷேக் பின் பாஸ்: ஆம், ஜனாஸா தொழுகையை ஆண்கள், பெண்கள், அனைவரும் தொழலாம். பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டிலோ, அல்லது மஸ்ஜிதிலோ தொழலாம். இவற்றில் யாதொரு தவறுமில்லை. ஆயிஷா   رضي الله عنها மற்றும், சில பெண்கள் சஅது இப்னு அபீ வக்காஸ் رضي الله عنه அவா்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர்.

ஆகையால் ஜனாஸா தொழுகையை அனைவரும் தொழலாம், ஆனால் கப்றுகளுக்கு செல்வது, ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது, கப்ருஸ்தானுக்கு செல்வது, ஆகியவை பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மஸ்ஜிதிலோ, மறைந்தவரின் வீட்டிலோ அவருக்கு ஜனாஸா தொழுவதில் தடை எதுவும் இல்லை.

 

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d