சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ۝١

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

مِن شَرِّ مَا خَلَقَ ۝٢

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝٣

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ۝٤

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ۝٥

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ 

 (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்:
அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும்.

أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب والنوى، وفالق الإصباح.

مِن شَرِّ مَا خَلَقَ 

அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!

இது மனிதர்கள், ஜின்கள், விலங்குகள், உள்ளிட்ட அனைத்து படைப்புகளையும் உள்ளடக்கும். இவைகளை படைத்தவனிடம் இவற்றின் தீங்குகளை விட்டு பாதுகாப்பு தேடு கூறுகிறான்.

பிறகு அல்லாஹ் அனைத்து படைப்புகளையும் குறிப்பிட்டுவிட்டு, அதில் சில படைப்புகளை தனியாக குறிப்பிடுகிறான்.

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ 

(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கைவிட்டும்,

அதாவது இருள் சூழும் இரவு நேரத்தில் ஏற்படும் தீங்கை விட்டும்.

அந்த நேரத்தில் தான் பல தீய ஷய்த்தான்களும், ஆபத்தான விலங்குகள், பூச்சிகளும் அதிகமாக வெளியேறுகின்றன.

{مِنْ شَرِّ مَا خَلَقَ} وهذا يشمل جميع ما خلق الله، من إنس، وجن، وحيوانات، فيستعاذ بخالقها، من الشر الذي فيها، ثم خص بعد ما عم، فقال: {وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ} أي: من شر ما يكون في الليل، حين يغشى الناس، وتنتشر فيه كثير من الأرواح الشريرة، والحيوانات المؤذية.

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ 

முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

அதாவது, சூனியக்காரர்களின் தீங்கை விட்டும், அவர்கள் முடிச்சுகளில் சூனியம் செய்து ஊதுவார்கள்.

{وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ}أي: ومن شر السواحر، اللاتي يستعن على سحرهن بالنفث في العقد، التي يعقدنها على السحر.

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

இன்னொரு மனிதருக்கு கிடைத்த அருட்கொடை ஒன்று அவனை விட்டு போக வேண்டும் என்று விரும்புபவனே பொறாமைக்காரன், அதற்காக அவனால் முடிந்த முயற்சிகளையும் எடுப்பான். அவனிடம் இருந்தும் அவனின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாப்பு தேடுவது அவசியம்.

பொறாமைக்காரனின் பட்டியலில் கண்ணேறு/ கண் த்ரிஷ்டி உண்டாக்குபவனும் அடங்குவான். கண்ணேறு என்பது தீயகுணமும் பொறாமையும் கொண்டவனிடமிருந்தே உண்டாகுகிறது.

இந்த சூராவில் அனைத்து வகை தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பு தேடல் இடம்பெறுகிறது, பொதுவான தீங்குகளும், குறிப்பிட்ட தீங்குகளும்.

{وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ} والحاسد، هو الذي يحب زوال النعمة عن المحسود فيسعى في زوالها بما يقدر عليه من الأسباب، فاحتيج إلى الاستعاذة بالله من شره، وإبطال كيده، ويدخل في الحاسد العاين، لأنه لا تصدر العين إلا من حاسد شرير الطبع، خبيث النفس، فهذه السورة، تضمنت الاستعاذة من جميع أنواع الشرور، عمومًا وخصوصًا.
இந்த சூராவிலிருந்து சூனியம் என்பது உண்மையிலேயே உண்டு என்பதும்,  அதன் தீங்குகளை தவிர்க்க வேண்டும் என்பதும், அதிலிருந்தும் சூனியக்காரர்களிடமிருந்தும் பாதுகாவல் தேட வேண்டும் என்பதும் தெரிகிறது.
ودلت على أن السحر له حقيقة يخشى من ضرره، ويستعاذ بالله منه [ومن أهله] .

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply