Month: June 2022
கேள்வியாளர் : ஸலஃபி மன்ஹஜை பற்றிய தெளிவும், விளக்கமும் எனக்கு வேண்டும். ஏனென்றால், தற்போது நமக்கு மத்தியில் இருக்கின்ற ஒவ்வொரு கூட்டமும் (தான்தான்) சத்தியத்தில் இருப்பதாக உரிமை கொண்டாடுகின்றன. அதற்கு அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : [இதனை விளக்குவதற்கு பத்து நாட்கள் தேவை, (எனினும் நிகழ்ச்சியின் காரணமாக) தன்னிடத்தில் பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக கூறுகின்றார், அதிலும் சில நிமிடங்கள் கழிந்த விட்டன.] எனினும் அதற்குறிய பதிலாவது: மன்ஹஜுஸ் ஸலஃபானது, தெளிவான மன்ஹஜாகும் …
நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?
நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா? விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும். எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ஓட்டுவது …
இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?
கேள்வி இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ …
அகீதாவிற்கும் மன்ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசம்?
கேள்வி: அகீதா எனும் “கொள்கை கோட்பாடிற்கும்”, மன்ஹஜ் எனும் “வழிமுறைக்கும்” இடையே உள்ள வித்தியாசம் என்ன?? பதில்: மன்ஹஜ் என்பது அகீதாவை விட அதிக கருத்தை பொதிந்துள்ள பொதுவான ஒரு வார்த்தையாகும். எனவே, (ஒரு முஸ்லிமின்) கொள்கை கோட்பாடிலும், பண்புகளிலும், கொடுக்கல் வாங்கல் உற்பட அவனது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் “மன்ஹஜ்” எனும் வழிமுறை காணப்படுகிறது. ஆகவே, ஒரு முஸ்லிம் நடந்து போகும் ஒவ்வொரு பாதைக்கும் “மன்ஹஜ்” என்று கூறப்படுகிறது. ஆனால், அகீதா என்பது ஈமானின் அடிப்படை …
அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!
கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்?? பதில்: “எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி …
அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…! Read More »
இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?
கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து …
பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா?
கேள்வி: ரியாத் நகரில் வசிக்கும் அஹ்மது மிஸ்ரி என்பவர் கேட்கிறார்: கண்ணியம் மிகுந்த ஷேக், பொருளாதாரம் என்பது அருட்கொடையா அல்லது சோதனையா? பதில்: பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளும், அவனின் சோதனைகளும் ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.( அல் …
பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா? Read More »