ஒருவரின் மரண வேளையில் அருகில் இருக்கும் மற்றவர்கள் செய்ய வேண்டியவை

இந்த நூலின் முதல் பாடத்தை பார்க்க

இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார்:

நோயாளிக்கு மரணவேளை வந்ததும்‌ அருகில்‌ இருப்பவர்களுக்குச்‌ சில செயல்கள்‌ கடமையாகின்றன.

 1. அவருக்குக்‌ கலிமாவை எடுத்துக்‌ கூறி அதனைச்‌ சொல்லும்படி. செய்ய வேண்டும்‌.
  “உங்களில்‌ யாருக்காவது மரணம்‌ நெருங்கினால்‌ அவருக்கு கலிமாவை எடுத்துக்‌ கூறுங்கள்‌. எவனுடைய பேச்சின்‌ கடைசிச்‌ சொல்‌ “லா இலாஹ இல்லல்லாஹு’ என்றிருக்கிறதோ அவன்‌ சுவனம்‌ புகுவான்‌. அதற்கு முன்னுள்ள பாவச்‌ செயல்களுக்குப்‌ பரிகாரமாகவும்‌ இருக்கும்‌ என நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.
  (முஸ்லிம்‌)
 2. அவருக்காகப்‌ பிரார்த்தனை செய்ய வேண்டும்‌. அவரிடத்தில்‌ நல்லவற்றையே கூறவேண்டும்‌. “நோயாளியிடத்தில்‌ அல்லது மரணத்தருவாயில்‌ உள்ளவர்‌ இடத்தில்‌ நீங்கள்‌ சென்றால்‌ நவல்லவற்றையே கூறுங்கள்‌. ஏனென்றால்‌, நீங்கள்‌ கூறுவதற்கெல்லாம்‌ வானவர்கள்‌ ‘ஆமீன்‌’ கூறுகிறார்கள்‌!” என நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.
  (முஸ்லிம்‌, பைஹகி)
 3. கலிமாவை எடுத்துக்‌ கூறுங்கள்‌ என்பதன்‌ பொருள்‌ மரணித்துக்‌ கொண்டிருப்பவர்‌ செவிமடுத்தால்‌ மட்டும்‌ போதுமென்பதல்ல. அவர்‌ வாயினால்‌ மொழிய வேண்டும்‌ என்பதே கருத்தாகும்‌. (மரணித்துக்‌ கொண்டிருப்‌பவர்‌) “லா இலாஹ இல்லல்லாஹு” என்று கூற வேண்டும்‌. நோயுற்றிருந்த அன்ஸாரித்‌ தோழர்‌ ஒருவரைக்‌ காண்பதறற்கு நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ சென்றார்கள்‌. தோழரைப்‌ பார்த்து
  லா இலாஹ இல்லல்லாஹ்‌: என்று சொல்லுங்கள்‌ என்றார்கள்‌. நான்‌ லா இலாஹ இல்லல்லாஹ்‌ என்று கூறுவது நல்லதா? என நோயாளி கேட்டார்‌. ஆம்‌ (நல்லது) என்று நபியவர்கள்‌ கூறினார்கள்‌.
  (அஹ்மத்‌)
 4. மரணித்துக்‌ கொண்டிருப்பவரிடம்‌ “யாஸீன்‌” அத்தியாயத்தை ஓதும்படியும்‌, அவரை கிப்லாவின்‌ பக்கம்‌ முகம்‌ திருப்பி வைக்கும்படியும்‌ வந்துள்ள நபிமொழிகள்‌ எதுவும்‌ சரியானதல்ல. சட்டவல்லுநரும்‌, தாபியீன்களில்‌ தலைசிறந்தவரும்‌, மார்க்கத்‌ தீர்ப்பு வழங்குபவராகவுமிருந்த, ஸயீத்‌ இப்னு முஸைய்யப்‌ (رحمه الله) அவர்கள்‌ இவ்வாறு செய்வது (கிப்லாவின்‌ பக்கம்‌ முகம்‌ திருப்பி வைப்பது) மகக்ரூஹ்‌ (விரும்பத்தகாதது) என்று தீர்ப்பளித்தார்கள்‌. மரணித்தவர்‌ முஸ்லிமல்லவா? எனக்‌ கேட்டார்கள்‌. ஸயீத்‌ இப்னு முஸைய்யப்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மரணத்‌ தருவாயில்‌ இருக்கும்போது அபூஸலமத்‌ இப்னு அப்துர்‌ ரஹ்மான்‌ அவர்கள்‌ பக்கத்திலிருந்தார்கள்‌. ஸயீத்‌ அவர்கள்‌ மயக்கமடைந்தபோது அன்னாரின்‌ படுக்கையை கிப்லாவின்‌ பக்கம்‌ முகம்‌ வருமாறு திருப்புமாரு அபூ ஸலமா கூறினார்கள்‌. அவ்வாறு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குப்‌ பின்‌ ஸயீத்‌ இப்னு முஸைய்யப்‌ அவர்கள்‌ உணர்வு பெற்று என்‌ படுக்கையைத்‌ திருப்பினீர்களா? எனக்கேட்டார்கள்‌. ஆம்‌! என பதிலளிக்‌ கப்பட்டது. அபூஸலமாவின்‌ பக்கம்‌ பார்த்து “நீர்‌ தான்‌ இவ்வாறு செய்யச்‌ சொன்னீரா?”” எனக்‌ கேட்டார்கள்‌. ஆம்‌! எனக்‌ கூறியவுடன்‌ பழையபடி படுக்கையை மாற்றும்படி கட்டளையிட்டார்கள்‌ என ஸூர்‌அ இப்னு அப்துர்‌ ரஹ்மான்‌
  அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.
  (இப்னு அபீஷைபா, முஸன்னப்‌)
 5. ஒரு நிராகரிப்பாளரின்‌ மரணத்‌ தருவாயில்‌ முஸ்லிம்‌ அருகிலிருப்பது பிழையல்ல. எனினும்‌ அவர்‌ மரணித்துக்‌ கொண்டிருப்பவரிடம்‌ இஸ்லாத்தை எடுத்துக்‌ கூற வேண்டும்‌. அவர்‌ இஸ்லாத்தைத்‌ தழுவிக்‌ கொள்வதை ஆதரவு வைத்துக்‌ கலிமாவைக்‌ கூற வைப்பது நபி வழியாகும்‌.
 6. அனஸ்‌ (رضي اببه عنه) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌: ஒரு யூதச்‌ சிறுவன்‌ நபி (صلى الله عليه وسلم) அவர்களுக்கு ஊழியம்‌ செய்து கொண்டிருந்தான்‌. அவன்‌ நோயுற்ற போது நபியவர்கள்‌ நலம்‌ விசாரிக்கச்‌ சென்றார்கள்‌. (அவன்‌ மரணத்தருவாயில்‌ இருப்பதைக்‌ கண்ட) நமியவர்கள்‌ அவன்‌ தலைப்பக்கம்‌ உட்கார்ந்து கொண்டு இஸ்லாத்தில்‌ சேர்ந்து விடு! என்றார்கள்‌. அவன்‌ பக்கத்திலிருந்த தன்‌ தந்தையைப்‌ பார்த்தான்‌. அவனுடைய தந்தை “நபியவர்கள்‌ சொல்லுகிறபடி. செய்‌’ எனக்‌ கூறினார்‌. உடனே அவன்‌ கலிமா உரைத்து இஸ்லாத்தில்‌ இணைந்து விட்டான்‌. நரகத்திலிருந்து இவனைக்‌ காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்‌ புகழும்‌ எனக்‌ கூறிக்‌ கொண்டு நபியவர்கள்‌ வெளியேறினார்கள்‌. அவன்‌ இறந்தவுடன்‌ உங்கள்‌ தோழருக்காகப்‌ பிரார்த்தியூங்கள்‌ (தொழுகை நடத்துங்கள்‌) எனக்‌ தோழர்களுக்கு நபியவர்கள்‌ கட்டளையிட்டார்கள்‌.(புகாரி, பைஹகி, ஹாகிம்‌)

நூல்: ஜனாஸா சட்டங்களின் சுருக்கம், இமாம் அல்பானி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “ஒருவரின் மரண வேளையில் அருகில் இருக்கும் மற்றவர்கள் செய்ய வேண்டியவை”

Leave a Reply