ஸூரத்துல் இக்லாஸ் தப்ஸீர் (விளக்கவுரை)

سُورَةِ الْإِخْلَاص – ஸூரத்துல் இக்லாஸ் பெயர் : ஸூரதுல் இக்லாஸ்(தூய்மைப்படுத்தல்) இறங்கிய காலப்பகுதி : மக்கீ வசனங்கள்: 4 (ஸபபுன் னுஸூல்) இறங்கியதற்கான காரண நிகழ்வு: உபை பின் கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்கள் நபிகளாரிடம் முஹம்மதே! உங்கள் இறைவனின் பரம்பரை பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று கூறினர், அப்போது அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான். (அஹ்மத்:21219, திர்மிதீ:3346) இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அபூ ஸஈதுஸ் ஸாகானி’ ‘அபூ ஜஃபரூர் ராஸீ” ஆகிய ... Read more

நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி: நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? பதில்: அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும்.‌ எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ... Read more

இபாதத்களிலிருந்து திசை திருப்பும் ஸ்மார்ட் போன்கள்

கேள்வி: ஷேக்,மேற்கு உலகில் மற்றும் பிற இடங்களிலும் நாம் இப்போது சிரமமான காலங்களில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் கற்கும் திறன், பயன்தரும் வேளைகளில் ஈடுபடும் திறன், செயல் திறன் ஆகியவை குறைந்துவிட்டது. நாம் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறோம், சமூக ஊடகங்ககள், வாட்ஸாப் போன்றவற்றில் அடிமைகளாக இருக்கிறோம். இச்சூழலில் குர்ஆனை நாம் எவ்வாறு மனனம் செய்வது என்று எங்களுக்கு அறிவுரை அளியுங்கள். நாங்கள், எங்களுக்கு நேரம் இல்லை என்று குறைசொல்லுகிறோம் ஆனால், இந்த செல்போன்களில் நமக்கு திரும்ப திரும்ப ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ் ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் ... Read more

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா? பதிலின் சுருக்கம்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும். பதில்: உள்ளடக்கம்: • ஷவ்வால் நோன்பு கடமையா? • ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஷவ்வால் நோன்பு கடமையா? ரமழானின் கடமையான நோன்பிற்குப் ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்: இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது. முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌. “ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி ... Read more