சிறந்த மவ்த்தின் அடையாளங்கள்

    1. இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார:
  1. சத்திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்திய நுண்ணறிவாளர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நற்பேறுடன்‌ மரணிப்‌பவன்‌ (சுவனவாசியாக) மரணிக்கிறானா? என்பதை மரண வேளையில்‌ அறியக்கூடியவாறு, சில அடையாளங்களைக்‌ கூறியுள்ளார்கள்‌. இந்த அடையாளங்களுடன்‌ மரணிப்‌பவனுக்கு நற்பேறு கிடைக்கும்‌.

முதலாவது: மரணவேளையில்‌ கலிமாவை உரைப்‌ பவன்‌.

 

இதற்குச்‌ சான்றாகப்‌ பல நபி மொழிகள்‌ வந்துள்ளன. அவற்றிலொன்று முஆத்‌ (ரழி) அவர்கள்‌ மூலம்‌ “யாருடைய கடைசி வார்த்தை ‘லா இலாஹ இல்வல்லாஹ்‌!’ என்ற வார்த்தையாக இருக்கின்றதோ அவன்‌ சுவனம்‌ நுழைவான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(ஹாகிம்‌)

    இரண்டாவது: மரணவேளையில்‌  நெற்றி வியர்த்தல்‌.

 

புரைதா இப்னு ஹஸீப்‌ (ரழி) அவர்கள்‌ குராஸானில்‌ இருக்கும்‌ போது அவருடைய சகோதரர்‌ ஒருவர்‌ மரணப்‌படுக்கையில்‌ இருப்பதாக அறிந்து அவரைக்‌ காணச்‌ சென்றார்கள்‌. அப்போது மரணப்படுக்கையில்‌ கிடந்தவரின்‌ நெற்றி வியர்த்திருந்தது. இதனைக்‌ கண்ட புரைதா (ரழி) அவர்கள்‌ அல்லாஹு அக்பர்‌ என்று (மகிழ்ச்சியாய்‌) கூறிவிட்டு “ஒரு நம்பிக்கையாளனின்‌ மரணத்தின்‌ போது அவனது நெற்றி வியர்த்திருக்கும்‌’’ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூரியதைக்‌ கேட்டன்‌ எனக்‌ கூறினார்கள்‌. 

(அஹ்மத்‌, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்‌, ஹாகிம்‌)

 

மூன்றாவது: ஜீம்‌ஆ தினத்தின்‌ பசகலிலே இரவிலோ மரணிப்பது:

 

எந்த முஸ்லிமாவது ஜும்‌ஆ தினத்தின்‌ பகலிலோ, இரவிலோ

மரணமடைந்தால்‌ மண்ணறையின்‌ வேதனையை அல்லாஹ்‌ நீக்கி விடுகிறான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அஹ்மத்‌, திர்மிதி)

(மண்ணறையின்‌ வேதனை நீக்கப்பட்டவன்‌ வேறு எந்த வேதனைக்கும்‌ உள்ளாக்கப்பட மாட்டான்‌ என்பது இதன்‌ கருத்தாகும்‌.

 

நான்காவது: போர்க்களத்தில்‌ உயிர்த்‌ தியாகம்‌ செய்தல்‌

அல்லாஹ்வின்‌ பாதையில்‌ போரிட்டுக்‌ கொல்லப்‌ பட்டவர்களை மரித்தவர்கள்‌ என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்‌ – தம்‌ ரப்பினிடத்தில்‌ அவர்கள்‌ உயிருடனேயே இருக்கிறார்கள்‌ – (அவனால்‌) அவர்கள்‌ உணவளிக்கப்படுகிறார்கள்‌.

    தன்‌ அருள்‌ கொடையிலிருந்து அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்ததைக்‌ கொண்டு அவர்கள்‌ ஆனந்தத்துடன்‌ இருக்கிறார்கள்‌; மேலும்‌ (போரில்‌ ஈடுபட்டிருந்த தம்‌ முஃமினான சகோதரர்களில்‌ மரணத்தில்‌) தம்முடன்‌ சேராமல்‌ (இவ்வுலகில்‌ உயிருடன்‌) இருப்போரைப்‌ பற்றி: “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள்‌ துக்கப்படவும்‌ மாட்டார்கள்‌” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்‌.

    அல்லாஹ்விடமிருந்து தாங்கள்‌ பெற்ற நிஃமத்துகள்‌ (நற்பேறுகள்‌) பற்றியும்‌, மேன்மையைப்‌ பற்றியும்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்‌) வீணாக்கி விடுவதில்லை என்பதைப்‌ பற்றியும்‌ மகிழ்வடைந்தோராய்‌ இருக்கின்றார்கள்‌. 

(அல்குர்‌ஆன்‌: 3:169-171)

 

போர்க்களத்தில்‌ எதிரிகளால்‌ வெட்டிக்‌ கொல்லப்‌படும்‌ நம்பிக்கையாளர்களுக்கு (ஷஹீதுகளுக்கு) ஆறு சிறப்பம்சங்கள்‌ கிடைக்கின்றன.

அ) முதலாம்‌ இரத்தத்‌ துளியுடன்‌ அவர்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்படுகின்றன., 

    ஆ) சுவனபதியில்‌ அவர்‌ தங்குமிடத்தைக்‌ கண்ணால்‌

காண்கின்றார்‌.

    இ) மண்ணறையின்‌ வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்‌.

 

    ஈ) மறுமையின்‌ பெருந்திடுக்கங்களிலிருந்து பாதுகாப்புப்‌பெறுகிறார்‌.

 

    ௨) நம்பிக்கையின்‌ அணிகலன்கள்‌ பூட்டப்பட்டு ஹூருல்‌ ஈன்களுடன்‌ (சுவன மாதர்களுடன்‌) திருமணம்‌ செய்து வைக்கப்படுகிறார்‌.

 

    ஊ) அவரது நெருங்கிய இனசனங்களுள்‌ (உறவினர்களுள்‌) எழுபது பேருக்குப்‌ பரிந்துரை செய்து சுவர்க்கத்தில்‌ சேர்த்து விடுகிறார்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

 

(அஹ்மத்‌, திர்மிதி, இப்னுமாஜா)

 

    ஐந்தாவது: போரில்‌ எதிரிகளால்‌ கொல்லப்படாமல்‌ நோயினால்‌ மரணமடைதல்‌

    “நீங்கள்‌ உங்களுக்கிடையில்‌ ஷஹாதத்‌(தியாகத்‌)தை எப்படிக்‌ கருதுகிறீர்கள்‌?” என நபியவர்கள்‌ தோழர்களிடம்‌ வினவினார்கள்‌. ”அல்லாஹ்வின்‌ பாதையில்‌ (போர்க்களத்தில்‌) வெட்டுண்டு இறப்பதுதான்‌ “ஷஹீத்‌” என்று தோழர்கள்‌ பதிலளித்தார்கள்‌. அவ்விதமாயின்‌ என்‌ சமூகத்தவர்களில்‌ ஷுஹதாக்கள்‌ (தியாகிகள்‌) மிகக்‌ குறைவாகவே இருப்பர்‌ எனக்‌ கூறிவிட்டு போர்க்களத்தில்‌ எதிரிகளால்‌ கொல்லப்பட்டவரும்‌ தியாகியே! போர்க்களத்தில்‌ நோயுற்றிருப்பவரும்‌ தியாகியே! பிளேக்‌ கொள்ளை நோயினால்‌ இறப்பவரும்‌ தியாகியே! நீரில்‌ மூழ்கி இறப்பவரும்‌ தியாகியே! வயிற்றோட்ட நோயினால்‌ இறப்பவரும்‌ தியாகியே! என நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

(முஸ்லிம்‌, அஹ்மத்‌)

 

    ஆறாவது: “பிளேக்‌” நோயினால்‌ மரணமடைதல்‌

(தமிழ்‌ அகராதியில்‌) கொள்ளை, கோதாரி எனக்‌ கூறப்படும்‌ பிளேக்‌ நோயினால்‌ இறக்கும்‌ முஸ்லிம்கள்‌ தியாகிகளாவர்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(புகாரி,அஹ்மத்‌, தயாலிஸி)

 

    ஏழாவது: வயிற்றோட்ட நோயினால்‌ மரணமடைதல்‌,

 

“எவன்‌ வயிற்றோட்ட (வாந்தி, பேதி) நோயினால்‌ இறக்கின்றானோ அவன்‌ தியாகியாவான்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(முஸ்லிம்‌)

   

எட்டாவது, ஒன்பதாவது: நீரில்‌ மூழ்கியும்‌ இடிபாடுகளுக்கிடையில்‌ சிக்கியும்‌ – மரணமடைதல்‌.

‘ஷுஹதாக்கள்‌ (தியாகிகள்‌) ஐந்து வகையாவர்‌: 

காயம்பட்டு இறப்பவர்‌, வயிற்றோட்ட நோயினால்‌ மரணிப்பவர்‌, நீரில்‌ மூழ்கி, வீடு இடிந்து வீழ்ந்து மரணிப்பவர்‌, எதிரிகளினால்‌ கொல்லப்படுபவர்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(புகாரி, முஸ்லிம்‌, திர்மிதி)

 

    பத்தாவது: பிரசவத்‌ தீட்டு கழியுமுன்‌ இறக்கும்‌ பெண்ணும்‌ தியாகியேயாவார்‌.

“எதிரிகளினால்‌ கொல்லப்படுபவரும்‌, வயிற்றோட்ட நோயினால்‌ மரணிப்பவரும்‌, பிரசவத்தினால்‌ மரணிப்பவரும்‌ தியாகி (ஷஹீது)களேயாவார்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அஹ்மத்‌, திர்மித்‌, தயாலிஸி)

    பதினொன்றாவது: தீயினால்‌ மரணமடைவது,

அல்லாஹ்வின்‌ பாதையில்‌ கொல்லப்படுவது உட்பட மேலும்‌ ஏழு வகையினர்‌ ஷுஹதாக்‌ (தியாகி)களாவார்கள்‌. காயம்பட்டுப்‌ பல நாட்களுக்குப்‌ பின்‌ இறப்பவரும்‌, நீரில்‌ மூழ்கி இறப்பவரும்‌ தியாகிகளேயாவார்கள்‌’” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அபூதாவூத்‌, நஸயீ, மாலிக்‌, இப்னு மாஜா, ஹாகிம்‌, இப்னு ஹிப்பான்‌)

 

பன்னிரண்டாவது: பாரிசவாத நோயினால்‌ மரணிப்‌ பது இதற்கு முன்னுள்ள நபிமொழி ஆதாரமாகிறது.

 

             பதிமூன்றாவது: காசநோயினால்‌ மரணிப்பது

“அல்லாஹ்வின்‌ பாதையில்‌ போரிட்டு எதிரிகளால்‌ கொல்லப்படுபவர்‌ ஷஹீதாவார்‌. காசநோயினால்‌ இறப்பவரும்‌ ஷஹீதாவார்‌.” வயிற்றோட்ட நோயினால்‌ இறப்பவரும்‌ ஷஹீதாவார்‌’’ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அஹ்மத்‌, தயாலிஸி)

 

குறிப்பு: இந்த நோய்‌ அதிகமாகப்‌ புகை பிடிப்பவர்‌ சளுக்கே ஏற்படுகிறது. நுரையீரலில்‌ புகைமண்டி சுவாசிக்கக்‌ கஷ்டப்பட்டு இருமி, இருமி, அவஸ்தைப்பட்டு இந்த நோயினால்‌ பீடிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இந்த ஷஹீத்‌ பதவி கிடைக்காது. புகை பிடிக்காமல்‌, இந்த நோய்‌ வருபவர்களுக்கே இப்பதவி கிட்டும்‌.

 

பதினான்காவது: தன்‌ பொருளைப்‌ பாதுகாப்‌ பதற்காக திருடனுடன்‌ போராடி இறத்தல்‌.

எவன்‌ தன்‌ பொருளைக்‌ காப்பாற்ற திருடனுடன்‌ போராடி இறக்கின்றானோ அவன்‌ ஷஹீதா(தியாகியா)வான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்‌)

 

பதினைந்தாவது: மதத்திற்காகக்‌ கொல்லப்படுபவர்‌ தியாகியாவார்‌. (அதாவது ஒரு குடிகாரனைக்‌ கண்டு நீ குடிக்காதே! இஸ்லாத்திலே மது விலக்கப்பட்டுள்ளது என்று கூறும்போது அவன்‌ ஆத்திரத்தில்‌ இப்படி அறிவுரை கூறுபவரை கொன்று விடுவார்‌. இவ்வாறு கொல்லப்படு பவரே மதத்திற்காக கொல்லப்பட்ட ஷஹீத்‌ பதவியைப்‌ பெறுவார்‌)

 

எவன்‌ தன்‌ பொருளைக்‌ பாதுகாப்பதற்காகத்‌ திருடனுடன்‌ போரிட்டு மரணிக்கின்றானோ அவர்‌ ஷஹீதாவார்‌. தன்‌ குடும்பத்தினரின்‌ மானம்‌ காக்கப்‌ போரிட்டு மரணிப்பவனும்‌ ஷஹீகாவான்‌. 

    தன்‌ மதப்பிரச்சாரத்திற்காகக்‌ கொல்லப்படுபவரும்‌ ஷஹீத்‌ (தியாகி) ஆவார்‌. தன்னுயிரைப்‌ பாதுகாப்பதற்காகப்‌ போரிட்டு மரணிப்பவரும்‌ ஷஹீதாவார்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அபூதாவூத்‌. நஸயீ. திர்மிதி, அஹ்மத்‌)

 

பதினாறாவது: தன்னுயிரைக்‌ காப்பாற்றுவதற்காகப்‌ போரிட்டு மரணிப்பவர்‌. இதற்கு முன்‌ கூறப்பட்ட நபி மொழியே ஆதாரமாகின்றது.

 

பதினேழாவது: அல்லாஹ்விற்காகப்‌ போரிடுவதற்கு எப்பொழுதும்‌ ஆயத்தமாக இருத்தல்‌.

இவ்வேளை மரணம்‌ சம்பவித்தல்‌, ஒரு பகலும்‌, இரவும்‌ போருக்கு ஈடுபட்டிருப்பது ஒரு நாள்‌ முழுவதும்‌ பகலில்‌, நோன்பு வைத்து இரவு முழுக்க நின்று வணங்குவதை விட மேலானதாகும்‌. அவ்வேளை அவனுக்கு மரணம்‌ சம்பவித்தால்‌ எந்த வேயையில்‌ ஈடுபட்டிருந்தானோ அதன்‌ பிரதி பலன்‌ கிடைத்துக்‌ கொண்டேயிருக்கும்‌. அவனுக்குரிய உணவு அளிக்கப்படும்‌. மறுமைக்‌ குழப்பங்களிலிருந்து பாதுகாப்புப்‌ பெறுவான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(முஸ்லிம்‌, நஸயீ, திர்மிதி, ஹாகிம்‌, அஹ்மத்‌)

 

    பதினெட்டாவது: நற்செயல்களில்‌ ஈடுபட்டிருக்கும்‌ போது மரணமடைதல்‌.

குர்‌ஆன்‌ ஓதிக்‌ கொண்டிருக்கும்போதோ, தொழுது கொண்டிருக்கும்‌ பொழுதோ, அறிவுரை செய்து கொண்டிருக்கும்‌ பொழுதோ மரணமடைந்கால்‌, அல்லாஹ்வின்‌ மீது உறுதி கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ்‌ என்று மொழிபவர்‌ அக்கலிமாவுடனே மரணமடைந்தால்‌ சுவனம்‌ செல்வார்‌. அல்லாஹ்விற்காக நல்லெண்ணம்‌ கொண்டு ஒரு நாள்‌ நோன்பு வைத்தவர்‌, அதன்‌ நன்மையைக்‌ கொண்டே மரணமடைந்து சுவனம்‌ செல்வார்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌. 

(அஹ்மத்‌)

(மேற்கூறப்பட்ட இந்த நபிமொழியை ஆதாரமாக வைத்து இந்நூலாசிரியர்‌ ஒரு சம்பவத்தைக்‌ குறித்துள்ளார்‌. ஹிஜ்ரி 1401ஆம்‌ ஆண்டு நானும்‌ என்‌ மூத்த சகோதரனும்‌ ஹஜ்ஜுக்‌ கடமையை நிறைவேற்றச்‌ சென்றிருந்தோம்‌. அவர்‌ பெயர்‌ முஹம்மது நாஜி அபூஅஹ்மத்‌ என்பதாகும்‌.

ஹஜ்ஜுக்‌ கடமைகளை முடித்துக்‌ கொண்டு கல்லெறியும்‌ மைதானத்தில்‌ நண்பர்களுடன்‌ இருந்தோம்‌. அப்போது நண்பர்‌ ஒருவர்‌ ஒரு கோப்பை தேனீரை எடுத்து இடது கையினால்‌ என்‌ சகோதரனிடம்‌ நீட்டினார்‌. “நண்பரே! நபி வழிக்கு மாறு செய்யாதீர்கள்‌! வலது கையினால்‌ கொடுங்கள்‌!” என்றார்‌. அந்தத்‌ தேனீர்க்‌ கோப்பையை வாங்குவதற்கு முன்னால்‌ அவருக்கு மரணம்‌ நேர்ந்து விட்டது. அவர்‌ நபி வழி ஒன்றை எடுத்துக்காட்டிக்‌ கொண்டிருக்கும்போதே மரணம்‌ சம்பவித்து விட்டது. எனவே எங்களையும்‌ அவரையும்‌ அல்லாஹ்வின்‌ அருளைப்‌ பெற்ற நபிமார்கள்‌, சத்தியவான்கள்‌ ஷுஹதாக்கள்‌, நல்லொழுக்கமுடையவர்களுடன்‌ மறுமையில்‌ ஒன்று சேர்ப்பானாக! என்று எழுதியுள்ளார்‌)

    பத்தொன்பது: கொடுமைக்காரத்‌ தலைவனால்‌ அவனுக்கு நல்லுரை வழங்கிக்‌ கொண்டிருக்கும்போது கொல்லப்படுபவர்‌.

“ஷுஹதாக்‌ (தியாகி)களின்‌ தலைவர்‌ ஹம்ஸா இப்னு அப்துல்‌ முத்தலிப்‌ ஆவார்‌. ஒரு கொடுமையான தலைவனுக்கு நல்லதை ஏவித்‌ தீயதைத்‌ தடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ வேளை அவனால்‌ கொல்லப்படுபவர்‌ , (ஷஹீதாவார்‌) என நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌. 

(ஹாகிம்‌, கதீப்‌)

 

இந்தப்‌ பத்தொன்பது அடையாளங்களையும்‌ பெற்று மரணிப்பவர்களை நற்பேறு பெற்று மரணித்து விட்டார்‌ என்று நாம்‌ தயங்காமல்‌ கூறலாம்‌.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply