சூரா அல் கவ்ஸர் விளக்கம்- இமாம் அல்-ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ * فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ * إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ} .

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
“நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை கொடுத்திருக்கின்றோம்.”

என்று இறைவன் தன் நபி முஹம்மதிடம் صلى الله عليه وسلم ஆறுதலாக கூறுகிறான்:கவ்ஸர் என்றால் “நிறைந்த நன்மையும் , அதிகமான சிறப்புகளும் என்று பொருள். அதில் ஒன்று தான் இறைவன் தன் நபிக்கு صلى الله عليه وسلم கியாமத் நாளில் கொடுக்கும் கவ்ஸர் எனும் நதி. அதன் நீளமும் அகலமும் ஒரு ஆண்டின் பயண தூரமாகும்,அதன் நீர் பாலைவிட வெண்மையானது, தேனைவிடச் சுவையானது, அதை குடிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், எண்ணிக்கையிலும் ஒளியிலும் வானத்தின் நட்சத்திரங்களைப் போன்றது. அதிலிருந்து ஒரு முறை குடித்தால், அவருக்கு அதன் பின்னர் எப்பொழுதுமே தாகம் வரவே வராது.
يقول الله تعالى لنبيه محمد صلى الله عليه وسلم ممتنا عليه: {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ} أي: الخير الكثير، والفضل الغزير، الذي من جملته، ما يعطيه الله لنبيه صلى الله عليه وسلم يوم القيامة، من النهر الذي يقال له {الكوثر} ومن الحوض (1) .
طوله شهر، وعرضه شهر، ماؤه أشد بياضًا من اللبن، وأحلى من العسل، آنيته كنجوم (2) السماء في[ص: 936] كثرتها واستنارتها، من شرب منه شربة لم يظمأ بعدها أبدًا.
இறைவன் நபி صلى الله عليه وسلم அவருக்கு அளித்த அருட்கொடைகளை கூறிவிட்டு, அதற்காக நன்றிசெலுத்துமாறு கட்டளை இடுகிறான்,

{فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ}
“எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.”

இறைவன் இவ்விரு வணக்கங்களை மட்டும் குறிப்பிடுவதற்கான காரணம், இவை இரண்டும் வழிபாடுகளிலேயே மிக சிறந்ததும், இறைவனை நெருங்குவததற்கு மிக முக்கியமான வழிபாடுகளாகும்.
தொழுகையில் மனது, உறுப்புகள் இரண்டும் இறைவனுக்கு கீழ்ப்படிகிறது. குர்பானி கொடுப்பதன் மூலம் ஒரு அடியான் தன்னனிடம் இருக்கும் சிறந்த செல்வத்தை தியாகம் செய்து இறைவனிடம் நெருங்குகிறான், மேலும் மனிதர்களுக்கு விருப்பமானதாகவும், மனிதன் செலவு செய்ய விரும்பாததுமான பொருட்செல்வத்தை இறைவனின் பாதையில் செலவு செய்கிறான். இவ்வாறு இவ்விரு இபாதத்துகள் மூலமாக இறைவனிடம் நெருங்குகிறான்.
ولما ذكر منته عليه، أمره بشكرها فقال: {فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ} خص هاتين العبادتين بالذكر، لأنهما من أفضل العبادات وأجل القربات.
ولأن الصلاة تتضمن الخضوع [في] القلب والجوارح لله، وتنقلها في أنواع العبودية، وفي النحر تقرب إلى الله بأفضل ما عند العبد من النحائر، وإخراج للمال الذي جبلت النفوس على محبته والشح به.

إِنَّ شَانِئَكَ

“நிச்சயமாக உம்முடைய பகைவன்”

அதாவது உம்மை வெறுப்பவன், உம்மை ஏளனப்படுத்துபன், உம்மை ஏசுபவன்

هُوَ الأبْتَرُ
(எவனோ) , அவன்தான் சந்ததியற்றவன்.”

{إِنَّ شَانِئَكَ} أي: مبغضك وذامك ومنتقصك {هُوَ الأبْتَرُ} أي: المقطوع من كل خير، مقطوع العمل، مقطوع الذكر.
அதாவது, அனைத்து நன்மைகளையும் இழந்தவன், அவனின் செயல்கள் எதுவும் பயனற்றது, அவன் புகழும் இழந்தவனாவான்.
முஹம்மதை صلى الله عليه وسلم பொறுத்தவரை அவர் குறையற்ற மனிதர், படைப்புகளிலேயே மிக குறையற்றவர் அவர் தான், மேலும் அதிகமான உதவியாளர்களையும், பின்பற்றுவோரையும் கொண்டவர் அவர் தான் صلى الله عليه وسلم.
صلى الله عليه وسلم.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply