அஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி

கேள்வி : ஆய்வுக்குட்படுத்தப்பட முடியாதவாறான வணக்க வழிபாடுகள் உட்பட மார்க்க விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றுவது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தக்லீத் செய்யக் கூடிய சில ஷைகுமார்கள் இதற்கு மாறாக கருத்து வேறுபாடுகளை அங்கீகரிக்கப்பது மட்டுமல்லாமல் கருத்து வேறுபடுவதை சமூகத்திற்கு ஒரு வரம் என்று கருதுகிறார்கள். இது குறித்து ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் பேசும் போது பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ” எனது சமூகம் கருத்து வேறுபடுவது அருளாகும்” இந்த […]

Read More »

ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன?

கேள்வி: ஷைக் அவர்களே! சிலர் ஏகத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்றனர். ஸூபித்துவத்தை இபாதத் என்று நினைத்து அவர்களும் ஸூபிகளாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் எழுத வாசிக்கத் தெரியாததால் ஏற்பட்ட அறியாமையாக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவற்ற ஸூபி ஆலிம்கள் போன்றவர்கள் அழைப்பாளர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மரணித்த முஸ்லிம்களின் நிலை என்ன? அழைப்புப்பணி பற்றியும், உண்மையான அழைப்புப்பணி சென்றடையாமல் மரணிக்கும் மனிதரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு பிரத்தியேகமான நடைமுறை இருக்கிறது என்று கூறினீர்கள். இது பற்றி உங்கள்

ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன? Read More »

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால்

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன?  Read More »

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன?

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா? ஆதாரம் என்ன? பதில் : பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள். (அல்குர்ஆன் : 40:46) மிகப்பெரும் நிராகரிப்பாளரான பிர்அவ்னையும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அவனது கூட்டத்தாரையும் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பாவம் செய்த முஸ்லிம்களின் தண்டனை இதை விடக் குறைந்தளவாக இருக்கும் என்பதில்

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன? Read More »

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன? Read More »

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர்

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா? Read More »

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா?

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்று மட்டும் தான் கருத்தா அல்லது பெருமை, புறக்கணிப்பு, மறுத்தல் போன்ற கருத்துக்களும் இருக்கின்றனவா? பதில் : செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்), நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) என்று இரு பிரிவுகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தோம். குப்ர் என்ற சொல்லுக்கு நிராகரிப்பு அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றன. தொழுகையோடு தொடர்பு படுத்தி குப்ரை இரு வகைப்படுத்தலாம் 1. நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) : தொழுகையை மறுத்து விடுபவர் காபிராகி விடுகிறான்

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா? Read More »

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன? Read More »

கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா? பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني

கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா? Read More »

தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா?

புத்தக அறிமுகம் நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள்  வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ  தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும். அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு

தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா? Read More »

%d