உடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் ?

கணவன்-மனைவி, உடலுறவு கொள்ளும் முன் பின்வரும் துஆவை கேட்க வேண்டும்:
بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’

(அல்லாஹ்வின் திருப்பெயரால்…யா அல்லாஹ் ! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதைவிட்டும் (குழந்தைச் செல்வத்தைவிட்டும்) ஷைத்தானை விலக்கிவைப்பாயாக)

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டு குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

[ஸஹீஹ் அல்புஹாரி. நஸாயி தவிர்த்து இதர அணைத்து ஸுனன் கிதாபுகளில் இடம் பெற்றுள்ளது]

[இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி ]

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d