قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ – 109:1
(நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே!
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ – 109:2
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:3
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ – 109:4
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:5
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ – 109:6
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
ஷைக் முஹம்மத் இப்ன் ஸுலைமான் அல்அஷ்கர் கூறுகிறார்:
இந்த சூரா இறங்குவதற்கான காரணம், மக்கா நகர காஃபிர்கள், அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم காஃபிர்களின் தெய்வங்களை ஓராண்டு வணங்கினால், அவர்கள் நபியின் தெய்வமாகிய அல்லாஹ்வை ஓராண்டு வணங்குவதாக ஓர் அழைப்பு வைத்தனர்
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ – 109:2
“நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்”
என்று கூறுமாறு அல்லாஹ் நபிக்கு கட்டளை இட்டான். அதாவது நீங்கள் சிலைகளை வணங்குமாறு என்னிடத்தில் கேட்கிறீர்கள் அதை நான் (இப்பொழுது) செய்வதில்லை
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:3
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
நீங்கள் ஷிர்க்கிலும் குஃப்ரிலும் நீடிக்கும் வரை நான் வணங்குபவனை நீங்கள் வணங்கப்போவதில்லை.
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ – 109:4
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்
இப்போது மட்டும் அல்ல எப்பொழுதும் நான் நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கும் சிலைகளை வணங்கப்போவதில்லை.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:5
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்ல
நீங்களும் வருங்காலத்த்திலும் குஃப்ரிலும் சிலை வணக்கத்திலும் நீடிக்கும் வரை, அல்லாஹ்வை வணங்கப்போவதில்லை. காஃபிர்கள் அல்லாஹ்வை வணங்கினாலும் அது ஏற்றுக்கோல்லப்படாது. ஒரே பொருளில் இரண்டு முறை வசனங்கள் வருவதற்கான காரணம், நபியை சிலைவணக்கத்தில் ஈடுபட செய்து விடலாம் எனும் அவர்களின் ஆசையை அறவே உடைத்துவிட வேண்டும் என்பதற்காக தான் என்றும் விளக்கம் தரப்படுகிறது,
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ – 109:6
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
அதாவது உங்களுடைய மார்கத்தை நீங்கள் பொருந்திக்கொண்டால், நான் என்னுடைய மார்கமாகிய இஸ்லாத்தை பொருந்திக்கொண்டேன். உங்களுடைய ஷிர்கேனும் இந்த மார்க்கம் உங்களுக்கு, நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்னுடைய மார்கத்தை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன். [ ஸுப்தத் அல்-தஃப்ஸீர்]
“(நபியே!) நீர் சொல்வீராக ‘காஃபிர்களே!:
இமாம் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்:
“அதாவது , காஃபிர்களிடம் பகிரங்கமாகவும் தெளிவாகவும் கூறிவிடுங்கள்”
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
அல்லாஹ்வை தவிர காஃபிர்கள் வணங்குபவைகளை, நீங்கள் வெளிப்படையிலும் மறைவிலும் புறக்கணித்த நிலையில்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அவர்கள் அல்லாஹ்வை வணங்கினாலும் அவர்களிடம் இக்ஹ்லாஸ் இல்லாததால், ஷிர்க்குடன் கலந்த அவர்களின் வணக்கங்கள் வணக்கங்களாகவே கருதப்படாது.
பின்பு இறைவன் அதே பொருள் தரும் ஆயத்துகளை குறிப்பிடுகிறான். முதல் வரும் ஆயத்துகள் வணக்கம் எனும் செயல் ஏற்படுவதில்லை என்பதை குறிப்பிடுகிறது, பின் வரும் வசனங்களின் சொற்கள், அது அவர்களின் என்றும் மாறாத, நிறைந்தர பண்பாகவே மாறிவிட்டதை குறிக்கிறது.
இதனால் தான் இறைவன் இவ்விரு கூட்டங்களையும் வித்தியாசப்படுத்தி நபியை கூறச்சொல்கிறான் :
“لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ”
“உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
வேறு இடங்களில் இறைவன் கூறுகிறான்:
قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ
أَنْتُمْ بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِمَّا تَعْمَلُونَ
(நபியே!) நீர் கூறுவீராக “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; “
நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
{1 – 6} {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ * لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ * وَلا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ * وَلا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ * وَلا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ * لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ} . أي: قل للكافرين معلنا ومصرحًا {لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ} أي: تبرأ مما كانوا يعبدون من دون الله، ظاهرًا وباطنًا. {وَلا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ} لعدم إخلاصكم في عبادته (1) ، فعبادتكم له المقترنة بالشرك لا تسمى عبادة، ثم كرر ذلك ليدل الأول على عدم وجود الفعل، والثاني على أن ذلك قد صار وصفًا لازمًا. ولهذا ميز بين الفريقين، وفصل بين الطائفتين، فقال: {لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ} كما قال تعالى: {قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ} {أَنْتُمْ بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِمَّا تَعْمَلُونَ} .
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: