சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா?

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா???   பதில்:-   துஆவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை பொறுத்தவரையில், துஆவின்போது நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் மிக முக்கியமான ஒழுக்கமாக இருப்பதை நாங்கள் பார்க்க முடியும்.   ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் மீது ஸலவா கூறாமல் ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]   9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்:   வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6).   கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும்.   நபிகளார் வுழூ செய்த முறை ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :   முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).   நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.   தலைப்பாகை ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

  ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03     4) பற் துலக்குதல் :   பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :   1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02   ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :   1.நிய்யத் அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 01

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -01 சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).   தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் ... Read more

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை ... Read more

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு ... Read more

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ... Read more