சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்

கேள்வி:

நான் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ? சுன்னத் தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டுமா அல்லது சுன்னத் தொழுகையை பூர்த்தியாக்க வேண்டுமா ?

 

பதில்:

🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்.

 

▪️ (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

முஸ்லிம் :1281

 

▪️ எனவே இகாமத் கொடுக்கப்பட்ட பிறகு சுன்னத் தொழுகையை தொடங்க கூடாது என்பதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளனர்.

 

▪️ ஆனால் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது இகாமத் கொடுத்தால் அத்தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டும் என்று சில அறிஞர்களும், சுருக்கமாக அந்த சுன்னத் தொழுகையை தொழுதுவிட்டு இமாமுடன் ஜமாஅத்தில் சேர்ந்தால் போதும் என்றும் சில அறிஞர்களும் கூறியுள்ளனர்.

 

▪️ எப்படியானாலும் ஒருவர் சுன்னத் தொழுகையில் இறுதியில் இருக்கிறார் என்றால் அப்போது அவர் விரைவாக தொழுகையை முடிக்க வேண்டும்.ஆனால் சுன்னத் தொழுகையின் ஆரம்பத்தில் இருப்பாராயின் அத்தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டும்.

 

▪️ இந்த கருத்து தான் சரியானதாகும்.

 

🎙️ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் ஃபத்வாவிலிருந்து எடுக்கப்பட்டது…

 

📽️இதை அரபியில் கேட்க :

 

மொழிபெயர்ப்பு:  السلفي -கற்கைக்கூடம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply