அல்குர்ஆன்,ஸுன்னாஹ்வின் அறிவுறைகள் – மென்மையான அணுகுமுறை

மென்மையான அணுகுமுறைக்கு அல்லாஹ்வின் அருளுண்டு

அல்குர்ஆன்:

அல்லாஹ் தனது நபிமார்களான மூஸா, ஹாரூன் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவரையும்
மிகப்பெரும் பாவியான ஃபிர்அவ்னிடம் சென்று மென்மையான வார்த்தைகள் சொல்லி உபதேசிக்குமாறு கட்டளையிடுகின்றான்.

فَقُولَا لَهُۥ قَوۡلًا لَّيِّنًا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
(அல்குர்ஆன்: 20:44)

அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களிடத்திலே எடுத்த உறுதி மொழிகளில் ஒன்று:

وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًا
{மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்}
(அல்குர்ஆன்: 2:83)

நபிமொழிகள்:

صحيح مسلم 2594 عن عائشة زوج النبي صلى الله عليه وسلم، عن النبي صلى الله عليه وسلم قال : ” إن الرفق لا يكون في شيء إلا زانه، ولا ينزع من شيء إلا شانه “.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும். (முஸ்லிம் 2594)

صحيح مسلم 2592 عن جرير ، عن النبي ﷺ قال : ” من يحرم الرفق يحرم الخير “.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
(முஸ்லிம் 2592)

صحيح مسلم 2593 عن عائشة ، أن رسول الله ﷺ قال : ” يا عائشة، إن الله رفيق يحب الرفق، ويعطي على الرفق ما لا يعطي على العنف، وما لا يعطي على ما سواه “.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ஆஇஷஹ்! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்”
(முஸ்லிம் 2593)

عن عائشة أم المؤمنين رضي الله عنها عن النبي ﷺ: إذا أرادَ اللهُ عزَّ وجلَّ بأهْلِ بَيتٍ خَيرًا، أدخَلَ عليهم الرِّفقَ.
مسند أحمد (٢٤٤٢٧) وصححه الألباني، وشعيب الأرنؤوط، وغيرهما.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், ஒரு குடும்பத்தாருக்கு நலவை நாடிவிட்டால் மென்மையாக நடந்துகொள்ளும் தன்மையை அவர்களுக்கு மத்தியில் நுழைவிப்பான்.
(முஸ்னத் 24427)

இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

மனிதர்களுடன் மென்மையாக நடந்து கொள்வதையும் அவர்களுக்கு நல்லதையே விரும்புவதையும் விட உள்ளத்திற்கு பயனளிக்கக்கூடிய வேறு எதுவும் கிடையாது.
மற்றவருடன் மென்மையான அணுகு முறையை கடைபிடிக்கும் போது, அவன் நெருக்கமற்ற ஒருவனாக இருந்தால் அவனது அன்பையும் நேசத்தையும் சம்பாதித்துக் கொள்வாய்; அவன் நண்பனாக, நேசனாக இருந்தால் நட்பும், நேசமும் தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்துவிடுவாய்; அவன் உன்னை வெறுக்கின்ற ஒரு எதிரியாக இருந்தால் உனது மென்மையின் காரணமாக அவனது நெருப்பை அணைத்து, அவனது கெடுதியை விட்டும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.
– எவர் மனிதர்களின் செயல்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாரோ அவரது எண்ணம் ஈடேற்றம் அடைந்துவிடும்; அவரது நெஞ்சம் விரிவடையும்; அவரது உள்ளம் ஆரோக்கியமடையும்; அல்லாஹ் அவரை கெடுதிகளிலிருந்தும் வெறுக்கத்தக்க விடயங்களில் இருந்தும் பாதுகாத்து விடுவான்.

நூல்: مدارج السالكين (2/ 51)
يقول ابن القيّم – رحمه الله :
” فليس للقلب أنفع من معاملة الناس باللطف وحب الخير لهم؛
فإن معاملة الناس بذلك إما أجنبي فتكتسب مودّته ومحبته ، وإما صاحب وحبيب فتستديم صحبته ومودّته ، وإما عدوٌّ مبغض فتُطفئ بلطفك جمرته وتستكفي شره ،
ومن حمل الناس على المحامل الطيبة وأحسن الظنّ بهم سلمت نيته وانشرح صدره وعوفي قلبه وحفظه الله من السّوء والمكاره “.

– ஷெய்க் ஹுஸைன் இப்னு றபீக் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply