பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ?

கேள்வி:

பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ?

பதில்:

🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹ) கூறிகின்றார்கள்.

 

▪️ ஆம் அந்நேரத்தில் துஆ,இஸ்திஃபார் செய்வதே சிறந்ததாகும்.

 

▪️ காரணம் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ,இஸ்திஃபார் உறுதியானதும் மார்க்கமாக்கப்பட்டதும் ஆகும்.

 

▪️ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ இஸ்திஃபார் நிராகரிக்கப்படாது.எனவே இந்த நேரத்தில் குர்ஆன் ஓதுவதாக இருந்தால் இந்த சிறப்பு தவற விட வாய்ப்புள்ளது.

 

▪️ ஆனால் குர்ஆன் ஒதுவதை பொறுத்தவரை அது தவறி விடாது.

 

▪️ காரணம் குர் ஆனிற்கான நேரம் விசாலமானாதாகும்.வேறொரு நேரத்திலும் ஓதிக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பு: السلفي -கற்கைக்கூடம் Telegram Channel

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply