துல் ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்கலாமா?

கேள்வி:

துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ நோன்பு நோற்கவில்லை. அப்படியானால் அந்த நாட்களில் நாம் எப்படி நோன்பு வைப்பது ?

பதில்:
🎙️ ஷைய்ஃக் இப்னு உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்:

▪️துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கேட்டுள்ளீர்களா ?

▪️இப்போது எனது கேள்வி: நற்செயல்கள் என்பதில் நோன்பு அடங்குமா இல்லையா ?

▪️நற்செயல்கள் என்பதிலிருந்து நோன்பை விலக்கியது யார் ?

▪️துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள், நோன்பைத் தவிர மற்ற நற்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறினார்களா ?இல்லை.

▪️பிறகு, நற்செயல்கள் என்ற பொதுவான பிரயோகத்திலிருந்து நோன்பை விலக்கியது யார் ?

▪️ துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதாக நான் பார்த்ததில்லை என ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ் வந்துள்ளது.(முஸ்லிம்:1176)

▪️அதை ஆயிஷா பார்த்திருக்க மாட்டார்கள்.அவர்கள் அல்லாதவர்கள் பார்த்திருக்கலாம்.

▪️ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அந்த நோன்புகளை தவறியதில்லை என நபி (ஸல்) அவர்களின் சில மனைவிமார்களிடமிருந்து ஹதீஸ் வந்துள்ளது.

(அபு தாவூத்: 2437)

▪️இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹி) கூறிகின்றார்கள்; நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்ததாகவும்,செய்யவில்லை என்று ஒன்றுசேர்ந்து வந்தால் அந்த காரியத்தை செய்தார்கள் என்பதை முற்படுத்த வேண்டும்.

▪️அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் துல்-ஹிஜ்ஜாவின் முதல் நாட்களில் 10 நோன்பு நோற்கவில்லை என்று நாம் வைத்தாலும், நற்செயல்களில் என்ற பொதுவான பிரயோகத்தில் நோன்பு உள்ளடங்கும் அல்லவா ?

▪️காரணம் நபி (ஸல்) கூறியது: துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது. எனவே நோன்பு ஒரு நற்செயலாகும்.

▪️இந்த நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என்று நாம் கருதினாலும், அது நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

▪️ நபி (ஸல்) அவர்களுக்கு நோன்பை விட முக்கியமான வேறு காரியங்கள் இருந்திருக்கலாம்.

▪️ஏதேனும் ஒரு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நமக்கு ஆதாரம் கிடைத்தால் பிறகு ஸஹாபாக்கள் செய்தார்களா என்று நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

▪️காரணம் அப்படி ஒரு ஆதாரம் நமக்கு வந்திருக்கிறது என்றால் ஸஹாபாக்கள் செய்திருக்கிறார்கள் என்பது தான் அடிப்படை.

▪️ஸஹாபாக்கள் ஒரு காரியத்தை செய்தார்களா செய்யவில்லையா என்பது நமக்கு தெரியவில்லையனில் அது அவர்கள் செய்யவில்லை என்பதற்கு ஆதாரமாகாது.

▪️அவர்கள் அந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பதே அடிப்படை.

▪️அதுமட்டுமல்ல நபி (ஸல்) அவர்களிடமிருந்து வாய்மொழியாக ஒரு செய்தி வந்தும் ஸஹாபாக்கள் அதனை செய்யவில்லை என்று நாம் கருதினாலும்,இது சாத்தியமற்றதாகும்.

▪️அப்படி இருந்தாலும் நபி (ஸல்) ஹதீஸைப்பற்றியா அல்லது ஸஹாபாக்களை செயலை பற்றியா அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்பான் ?

▪️நிச்சயமாக நபி (ஸல்) ஹதீஸை (பின்பற்றுதலை) குறித்து கேட்பான்.

▪️நபி (ஸல்) அவர்களிடமிருந்து பொதுவான ஆதாரம் கிடைத்த பிறகும் ஸஹாபாக்கள் செய்தார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அல்லது, ஸஹாபாக்கள் செய்யவில்லை” என்று நாம் சொன்னால்,அது அல்லாஹ்விடத்தில் நியாயமான காரணமாக இருக்குமா ? ஒருபோதும் இல்லை.

▪️ துல்ஹிஜ்ஜாவின் ஒன்பது நாட்களிலும் நோன்பு நோற்பது குறித்து முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை சிலர் ஏற்படுத்துகின்றன.

▪️மேலும் அந்த நோன்புகள் ஸுன்னத் அல்ல என்று கூறுகிறார்கள். சுப்ஹானல்லாஹ்!

▪️அல்லாஹ் அவர்களை மறுமைநாளில் தண்டிப்பான் என்று நான் அஞ்சுகிறேன் !

▪️துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது என நபி (ஸல்) ஹதீஸிலிருந்து நோன்பு என்ற சிறப்பிற்குரிய செயலை எவ்வாறு இவர்கள் நீக்க முடியும்.

▪️நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலியை கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

(புகாரி: 7492)

▪️எனவே, இந்த ஒன்பது நாட்களிலும் நோன்பு இல்லை என்ற நிலைபாட்டை எதிர்க்க வேண்டும்.

▪️ துல்ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களில் நோன்பைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் நாம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்;

▪️ஒன்று: நோன்பு நற்செயலா ?

▪️இரண்டு: நற்செயல்கள் செய்ய சொல்லப்பட்ட அந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா ?

▪️அவர் சொல்வார்கள்: இல்லை. ஆம் என்று சொன்னால், அதற்கு ஆதாரம் கொண்டு வர வேண்டும்.

▪️அப்போது அவர்கள் நோன்பு நற்செயல் என்றும், நபிகள் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை என்றும் கூறினால், அதன்படி செயல்படுங்கள் என்று கூறுவோம்.

🎙️ஷைய்ஃக் உரையிலிருந்து எடுக்கப்பட்டது…

அரபியில் கேட்க :

 

மொழிபெயர்ப்பு : السلفي -கற்கைக்கூடம் Telegram

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply