இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?


கேள்வி:


இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்.

பதில்:


🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்.

▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார்.

▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும்.

▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.

ஸஹீஹ் புகாரி : 580.

▪️ எனவே ஒருவர் ஒரு ரகாஅத்திற்கு குறைவான அளவை அடைந்து கொண்டால் அந்த தொழுகை அவருக்கு கிடைக்காது என்பது இதிலிருந்து புரிகிறது.

▪️ அதுமட்டுமல்ல யாருக்காவது ஜுமுஆ தொழுகையில் ஒரு ரகாஅத் கிடைத்ததோ அவருக்கு ஜுமுஆ கிடைத்து விட்டது என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

▪️ அதாவது ஒரு ரகாஅத் அடைந்து கொண்டவர் மேலும் ஒரு ரகாஅத் தொழுதால் அவருக்கு ஜுமுஆ கிடைத்து விடும் என்று பொருள்.

📕இதை அரபியில் வாசிக்க :

https://shorturl.at/CERU2

🎙️ இமாம் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள்:

▪️ ஒரு ரகாஅத்தும் கிடைக்கா விட்டால் ஜுமுஆ கிடைக்காது.

▪️ ஒருவருக்கு ஜுமுஆ தொழுகையில் ஒரு ரகாஅத் கூட கிடைக்காவிட்டால் நான்கு ரகாஅத் லுஹர் தொழ வேண்டும்.

▪️காரணம் நபி (ஸல்) கூறினார்கள்: யார் ஜுமுஆ தொழுகையில் ஒரு ரகாஅத் அடைந்து கொண்டாரோ அவர் அதோடு ஒரு ரகாஅத் சேர்த்து கொள்ளட்டும் அவரின் தொழுகை பூர்த்தியாகி விட்டது.

▪️ மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.

(புகாரி -580)

எனவே, ஒருவர் ஜுமுஆ தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவுக்குப் பிறகு வந்தால் அதாவது கடைசி ஸுஜூது அல்லது அத்தஹியாத்தில் வந்தால் அவர் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழ வேண்டும்.அவரின் ஜுமுஆ செல்லுபடி ஆகாது

📕இதை அரபியில் வாசிக்க:
https://rb.gy/9cwud

மொழிபெயர்ப்பு :السلفي -கற்கைக்கூடம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply