விமானம், கார்‌, ரயில்‌, கப்பல்‌ ஆகியவற்றில் தொழுவது

ஒருவன்‌ விமானத்திலிருக்கும்‌ போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்‌? தொழுகையை அதன்‌ ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில்‌ வைத்துத்‌ தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன்‌ கடைசி நேரத்திற்குள்‌ விமானம்‌ நிலையத்தை அடைந்துவிடும்‌ என்றிருந்தால்‌ விமானம்‌ நிலையத்தை அடையும்‌ வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்‌: விமானத்திலிருக்கும்‌ ஒரு முஸ்லிமின்‌ கடமை என்னவெனில்‌ தொழுகை நேரம்‌ வந்துவிட்டால்‌ அவன்‌ தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்‌. நின்று தொழ முடிந்தால்‌- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும்‌ சுஜுதையும்‌ நிறைவேற்ற முடிந்‌ தால்‌ அவ்வாறு ... Read more

தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது

தொழும்போது தமக்கு முன்னால்‌ ஒரு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ அதிகமான சகோதரர்கள்‌ கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்‌. எந்த அளவுக்கெனில்‌ பள்ளியில்‌ இருக்கும்போது காலியான ஒரு தூண்‌ கூட அவர்களுக்குக்‌ கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும்‌ வரை காத்துக்‌ கொண்டிருக்‌கின்றனர்‌. தடூப்பு ஏற்படுத்திக்‌ கொண்டு தொழாதவர்‌களை ஆட்சேபிக்கவும்‌ செய்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ இவ்விஷயத்தில்‌ கவனக்குறைவாக இருக்கிறார்கள்‌. இதில்‌ எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்‌புக்குப்‌ பதிலாக கோடூ போட்டுக்‌ கொள்ளலாமா? இதற்கு ஏதேனும்‌ ஆதாரம்‌ உண்டா? ... Read more

இகாமத்/பாங்கு சொல்ல மறந்து விட்டால்

ஒருவன்‌ தனியாகவோ ஜமாஅத்துடன்‌ சேர்ந்தோ தொழும்போது இகாமத்‌ சொல்ல மறந்து விட்டால்‌ அத்தொழுகையில்‌ குறையேதும்‌ ஏற்படுமா? பதில்‌: தனியாகத்‌ தொழுபவர்‌ அல்லது ஜமாஅத்‌தாகத்‌ தொழுபவர்கள்‌ இகாமத்‌ சொல்லாமல்‌ தொழுதுவிட்டால்‌ அவர்களது தொழுகை நிறைவேறிவிடும்‌. ஆனால்‌ அவ்வாறு செய்தவர்கள்‌ அல்லாஹ்விடம்‌ தவ்பா செய்து கொள்ள வேண்டூம்‌. இவ்வாறே பாங்கு சொல்லாமல்‌ தொழுதாலும்‌ அவர்களது தொழுகை கூடிவிடும்‌. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்தும்‌ அனைவருக்கும்‌ பொதுவாக ஒருவராவது சொல்லிவிட வேண்டும்‌ எனும்‌ நிலையிலுள்ள கடமை (ஃபர்ளு கிஃபாயா) ஆகும்‌. இவ்விரண்டும்‌ தொழுகையின்‌ ... Read more

பெண்கள் பாங்கு சொல்லலாமா

ஊரில்‌ அல்லது வனாந்தரத்தில்‌ பெண்கள்‌ தனியாகவோ ஜமாஅத்தாகவோ தொழும்போது பாங்கு சொல்வதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதி உண்டா? பதில்‌: பெண்கள்‌ ஊரில்‌ இருந்தாலும்‌ சரி பயணத்‌ தில்‌ இருந்தாலும்‌ சரி அவர்களுக்கு பாங்கு, இகாமத்‌ மார்க்கமாக்கப்படவில்லை. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்‌தும்‌ ஆண்களுக்குரிய தனிப்பட்ட காரியங்களாகும்‌. இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள்‌ உள்ளன.   இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்

ரமழான் மாத நோன்பின் கழா இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா?

கேள்வி: ரமழான் மாத நோன்பின் கழா செய்ய வேண்டிய நிலை இருக்கும் ஒரு  மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? உங்களுக்கு மிக்க நன்றி பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். ரமழான் மாத கழா நோன்பை முடிக்கும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானதா என்பதை குறித்து மார்க சட்ட மேதைகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஹனஃபிகள், மாலிகிகள்,  ஷாஃபியிகள் ... Read more

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா? பதிலின் சுருக்கம்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும். பதில்: உள்ளடக்கம்: • ஷவ்வால் நோன்பு கடமையா? • ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஷவ்வால் நோன்பு கடமையா? ரமழானின் கடமையான நோன்பிற்குப் ... Read more

ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா?

கேள்வி : ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா? ஆம் என்றால், இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒருவர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தாலோ, அல்லது ஷவ்வால் மாத பிறையை தான் பார்த்து, அத்தகவலை காழியிடமோ அல்லது ஊர் மக்களிடமோ சொல்லும்போது அவர்கள் அவருடைய சாட்சியை ஏற்கவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது மக்களுடன் சேர்ந்து நோன்பு இருக்க வேண்டுமா? எனும் விடயத்தில் ... Read more

“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குஃப்ர் ஏற்படுத்துபவர்களுக்கான மறுப்பு

கேள்வி: புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை.தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பதில்: முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில் நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more

ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?.

கேள்வி: ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்னவென்றால், அந்த இரவுகளை தொழுகையிலும், திக்ருலும் கழிக்க வேண்டும் என்பதே. தர்மம் செய்வதை பொறுத்தவரை மற்ற நேரங்களில் தர்மம் செய்வதை விட ரமழானில் தர்மம் சிறந்தது,ஆனால் கடைசி பத்து நாட்களில் தர்மம் செய்வது (மற்ற ... Read more