இகாமத்தின் வாக்கியங்கள்

கேள்வி: நான் வங்காளதேசத்தை சார்ந்தவன், எங்கள் நாட்டில் பாங்கைப் போலவே இகாமத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு முறை கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான அரபு நாடுகளில் இகாமத்தின் வாக்கியங்கள் ஒருமுறை தான் கூறப்படுவதை காண்கிறான், இதற்கான ஸஹீஹான ஆதாரம் என்ன?

பதில்:

புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களிடமிருந்து இகாமத் பல முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வடிவம் (பதினோரு வாக்கியங்கள்):

 

1) அல்லாஹு அக்பர்; 2)அல்லாஹு அக்பர்; 3)அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ்; 4) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ;5) ஹய்ய அலஸ்ஸலாஹ்; 6) ஹய்ய அலல் ஃபலாஹ் ; 7)கத் காமதிஸ் ஸலாஹ் ; 8)கத் காமதிஸ் ஸலாஹ்; 9)அல்லாஹு அக்பர் ; 10)அல்லாஹு அக்பர்;11) லா இலாஹா இல்லல்லாஹ்

இந்த முறைக்கு ஆதாரம் பின் வரும் ஹதீஸ்:

தொழுகைக்கு மக்களை கொட்டடித்து ஒன்று கூட்ட கொட்டு ஒன்று தயாரிக்கும் படி அல்லாஹ்வின் தூதர் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) அவர்கள் உத்தரவிட்ட போது, நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் என்னிடம் (கனவில்) ஒருவர் தோன்றினார். அவர் தனது கையில் கொட்டை சுமந்து கொண்டிருந்தார். அல்லாஹ்வின் அடியாரே! இந்த கொட்டை (என்னிடம்) விற்கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இதை வாங்கி என்ன செய்யப் போகின்றாய் ! என்று கேட்டார். நான் அவரிடம் இதன் மூலம் (மக்களை) தொழுகைக்கு அழைக்கப் போகின்றேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இதை விட சிறந்ததை காட்டித் தரவா? என்றார். நான் ஆம் என்று சொன்னேன். உடனே அவர், அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹு – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் -லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வாயாக! என்று சொன்னார்.

பிறகு கொஞ்ச தூரம் தள்ளி சென்று, நீ தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – கத்காமதிஸ்ஸலா (தொழுகை துவங்கிவிட்டது) – கத்காமதிஸ்ஸலா – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வீராக! என்று சொன்னார். காலையில் எழுந்ததும் அல்லாஹ்வின் தூதர் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) அவர்களிடம் வந்து நான் கனவில் கண்டதை தெரிவித்தேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் நாடினால் நிச்சயமாக இது உண்மையான கனவேயாகும். பிலாலுடன் எழுந்து நின்று, நீ கண்டதை அப்படியே பிலாலிடம் சொல்லி விடு! அவர் அதன்படி அதான் எழுப்புவார். நிச்சயமாக அவர் உன்னை விட உரத்த குரலுள்ளவர் என்று சொன்னார்கள். நான் பிலாலுடன் எழுந்து நின்று நான் அதை சொல்லிக் கொடுத்தேன். அவர் அதன்படி அதான் சொன்னார். உமர் பின் கத்தாப் தனது வீட்டிலிருந்து செவியுற்றதும் தனது ஆடையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.  அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தை கொண்டு உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக! அவர் கண்டது போன்று நானும் கனவில் கண்டேன் என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) அவர்கள் அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று சொன்னார்கள் என அப்துல்லாஹ் பின் ஜைத் (رضي الله عنه) அறிவிக்கின்றார்.

முஸ்னத் அஹ்மத் (15881), அபூ தாவூத் (499), இமாம் அல் அல்பானி இதை ஸஹீஹான ஹதீஸ் என்று கூறுகிறார்

இமாம் மாலிக், இமாம் அஷ் ஷாபி’இ, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஆகியோர் உட்பட பெரும்பாலான அறிஞர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்தனர். ஆனால் இமாம் மாலிக் ‘கத் காமதிஸ் ஸலாத்’ எனும் வாக்கியம் ஒரு முறை தான் கூறப்படவேண்டும் என்று கருதினார்.

இரண்டாவது வடிவம் பதினேழு வாக்கியங்களை கொண்டது:

 

1) அல்லாஹு அக்பர்; 2) அல்லாஹு அக்பர்; 3) அல்லாஹு அக்பர்; 4) அல்லாஹு அக்பர்; 5) அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ்; 6) அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ்; 7) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ; 8) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்; 9) ஹய்ய அலஸ்ஸலாஹ்; 10) ஹய்ய அலஸ்ஸலாஹ்; 11) ஹய்ய அலல் ஃபலாஹ் ; 12) ஹய்ய அலல் ஃபலாஹ் ; 13) கத் காமதிஸ் ஸலாஹ் ; 14)கத் காமதிஸ் ஸலாஹ்; 15) அல்லாஹு அக்பர் ; 16) அல்லாஹு அக்பர்;17)  லா இலாஹா இல்லல்லாஹ்

இந்த முறைக்கு ஆதாரம் பின் வரும் ஹதீஸ்:

அல்லாஹ்வின் தூதர் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் தனக்கு அதானை 19 சொற்றொடர்கள் கொண்டதாகவும், இகாமத்தை 17 சொற்றொடர்களை கொண்டதாகவும் கற்றுத் தந்தார்கள் என அபூமஹ்தூரா (رضي الله عنه) அறிவிக்கின்றார். அதன் விபரம் வருமாறு :
1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3 அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 10. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 11. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 12. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 13. ஹய்ய அலஸ் ஸலாஹ் 14. ஹய்ய அலஸ் ஸலாஹ் 15. ஹய்ய அலல் ஃபலாஹ் 16. ஹய்ய அலல் ஃபலாஹ் 17. அல்லாஹு அக்பர் 18. அல்லாஹு அக்பர் 19. லாயிலாஹ இல்லல்லாஹு
இகாமத்தின் விபரம் வருமாறு :
1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3. அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. ஹய்ய அலஸ்ஸலாஹ் 10. ஹய்ய அலஸ்ஸலாஹ் 11. ஹய்ய அலல் ஃபலாஹ் 12. ஹய்ய அலல் ஃபலாஹ் 13. கத்காமத்திஸ் ஸலாஹ்  14. கத் காமத்திஸ் ஸலாஹ் 15. அல்லாஹு அக்பர் 16. அல்லாஹு அக்பர் 17. லாயிலாஹ இல்லல்லாஹு

ஸுனான் அபூ தாவூத் (502), அல் திர்மிதீ (192), அன் நஸாயீ (632),  இப்னு மாஜா (709), இமாம் அல் அல்பானி இதை ஸஹீஹான ஹதீஸ் என்று கூறுகிறார்.

இமாம் இப்னு பாஸ் رحمه الله அவர்கள், பாங்கின் வசனங்களின் அதே எண்ணிக்கையை கொண்டே இகாமத்தும் கூறுவதற்கு அனுமதி உள்ளதா என்று கேட்கப்பட்டார்கள்.

அதற்கு அவா்:

அது அனுமதிக்கப்பட்டதாகும், இன்னும் சொன்னால் அது பாங்கின் சுண்ணத்துகளில் ஒன்று, ஏனென்றால் அது அபூ ஹுறைரா அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளது. நபி صلى الله عليه وسلم அவர்கள அவருக்கு மக்கா வெற்றியின் போது, மஸ்ஜிதுல் ஹராமில், பாங்கையும் இகாமத்தையும் கற்றுக்கொடுத்தார்கள்.

மேலும் அல்லாஹு அக்பர், கத் காமதிஸ் ஸலாத் ஆகிய இரு வாசகங்கள் தவிர்த்து ஏனைய இகாமத்தின் வாசகங்களை ஒரே ஒரு முறை மட்டும் கூறுவதும் அனுமதிக்கப்பட்டதாகும், இவ்வாறு தான் பிலால் رضي الله عنه அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில், நபி صلى الله عليه وسلم அவா்களின் முன்னிலையிலும், அவா்களின் படிப்பினையிலும், செய்தார்கள்.
அனஸ் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:
பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (رضي الله عنه) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

(ஸஹீஹ் அல்-புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

(மஜ்மூ அல்ஃபதாவா வ மகாலாத் அல்-முதனவ்விஆ 10/366)

ஆனால் பல வழிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இபாதத்துகளை பொறுத்தவரை, முஸ்லிம்கள் ஒன்றை மட்டும் செய்துவிட்டு மற்றவற்றை விட்டுவிடுவது சிறந்தது அல்ல. நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து முறைகளையும் செய்வதுவே சுன்னத், சில நேரம் பிலாலின் رضي الله عنه இகாமத்தையும், சில நேரம் அபூ மஹ்தூராவின் رضي الله عنه இகாமத்தையும் கூறலாம்.

ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمه الله கூறுகிறார்கள்:
(இது போன்ற விடயங்களில்) அஹ்லுல் ஹதீஸ் மக்கள் மற்றும் அவர்களின் கருத்தோடு ஒத்திருக்கும் மக்களின் கருத்தே சரியான கருத்தாகும். அதாவது நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்வதும் அதில் எதையும் வெறுக்காததும். ஏனென்றால் பாங்கிலும் இகாமத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள வேறுபாடுகள், கிராஅத், தஷஹ்ஹுத் போன்றவற்றில் அறிவிக்கப்பட்டுள்ள வேறுபாடுகள் போன்றவையே. நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த உம்மத்திற்கு காட்டியுள்ள வழிமுறைகளில் எதையும் வெறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை….

இது போன்ற விடயங்களில் சுன்னாஹ்வை முழுமையாக பின்பற்ற, ஒருவர் ஒரு முறையை சில நேரங்களிலும், இடங்களிலும் இன்னொரு முறையை சில நேரங்களிலும், இடங்களிலும் செய்ய வேண்டும், ஏனென்றால் சுன்னத்தான ஒரு விடயத்தை விட்டு விட்டு மற்றோரார் விடயத்தை தொடர்ந்து செய்வதனால், சுன்னத்தான ஒரு விடயம் பித்அத்தாகவும், விரும்பத்தக்க ஒரு விடயம் கடமையாகவும் பார்க்கப்படும் நிலை எழுகிறது, இதனால் ஒரு சாரார் இன்னொரு முறையை பின்பற்றும் போது பிரிவுகளும் சச்சரவுகளும் ஏற்படுகிறது.

[ஃபதாவா அல் குப்ரா 2/43-44]

 

https://islamqa.info/ar/answers/10458/%D8%B5%D9%8A%D8%BA%D8%A9-%D8%A7%D9%84%D8%A7%D9%82%D8%A7%D9%85%D8%A9

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply