தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது

தொழும்போது தமக்கு முன்னால்‌ ஒரு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ அதிகமான சகோதரர்கள்‌ கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்‌. எந்த அளவுக்கெனில்‌ பள்ளியில்‌ இருக்கும்போது காலியான ஒரு தூண்‌ கூட அவர்களுக்குக்‌ கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும்‌ வரை காத்துக்‌ கொண்டிருக்‌கின்றனர்‌. தடூப்பு ஏற்படுத்திக்‌ கொண்டு தொழாதவர்‌களை ஆட்சேபிக்கவும்‌ செய்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ இவ்விஷயத்தில்‌ கவனக்குறைவாக இருக்கிறார்கள்‌. இதில்‌ எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்‌புக்குப்‌ பதிலாக கோடூ போட்டுக்‌ கொள்ளலாமா? இதற்கு ஏதேனும்‌ ஆதாரம்‌ உண்டா?

பதில்‌: தடுப்பு வைத்துக்‌ கொண்டு தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்‌. கடமையானதலல. நட்டிவைத்துக்‌ கொண்டு தொழுவதற்கு ஏதும்‌ கிடைக்கவில்லையெனில்‌ கோடூ கிழித்துக்‌ கொண்டால்‌ போதுமானதே. இதற்கான ஆதாரங்கள்‌ வருமாறு:

“உங்களில்‌ ஒருவர்‌ தொழும்‌ போது தடுப்பு வைத்துக்‌கொண்டு தொழட்டும்‌. அதை நெருங்கி நின்று கொள்‌ளட்டும்‌” என நபி(صلى الله عليه وسلم)அவர்கள்‌ கூறினார்கள்‌. (அபூதாவூத்‌ 697, இப்னுமாஜா 954)
“ஓரு முஸ்லிம்‌ தனக்கு முன்னால்‌ ஒரு தார்க்குச்சி, போன்று எதையும்‌ வைத்துக்‌ கொள்ளாமல்‌ தொழும்‌போது (அவரது முன்னால்‌) பெண்‌, கழுதை, கருப்பு நாய்‌ ஆகியவை (கடந்து சென்றால்‌) அவரது தொழுகையை முறித்துவிடும்‌” என நபி(صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறினார்கள்‌.
(இப்னுமாஜா 952), இதே கருத்து முஸ்லிமிலும்‌ (510, 511) இடம்பெற்றுள்ளது.

உங்களில்‌ ஒருவர்‌ தொழும்போது தனக்கு முன்னால்‌ ஏதேனும்‌ ஒரு பொருளை (தடுப்பை) வைத்துக்‌ கொள்ளட்டும்‌, எதுவும்‌ கிடைக்கவில்லையெனில்‌ ஒரு குச்சியை நட்டி வைத்துக்‌ கொள்ளட்டும்‌, அதுவும்‌ கிடைக்கவில்லையெனில்‌ ஒரு கோடூ கிழித்துக்‌ கொள்ளட்டும்‌, பின்னர்‌ அவனுக்கு முன்னால்‌ நடந்து செல்பவர்களால்‌ அவனுக்கு எவ்வித இடைஞ்சலும்‌ கிடையாது என நபி(صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறினார்கள்‌. (அஹ்மத்‌ 7087, இப்னு
மாஜா 943, அபூதாவூத்‌ 689) இதன்‌ அறிவிப்புத்‌ தொடர்‌ ஹஸன்‌ என்ற தரத்தில்‌ உள்ளதாகும்‌.) இதனை ஹாபிழ்‌ இப்னு ஹஜர்‌ அவர்கள்‌ புலூகுல்‌ மராம்‌ எனும்‌: நூலில்‌ கூறிப்பிட்டுள்ளார்கள்‌.

மேலும்‌ நபி(صلى الله عليه وسلم)அவர்கள்‌ சில நேரங்களில்‌ தடுப்பு இல்லாமலும்‌ தொழுதுள்ளார்கள்‌ என ஹதீஸ்களில்‌ நிரூபணமாகியுள்ளது. இது தடுப்பு கடமையானதல்ல என்பதையே காட்டுகிறது. மேலும்‌ தடூப்பு வைத்துக்‌கொண்டு தொழ வேண்டூமென்பதிலிருந்து மஸ்ஜிதுல்‌ ஹராம்‌ விதிவிலக்குப்‌ பெறுகிறது. அங்கு தொழுபவர்‌ தடுப்பு வைத்துக்‌ கொள்ளத்‌ தேவையில்லை. ஏனெனில்‌ இப்னு ஸுபைர்‌ (رضي الله عنه ) அவர்கள்‌ மஸ்ஜிதுல்‌ ஹராமில்‌ தடுப்பு இன்றி தொழுதுள்ளார்கள்‌. அப்போது தவாஃப்‌ செய்பவர்கள்‌ அவர்களுக்கு முன்னால்‌ தவாஃப்‌ செய்து கொண்டிருந்திருந்தர்கள்‌ என ஹதீஸில்‌ வந்துள்ளது.

மேலும்‌ நபி(صلى الله عليه وسلم)அவர்கள்‌ மூலமாகவும்‌ இதற்கு சான்று உள்ளது. ஆயினும்‌ பலவீனமான அறிவிப்பாளர்‌ தொடரூடன்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டுமல்ல மஸ்ஜிதுல்‌ ஹராம்‌ பெரும்பாலும்‌ மக்கள்‌ நெருக்கடிக்குரிய இடமாகவும்‌ தொழுபவரின்‌ குறுக்கே செல்வதைத்‌ தவிர்க்க முடியாத இடமாகவும்‌ கருதப்படுகிறது. ஆதலால்‌ அங்கு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ கடமை நீங்கிவிடுகிறது. நெருக்கடியான நேரங்களில்‌ மஸ்ஜிதுந்‌ நபவீக்கும்‌ மக்கள்‌ நெருக்கடி நிறைந்த ஏனைய இடங்களுக்கும்‌ இதே சட்டம்தான்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ

உங்களால்‌ இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்‌. (64:16)

நபி(صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறினார்கள்‌:
நான்‌ உங்களுக்கு ஒன்றைக்‌ கட்டளையிட்டால்‌ அதனை முடிந்த அளவு செயல்படுத்தங்கள்‌. (புகாரி 7288, முஸ்லிம்‌1337) அல்லாஹ்‌ மிக அறிந்தவன்‌!

இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply