மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?

கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா? பதில்: புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன். கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் ... Read more

ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ சாலி, நயீம் இப்னு அப்துல் வதூத்._﷽______ கேள்வி: ஒரு சகோதரியின் கேள்வி….. எனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு எண்ணுடைய தாய் ஏற்பாடு செய்கிறார். நான் விருப்பம் தெரிவிக்காததினால்.அவர் இரவும் பகலுமாக அழுகிறார் நான் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் ஸாலிஹ் அல்- ஃபவ்ஜான் (ஹ) கூறிகின்றார்கள். திருமணம் உங்களுடைய உரிமையாகும். தீனிலும், குணத்திலும் உங்களுக்கு விருப்பமுள்ளவரை திருமணம் செய்வது தான் சிறந்தது. உங்களுடைய தாய் விருப்பபடுகின்றவர்களை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. ... Read more

பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?

கேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். பெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, முறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ... Read more

திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது

திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ, அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி, நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும்: நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ, அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து, அல்லாஹ்வின் பெயரை கூறி, ... Read more

மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது.

தாம்பத்ய உறவை துவங்குகையில் மனைவியிடம் மென்மையாக நடந்துகொள்வது விரும்பத்தக்கது. உதாரணமாக  அவளுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுப்பது. இதை அஸ்மா பின்த் யஸீத் இப்னஸ்ஸகன் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் காணலாம். அவர் அறிவிக்கிறார்: நான் ஆயிஷா رضي الله عنه அவர்களை அல்லாஹ்வின் தூதருக்காக صلى الله عليه وسلم அழங்கரித்தேன், பின்னர் அவரிடம் சென்று ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்காக அழைத்தேன்.  அவர் ஆயிஷாவின் அருகில் அமர்ந்து, ஒரு பெரிய கோப்பையில் பாலை எடுத்த வந்து ... Read more

மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனைப் ஓதலாமா ? இஸ்லாமிய அறிஞர்கள்(رحمهم الله) மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று. ஃபிக்ஹ் அறிஞர்கள் பெரும்பாலோர் மாதவிடாய் பெண்கள் தூய்மை அடையும் முன்னர் குர்ஆன் ஓதுவது ஹராம் என்றே கருதுகின்றனர். திக்ரிலும், துஆவிலும், குர்ஆன் ஓதும் எண்ணத்தில் அல்லாமல் குர்ஆனின் சில வசனங்களை மட்டும் ஓதுவதையும் தவிர. உதாரணமாக “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” அல்லது ‘இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் ‘ போன்ற வார்த்தைகளை கூறுவது அனுமதிக்கப்பட்டது . ... Read more

மாதவிடாய் பெண்கள், லைலதுல் கத்ர் இரவு அன்று எவ்வாறு இறைவனை வணங்குவது? இமாம் அல் அல்பானி

அல்பானியின் மகள் சுகைனா கூறினார்கள், “நான் என் தந்தையிடம் ஷரியத்தில் விலக்கல் கொடுக்கப்பட்ட ஒருவர் லைலத்துல் கத்ர் இரவன்று இறைவனை எவ்வாறு வணங்குவது என்று கேட்டேன்” அவர் பதில் அளித்தார்: ‘துஆ செய்வதன் மூலமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமும், குர்ஆன் ஓதுவதின் மூலமும். மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது வெறுக்க தக்கது அல்ல என்பதை நீ நன்று அறிகிறாய் என்று எண்ணுகிறேன். இது ஒரு வழி.’ [பார்க்க …] ‘மற்றும் ஒரு வழி, இது போன்ற ... Read more

மஹ்ரமான உறவை ஏற்படுத்தும் என்னத்தில் பாலூட்டுவது

111404: الإرضاع بقصد حصول المحرمية கேள்வி: என் மனைவியும் அவளின் சகோதரியும் கர்பமாக உள்ளனர், அவளின் சகோதரிக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று தெரிகிறது. எனக்கு ஆன் குழந்தை பிறந்தால், குழந்தைகளுக்கு மத்தியில் மஹ்ரமான உறவை ஏற்படுத்தும் பொருட்டு, என் மனைவியும் அவரின் சகோதரியும், ஒருவர் மற்றவரின் குழந்தைக்கு பாலூட்ட நிய்யத் வைத்துள்ளனர். இதன் சட்டம் என்ன ? السؤال:امرأتي حامل هي وأختها (التي تبين لها أن الجنين أنثى) وينويان إرضاع هذه البنت وولدي ... Read more