மாதவிடாய் பெண்கள், லைலத்துல் கத்ர் இரவு அன்று எவ்வாறு இறைவனை வணங்குவது? இமாம் அல் அல்பானி

அல்பானியின் மகள் சுகைனா கூறினார்கள், “நான் என் தந்தையிடம் ஷரியத்தில் விலக்கல் கொடுக்கப்பட்ட ஒருவர் லைலத்துல் கத்ர் இரவன்று இறைவனை எவ்வாறு வணங்குவது என்று கேட்டேன்”

அவர் பதில் அளித்தார்: ‘துஆ செய்வதன் மூலமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமும், குர்ஆன் ஓதுவதின் மூலமும். மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது வெறுக்க தக்கது அல்ல என்பதை நீ நன்று அறிகிறாய் என்று எண்ணுகிறேன். இது ஒரு வழி.’ [பார்க்க …]

‘மற்றும் ஒரு வழி, இது போன்ற தருணங்களில் ஒரு முஸ்லீம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் தூதரின்  عليه السلام வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும், அவர் கூறினார்: ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களைக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள் 1)முதுமைக்கு முன்பு உங்கள் இளமை, 2) நோயிற்கு முன்பு ஆரோக்கியம்….’ [ஸஹீஹ் அல்தர்கீப் வ அல்தர்ஹீப் ].

ஏன் இவ்வாறு கூறினார்கள், ஏனென்றால் ஸஹீஹ் அல்புகாரியில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை பாருங்கள், “ஒரு அடியான் நோய்யவாய்ப்பட்டாலோ அல்லது பயணத்தில் இருந்தாலோ, அவனுக்கு அல்லாஹ் அந்த அடியான் ஊரில் இருக்கும்போதும், உடல் நலத்தோடு இருக்கும் போதும் செய்த இபாதத்தின் நன்மைகளை எழுதி வைப்பான்”

ஆகையால், ஒரு பெண் தான் தூயமையாக இருக்கும் நிலையில் அதை பயன் படுத்தி நின்று வணங்க வேண்டும், இறுதி பத்து இரவுகளில் நின்று வணங்க வேண்டும் , அது முடியாவிட்டால் ஒற்றை படை இரவுகளில், அதுவும் முடியாவிட்டால், இருபத்தி ஏழாம் இரவில்.

ஏனென்றால், கண்ணியம் பொருந்திய அல்லாஹ், தன் பெண் அடிமை தன்னால் இயன்ற பொழுது வணங்குகிறாள் என்பதை கண்டால், அவளால் வணங்க முடியாத நாட்களிலும் அதே நன்மைகளை எழுதுகிறான்.

இது முக்கியமான விஷயம். இதானால் ஒரு முஸ்லிம் எப்பொழுதும் தன்னால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்க வேண்டும். அவனின் இபாதத்துகள் அதிகரித்து, பின்னர் நோயாலோ அல்லது பயனத்தாலோ, அதை செய்ய முடியாத பொழுதும் அவனுக்கு அதே நன்மைகள் எழுதப்படும்.

Help us translate
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

TelegramWatsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
%d bloggers like this: