பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?

கேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?

பதில்:
புகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும்.

பெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து,
முறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ஸலாம் கூறினர், அவர்கள் ஸலாம் கூறினால் பதில் அளிக்கவும் செய்தனர். இவற்றை முஸ்லிம்களின் இமாம்களில் யாரொருவரும் தவரெண்டு கருதவில்லை, ஆனால் பெண்கள் அந்நிய ஆண்களிடம் நளினமாகவும், கவரும் வண்ணமும் பேசக்கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்:

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
[33:32]

ஏனென்றால், அவ்வாறு பேசினால், இந்த ஆயத்தில் கூறப்படுவது போல், ஆண்கள் கவரப்பட்டு சோதனைகள் (ஃபித்னாக்கள்) எழலாம். அல்லாஹ்வே வெற்றி தருபவன்.

மூலம்: ஃபாதாவா அல் லஜனத் அத்தாயிமா

மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply