திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது

திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ, அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி, நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும்:

நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ, அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து, அல்லாஹ்வின் பெயரை கூறி, பரகத் கேட்கட்டும், அவர் கூறட்டும்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வா கைரமா ஜபல்தஹா அலைஹி அஊதுபிக மின் ஷர்ரிஹா மின் ஷர்ரி மா ஜபல்தஹா அலைஹி

யா அல்லாஹ் உன்னிடத்தில் நான் அவளிடத்தில் உள்ள நன்மைகளையும், அவளை நீ எந்த நன்மைகளுடன் படைத்தாயோ அந்த நன்மைகளையும் கேட்கிறேன்

மேலும் உன்னிடத்தில் நான் அவளின் தீங்குகளை விட்டும், அவளை நீ எந்த தீங்குகளை கொண்டு படைத்தாயோ அந்த தீங்குகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்

ஒருவர் ஒட்டகம் வாங்கினால் அதன் திமிலை பிடித்து அவ்வாறே கூறட்டும்.

[அபூ தாவூத், இப்னு மாஜா, அல்ஹாகிம், பைஹகீ, அபூ லா ஆகியோர் ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கின்றனர், ஹாகிம் இதை ஸஹீஹ் என்று கூறினார், தஹபியும் அவ்வாறே கூறினார், அல்இராகி இதை வலுவான ஸனத் என்றார் ]

– இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

TelegramWatsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
%d bloggers like this: