சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது ... Read more

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம். இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் ... Read more

ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா?

கேள்வி:ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா? பதில்:அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இது விடயத்தில் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகளில் தொழுவதே மிகச் சிறந்தாகும் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தினத்தில் இரண்டு பாங்கு சொல்லுதல், இதுபோன்ற சுன்னாவுக்கு முரணான செயல்கள் நடைபெறக்கூடிய அல்லது இறை நிராகரிப்பை ஏற்படுத்தாத பித்அத் நடைபெறக்கூடிய பள்ளியில் தொழுவது கட்டாயமாகும். ஏனெனில் ... Read more

ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன?

கேள்வி : ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… சுருக்கமான பதில்: ஷரீஆ என்றால் மார்க்கம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல். ஃபிக்ஹ் என்ற வார்த்தை விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு ... Read more

மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா?

بسم الله الرحمن الرحيم கேள்வி: மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா? பதில்: (அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…) அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மண்ணறைகளின் மீது மரம், புற்கள் முளைப்பது அதில் இருப்பவர் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக அது பிழையான எண்ணமாகும். மரங்கள் நல்லவர்களின் மண்ணறைகளின் மீதும் தீயவர்களின் மண்ணறைகளின் மீதும் முளைக்கின்றன. ... Read more

இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

கேள்வி: இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு ... Read more

ஒரு பித்அத்தைச் செய்யக்கூடியவர் பித்அத்வாதியாக கருதப்படுவாரா…?இது தொடர்பான அளவுகோல் என்ன…?

கேள்வி : ஒரு பித்அத்தைச் செய்யக்கூடியவர் பித்அத்வாதியாக கருதப்படுவாரா?இது தொடர்பான அளவுகோல் என்ன? ஷெய்க் முக்பில் பின் ஹாதி அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்) பதில் கூறுவதாவது : “இது தொடர்பாக நாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பேசியுள்ளோம், இவ்விடயத்தின் அளவுகோல் என்னவெனில், பித்அத்தை செய்யும் ஒருவர் “பித்அத்வாதி (புதுமைக்காரர்)”தான்? இது போதுமானதா இல்லையா? ஆமாம்! இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில், மீலாத் விழா கொண்டாட்டம், ரஜப் மாதத்தின் 27-ம் நாள் கொண்டாட்டம், ஹிஜ்ரத் கொண்டாட்டம், ஷாபானின் ... Read more

உழ்ஹிய்யா (குர்பானி) கொடுப்பவரின் குடும்பத்தினர் நகங்கள், முடியை நீக்கலாமா

கேள்வி ; துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகிவிட்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு (அகற்றவேண்டிய) முடிகள் மற்றும் நகங்களை நீக்க அனுமதி உள்ளதா…? பதில் ; ஆம், அனுமதி உள்ளது, துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் உழ்ஹிய்யா கொடுப்பவரின் குடும்பத்தாருக்கு (அகற்றவேண்டிய) முடிகளை களைதல், நகங்களை வெட்டுதல் போன்றன அனுமதிக்கப்பட்டவையாகும். (இதற்க்கு முன் உழ்ஹிய்யா கொடுப்பவர் பற்றிய கேள்விக்கு பதில் வழங்கியதில்,) உள்ஹிய்யா கொடுப்பவருக்கு முடிகள் நகங்கள் மற்றும் உடலில் உள்ள எந்த ... Read more

சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு ... Read more

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?

கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் ... Read more