சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா?

பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார்.

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969)

அப்படி ஒரு மனிதன் தடுத்துக்கொண்டவனாக தொழுவான் என்றிருந்தால் நிச்சயமாக அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டான்.

இன்னும் சில அறிஞர்கள் கூறுகின்றனர் இந்த நிலைப்பாட்டில் தொழுகை (ஏற்றுக்கொள்ளப்படாது) கிடையாது.

எனவே, அவன் தனது இயற்கை கடனை (சிறுநீர், மலம்) நிறைவுசெய்வது கடமையாகின்றது. பின்னர் தண்ணீரை பெற்றுக்கொண்டு அதனை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில் சக்தியுடையவனாக இருந்தால் அவன் வுழூ செய்து கொள்ளட்டும்.

(மேலும்) தண்ணீரை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லது தண்ணீரை பயன்படுத்துவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால் தயம்மம் செய்யும் வாய்ப்புக்களும் உள்ளன. –அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்-

சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கியவனாக வுழூவுடன் தொழுவதைவிட; சிறுநீர் மற்றும் மலத்தை அடக்காதவனாக தயம்மம் செய்து கொண்டு தொழும் தொழுகை மிகவும் சிறந்தது.

எனவே, எவன் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கியவனாக தொழ எத்தனித்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்றை நினைவுபடுத்திக்கொள்ளட்டும்.
“உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969)

இக்கூற்றை எவன் நினைபடுத்திக்கொள்கின்றானோ நிச்சயமாக அவன் ஒருபோதும் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கியவனாக தொழச் செல்லமாட்டான்.

பதிலளிப்பவர் : அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

Help us translate
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

TelegramWatsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
%d bloggers like this: