உழ்ஹிய்யா (குர்பானி) கொடுப்பவரின் குடும்பத்தினர் நகங்கள், முடியை நீக்கலாமா

கேள்வி ;
துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகிவிட்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு (அகற்றவேண்டிய) முடிகள் மற்றும் நகங்களை நீக்க அனுமதி உள்ளதா…?

பதில் ;

ஆம், அனுமதி உள்ளது, துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் உழ்ஹிய்யா கொடுப்பவரின் குடும்பத்தாருக்கு (அகற்றவேண்டிய) முடிகளை களைதல், நகங்களை வெட்டுதல் போன்றன அனுமதிக்கப்பட்டவையாகும்.

(இதற்க்கு முன் உழ்ஹிய்யா கொடுப்பவர் பற்றிய கேள்விக்கு பதில் வழங்கியதில்,) உள்ஹிய்யா கொடுப்பவருக்கு முடிகள் நகங்கள் மற்றும் உடலில் உள்ள எந்த ஒன்றையும் நீக்குவது தடை செய்யப்பட்டது. இச்சட்டம் உழ்ஹிய்யா கொடுப்பவருக்கே உரித்தான சட்டமாகும் என்று விவரிக்கப்பட்டது.

ஷெய்ஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (இது பற்றி) கூறியதாவது ;

உழ்ஹிய்யா கொடுப்பவரின் குடும்பத்தாரைப் பொருத்தவரை அவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது, அறிஞர்களின் இரு வேறுபட்ட கருத்துகளில் மிக ஏற்றமான கருத்து யாதெனில், அந்த குடும்பத்தாருக்கு முடிகளை களைதல் நகங்களை வெட்டுதல் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்படவில்லை என்பதே.., அத்தோடு குறித்த இந்த சட்டம் உழ்ஹிய்யா கொடுப்பவருக்கானது குறிப்பாக உழ்ஹிய்யாவை தன் சொந்த பணத்தில் வாங்கியவருக்குறியதாகும்.

(ஃபாதாவா இஸ்லாமிய்யா : 2/316)

உழ்ஹிய்யா கொடுக்கும் நபர், துல் ஹஜ் மாதத்தை அடைந்தால் அவர் உள்ஹிய்யா கொடுக்கும் வரை தனது முடிகள், நகங்கள் மற்றும் உடலில் உள்ள எந்த ஒன்றையும் நீக்குவது மார்க்கம் தடை செய்துள்ளது.
அதற்கு ஆதாரமாக புஹாரியைத் தவிர்த்து ஏனைய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்ற உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்த செய்தியை எடுக்கலாம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள் ” உங்களிள் யாரேனும் உழ்ஹிய்யா கொடுப்பவராக இருந்து, துல் ஹஜ் மாதப் பிறையைக் கண்டால் அவர் தனது முடிகள் மற்றும் நகங்களை உழ்ஹிய்யா கொடுக்கும் வரை விட்டு விடட்டும்.”

அபூ தாவுத் (2791) மற்றும் முஸ்லிம் (1977) நூல்களில் இடம் பெற்ற வாசகமும் பின்வருமாறு

“யாரிடம் அவர் அறுக்கும் (உழ்ஹிய்யா) அறுவை பிராணி இருந்து துல் ஹஜ் மாதப் பிறையையும் அடைகிறாரோ அவர் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை தனது முடிகள் மற்றும் நகங்களிலிருந்து எந்த ஒன்றையும் நீக்க வேண்டாம்.”

அதாவது அவர் அறுவையை பொறுப்பேற்று செய்தாலோ அல்லது பிறருக்கு பொறுப்பினை ஒப்படைத்தாலோ (அவர் உடலில் எந்த ஒன்றையும் நீக்க முடியாது) ஆனால் யார் யாருக்காக (குடும்பத்தில்) உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறதோ, அவர்களுக்கு இது தடை கிடையாது. காரணம், இது தொடர்பாக எந்த செய்தியும் இடம்பெறவில்லை.

லஜ்னா தாஇமா பத்வா தொகுப்பு (11/397)

ஷெய்க் இப்னுல் உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (இது தொடர்பாக) கூறியதாவது:

யார் யாருக்காக (குடும்பங்களில்) உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறதோ அவர்கள் அவை(முடிகள் மற்றும் நகங்க)ளை நீக்க அனுமதி உள்ளது.

அதற்கு ஆதாரமாக பின்வரும் அம்சங்களை குறிப்பிடலாம் :

01.இவைகளுக்கு அனுமதி உள்ளது என்பதே ஹதீஸின் விளக்கமாகும், தடை என்பது உழ்ஹிய்யா கொடுப்பவருக்கே தவிர கொடுக்கப்படுபவர்களுக்கு அல்ல, அந்தவகையில் குடும்பத் தலைவருக்கான பிரத்தியோக சட்டமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கானது கிடையாது. ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் இச் சட்டத்தை உழ்ஹிய்யா கொடுப்போருடன் தொடர்புப் படுத்தி கூறியுள்ளார்கள், எனவே குடும்பத்தார்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

02. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் தனது கும்பத்தார்களுக்காக உழ்ஹிய்யா கொடுத்த போது அவர்களுக்கு “நீங்கள் முடிகள் நகங்கள் மற்றும் உடலில் உள்ள எந்தவொன்றையும் நீக்காதீர்கள் என்று கூறியதாக செய்திகள் இடம்பெறவில்லை. அப்படி தடையாக இருந்திருந்தால் அவர்களை அவர்களுக்கு தடை செய்திருப்பார்கள். அந்தவகையில் இக்கூற்றே மிக வலுவான கூற்றாகும்.

(அஷ்ஷர்ஹுல் மும்திஃ : 7/530)

அல்லாஹ் மிக அறிந்தவன்…

மொழிபெயர்ப்பாளர்: அஹ்ஸன் இப்னு அஸ்மன் முஹாஜிரி

காலம் : 19.07.2020
( துல்கஃதா பிறை 27)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply