பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா?

பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம்.

இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்: அது கால்நடை பிராணிகளில் ஒன்றாக இருக்கவேண்டும், அதாவது ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றில் ஒன்றாக. அனைத்து வகை ஒட்டகங்கள், மாடுகள் , ஆடுகளும் அனுமதிக்க பட்டது. கால்நடை பிராணிகள் அல்லாமல் வேறு பிராணிகளை உத்ஹிய்யா கொடுக்க அனுமதி கிடையாது, உதாரணமாக, வரிக்குதிரை, காட்டு மாடுகள் ஆகியவை உத்ஹிய்யா கொடுக்க அனுமதிக்கப் பட்டது அல்ல. இப்பிராணிகள் விடயத்தில் ஆண் பிராணிகளுக்கும், பெண் பிராணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாங்கள் எகோபித்த கருத்து கொண்டுள்ளோம்.(அல்மஜ்மூ)

லஜ்னதுத் தாயிமா எனும் ஃபத்வா குழுவிடம் பின் வரும் கேள்வி கேட்கப்பட்டது:

ஆறு மாத வயதுடைய ஆட்டை உத்ஹிய்யா கொடுக்கலாமா? சிலர் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை, ஒரு வயது முடிந்த ஆட்டைத் தான் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

இக்கேள்விக்கு அவர்கள். பதிலாக கூறினார்கள்:

உத்ஹிய்யாவை பொறுத்தவரை 6 மாதம் முழுமை அடைந்து ஏழாம் மாதத்தில் இருக்கும் செம்மறி ஆடு அல்லது அதை விட பெரிய செம்மறி ஆட்டை தான் உத்ஹிய்யா கொடுக்கக் வேண்டும், அந்த பிராணி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரியே. 6 மாதம் முழுமையான செம்மறி ஆட்டை ஜதஉ என்று அழைப்பார்கள்.

அபூ தாவூத் மற்றும் நசாயி பின் வரும் ஹதீஸை அறிவிக்கின்றனர்

முஜாஷி رضي الله عنه கூறினார்கள்: நான் நபி صلى الله عله وسلم “ஒரு ஜதஉ(6 மாதம் முடிந்த செம்மறி ஆடு) உத்ஹியா வயதை அடைந்த பிராணிகளுக்கு பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்று கூற நான் கேட்டேன்.

வெள்ளாடு, மாடு, ஒட்டகம் போன்றவை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அதன் குறிப்பிட்ட உத்ஹிய்யா வயதை அடைந்த பின்பு தான் உத்ஹிய்யா கொடுக்க அனுமதிக்கப்பட்டதாகும்.

வெள்ளாடுகளைப் பொறுத்தவரை அது ஒரு ஆண்டு, மாடுகளை பொறுத்தவரை இரு ஆண்டுகள், ஒட்டகங்களை பொறுத்த வரை, ஐந்து ஆண்டுகள்.

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: வளர்ந்த (உரிய வயதை அடைந்த) பிராணியையே குர்பானி கொடுங்கள், அது சிரமாகினால் ஜதஆ பிராணியை குர்பானி கொண்டுங்கள்

(சஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

மூலம்: https://islamqa.info/ar/answers/126705/حكم-التضحية-بالانثى

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: