பாலஸ்தீன மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா மீதுள்ள நமது கடமை

  • ஷைக்ஹ் உத்மான் அல் கமீஸ்

மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடப்பதை கண்டு ஒவ்வொரு முஸ்லிமும் வலியை உணர வேண்டும்.
இந்த நிகழ்வுகள் நம்மை கடந்து செல்லுகையில் சாதாரண விடயங்களாக கடந்து செல்ல அனுமதியில்லை, எந்தளவுக்கு என்றால் நம்மில் சிலர் இந்நிகழ்வுகளின் செய்திகளை தொலைக்காட்சியிலோ அல்லது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ கண்டால் அதை பார்ப்பதோ படிப்பதோ இல்லை, இதைக்கண்டு சலித்துக் கொள்கிறார்கள்!

முஸ்லிம்களிடமிருந்து பரிக்கப்பட்டு முஸ்லிம் அல்லாதவர்களால் ஆட்சி செய்யப்படக் கூடிய மேன்மைமிகு நிலங்களில் ஃபலஸ்தீன் முதன்மையானதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த நிலமானது நபி மூஸா عليه السلام அவர்கள் கூறியது போல் பரிசுத்த பூமியாகும்:

يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِى كَتَبَ ٱللَّهُ لَكُمۡ ….
என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியது போல் இந்த நிலம் அல்லாஹ்வினுடைய அருள் பொருந்தியது.
இந்த நிலத்தை கைவிட நமக்கு அனுமதியில்லை, ஷாம் என்பது ஃபலஸ்தீன், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இது நபியவர்கள் صلى الله عليه وسلم கூறியது போல் அருள் பொருந்திய நிலமாகும்: “அல்லாஹ்வே எங்களுக்கு எங்கள் ஷாமின் மீது அருள் புரிவாயாக, அல்லாஹ்வே எங்களுக்கு எங்கள் யமனின் மீது அருள் புரிவாயாக”

வெற்றி பெரும் கூட்டத்தை பற்றி நபி அவர்கள் கூறுகையில் : “என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் சத்தியத்திலே வெற்றி பெறுபவர்களாக நிலைத்திருப்பார்கள், அவர்களை புறக்கணிப்பவர்களாலும், எதிர்ப்பவர்களாலும் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது.. மேலும் அவர்கள் ஷாமில் உள்ள பைத்துல் மக்திஸில் உள்ளவர்கள் என நபியவர்கள் கூறினார்கள்.

ஆகவே இந்த நிலத்தின் மதிப்பையும், புனிதத்தையும் நாம் அறிதல் வேண்டும்.

அதிகப்படியான இறைத்தூதர்களும், நபிமார்களும் இந்த பகுதியில் வந்தவர்கள் என்பதே இந்த நிலத்திற்கான நன்மதிப்பிற்கு போதுமானதாக இருக்கும்.

இதுவே நம்முடைய முதலாவது கிப்லாவாக இருந்தது, நபியவர்கள் கஃபாவை நோக்கி தொழ கட்டளை வரும் முன் பைத் அல் மக்திஸை நோக்கி தொழுபவர்களாக இருந்தார்கள்.

நபியவர்கள் இரவுப் பயணம் செய்த இடம் இது தான்.

தஜ்ஜால் வருகையில் முஸ்லிம்கள் தஞ்சம் அடையும் இடம் இதுதான், அப்போது ஈஸா நபியவர்கள் ஷாமில் இறங்கி தஜ்ஜாலை வெற்றி கொள்வார்கள் பின்னர் ஷாம் பகுதியில் நலவையும் சத்தியத்தையும் பரப்புவார்கள். ஆகவே இந்த நிலத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

அங்குள்ள முஸ்லிம்களுக்கு உதவுவது கட்டாயமாகும். யூதர்களும் இறை நிராகரிப்பாளர்களும் எதிர்பார்ப்பது போல் இந்த பிரச்சனையானது பலஸ்தீனியர்களுக்கு மட்டுமான பிரச்சனையாக இருக்கக் கூடாது. முன்னர் ஒரு காலத்தில் இந்த பிரச்சனையானது ஒரு இஸ்லாமிய பிரச்சனையாக இருந்தது பின்னர் அவர்களின் திட்டப்படி இது அரபுகளின் பிரச்சினை என மாறியது, பின்னர் இது மத்திய கிழக்கின் பிரச்சினை என மாறியது, பின்னர் இது பலஸ்தீனை சுற்றியுள்ள பகுதிகளின் பிரச்சனையாக மாறியது, பின்னர் இது பலஸ்தீனியர்களின் பிரச்சனை மட்டும்தான் என்று மாறியது இதனால் மற்றவர்கள் அனைவரும் இந்த பிரச்சனையில் இருந்து நகர்ந்து கொண்டனர். முன்னர் எகிப்து இதைப் பற்றி பேசும், மொரோக்கோ இதைப் பற்றி பேசும், அல்ஜீரியா இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசும், லெபனான் இதைப் பற்றி பேசும் ஆனால் பின்னர் இது சுருக்கப்பட்டு சுருக்கப்பட்டு பலஸ்தீனின் பிரச்சனையாக மட்டும் மாற்றப்பட்டது. அவர்களால் மட்டுமே அதைப் பற்றி முடிவு செய்து பேச முடியும் என்றானது (யூதர்கள் சதி செய்து விரும்பியதைப் போல). இதன் விளைவாக, அவர்கள் மீது யூதர்கள் அதிகாரம் பெற்றனர், அல்லாஹ் பாதுகாப்பானக, இந்த பெரிய பிரச்சினையிலிருந்து மற்ற முஸ்லிம்கள் விலகிக் கொண்டனர்.

பல நிலங்கள் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டன என்பது உண்மைதான், ஆனால் இது பறிக்கப்பட்டதிலேயே மிக முக்கியமான நிலமாகும், எனவே இந்த பிரச்சினையை கைவிடவோ அல்லது இந்த பிரச்சினையை மறக்கவோ அனுமதியில்லை.

இந்த நிலத்தைப் பற்றியும், இந்த நிலத்தில் தாங்கமுடியாத துன்பங்களை அனுபவித்த அங்கு வாழும் முஸ்லிம்கள் பற்றியும் இன்றைய இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதும் மேலும் இந்த நிலத்தை, முக்கியமாக மஸ்ஜித் அல் அக்ஸாவை யூதர்களின் வசம் கொடுக்காமல் இருப்பது கட்டாயமாகும் .

இன்று மற்ற முஸ்லிம்கள் அங்கு பயணம் செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த தேசத்திற்கு யாரெல்லாம் பயணம் செய்கிறார்களோ, அவர்கள் யூதர்களின் அதிகாரத்தின் கீழ் வருகிறார்கள், அதாவது நீங்கள் இந்த தேசத்தின் மக்கள் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்பது போலவும், நான் இங்கு நுழைய உங்கள் அனுமதியை நாடுகிறேன் என்று அமைகிறது.

அங்கு செல்பவர்களை யூதர்கள் சோதித்துப் பார்த்து பைத் அல் மக்திஸை அடையச் செய்வதால் யூதர்களை இந்த நிலத்தின் உரிமையாளர்களாக ஒப்புக்கொள்வது போல் ஆகிறது. இந்த காரணத்தினால், இன்று அங்கு பயணம் செய்வது கூடாது, மாறாக நீங்கள் அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளீர்கள் என்பதை யூதர்களுக்கு அறிவிப்பது கடமையாகும், அங்கு ஆக்கிரமித்து இருப்பது அவர்களுக்கு அனுமதியில்லை மேலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

எனவே இந்த பிரச்சினையில் அவர்களுடன் நிற்பது, அவர்களுக்காக துஆ செய்வது, இந்த பிரச்சினையில் தலையிட முஸ்லிம்களின் ஆட்சியாளர்களிடம் கோருவது கட்டாயமாகும், அவர்களின் தலையீடு யூதர்கள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடருவதை நிறுத்தக்கூடும், ஏனென்றால் அவர்களை தடுப்பதற்கோ அதைப் பற்றி பேசுவதற்கோ யாரும் இல்லை என்று யூதர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும், இந்த பிரச்சினைக்கான தீர்வை ஆதரிப்பதும், அதைப் பற்றி மக்களிடம் பரப்புவதும் நம் மீதுள்ள கடமையாகும். மேலும் அங்கு பயணம் செய்வது யூதர்களுக்கு அது அவர்களுடைய நிலம் என்பதை உணர்த்தும் வகையிலான அதிகாரத்தை கொடுப்பதால் அங்கு பயணம் செய்யக் கூடாது, இந்த காரணத்தால் பாலஸ்தீனியர்கள் மற்றவர்கள் அங்கு பயணம் செய்வதை விரும்புவதில்லை என எனக்கு உண்மையில் கூறப்பட்டது, ஏனெனில் அங்கு செல்கையில் யூதர்கள் தான் பாஸ்போர்ட் சோதிப்பது போன்ற அனைத்து அதிகாரச் செயல்களையும் செய்பவர்களாக அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

எனவே அங்குள்ள நம் சகோதரர்களுக்கு ஆதரவாக, நாம் அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும், இந்த பிரச்சனையை பரப்ப வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அதைப் பற்றி பேச வேண்டும், யார் அதிகாரிகளை, ஆட்சியாளர்களை அணுக முடியுமோ, அவர்கள் இந்த பிரச்சினையை அவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், இதனால் இந்த அக்கிரமக்கார யூதர்கள் தாங்கள் பாலஸ்தீனியர்களுடன் மட்டுமே நேருக்கு நேர் இந்த விஷயத்தில் மோதுகிறோம் என்று எண்ணாமல் இதனால் முழு இஸ்லாமிய உலகமும் அந்த பாலஸ்தீனியர்களுடன் உள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அனைவரும் ஒரே உடலைப் போலவே இருக்கிறார்கள், அதன் ஒரு பகுதி வலிக்கும்போது, ​​முழு உடலும் அதனை உணர்கிறது.
இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராக நாம் ஒன்றாக ஒரே உடலைப் போன்றோர் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

மஸ்ஜித் அல் அக்ஸாவை பாதுகாத்து அதை முஸ்லிம்களுக்கே திருப்பித் தருமாறு நாம் அல்லாஹ் سبحانه وتعالى விடம் கேட்டுக்கொள்கிறோம். https://youtu.be/QyWUj0KEBrg
[5/13, 7:04 PM] اياش: https://youtu.be/QyWUj0KEBrg

ஃபலஸ்தீன் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் மீதுள்ள நமது கடமை

மஸ்ஜித் அல் அக்ஸாவை பாதுகாத்து அதை முஸ்லிம்களுக்கே திருப்பித் தருமாறு நாம் அல்லாஹ் سبحانه وتعالى விடம் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

%d