நபியின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்த்தி பேசுவது தவறா?

நபி صلى الله عليه وسلم அவா்களின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவதற்கு தடை உள்ளது, அவாின் கப்ரின் அருகில் அவ்வாறு செய்வதும் தவறான செயலா?

பதில்:
நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவது பின் வரும் குர்ஆனிய ஆயத்தின் சட்டத்தில் நுழையும்.

Al-Hujurat 49:2

وَلَا تَجْهَرُوا۟ لَهُ بِٱلْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ
உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சலிட்டுப் பேசாதீர்கள்.
(அல் ஹுஜூராத் :2)

நாம் அவாிடம் பேசாத போதும், அவாின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்த்தி பேசுவது சரி அல்ல. இதனால்  ஒரு முறை தாயிஃபை சேர்ந்த இரு நபர்கள் நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்த்தி பேசிக்கொண்டிருந்த பொழுது, உமர் رضي الله عنه அவா்களிடம், “நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரிகிறதா?” என்று கேட்டார்கள். பின்னர் அவர்களிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”  என்று கேட்டார். அவர்கள் தாயிஃப் என்று பதில் அளிக்க, ” நீங்கள் மதீனா வாசிகளாக இருந்திருந்தால், நான் உங்களை இன்னவாரு செய்திருப்பேன்(அதாவது தண்டித்திருப்பேன்)” என்று கூறினார்கள்.

இதிலிருந்து நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்தாமலிருப்பது நல்லொழுக்கம் என்பது தெரிகிறது.
அதே நேரம் சில அத்துமீறிய மக்கள், நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரை முன்னோக்கி, கிப்ளா தங்கள் பின் புறம் இருக்க நபி صلى الله عليه وسلم அவா்களின் இடது கை அருகில், தொழுகையில் நிற்பதை விட அதிக உள்ளச்சம் கொண்டு நிற்பதை போல அங்கு காணலாம்.

இது தவறான செயல்,l நபி صلى الله عليه وسلم இதை விரும்பவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள்.

சிலர் இவ்வாறு நிற்பதை காண்கிறோம், அவர்களை நம்மால் அசைக்க கூட முடியாது, நாம் அவரை கடந்து செல்ல  அவரை அசைக்க முயன்றாலும் நகர மாட்டார். இது மிகப்பெரிய பாவம் என்பதில் சந்தேகம் இல்லை.

அவாின் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அல்லாஹ்வே நன்கு அறிவான், சில வேளை இந்த செயல், நபி صلى الله عليه وسلم அவர்களை வணங்கும் வண்ணமாக இருக்கலாம், அவ்வாறு இருந்தால் அவர் அறியாமலேயே முஷ்ரிகாகிவிடுகிரார்

هل يشمل عدم رفع الصوت عند النبي صلى الله عليه وسلم عدم رفعه عنده بعد موته;أي: عند قبره؟

الجواب:

رفع الصوت عند قبر الرسول عليه الصلاة والسلام يدخل في قوله تعالى: ﴿ وَلا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ﴾ [الحجرات:2] وإن كنا لا نخاطبه لكن لا يليق أن ترتفع الأصوات عند قبره. ولهذا لما سمع عمر رضي الله عنه رجلين من الطائف يرفعان أصواتهما عند قبر النبي عليه الصلاة والسلام, سألهما وقال: [أتعلمان أين أنتما؟ ثم قال: من أي بلد أنتما؟ قالا: من الطائف, قال: لو كنتما من هذا البلد لفعلت كذا وكذا] فدل هذا على أن من تمام الأدب ألا يرفع الإنسان صوته عند قبر النبي صلى الله عليه وسلم. وأما ما يفعله بعض الغلاة تجده يقف أمام القبر والقبلة خلفه على ذراعه اليسرى وخشع أكثر من خشوعه في الصلاة فهذا منكر, والرسول صلى الله عليه وسلم لا يحب هذا ولا يرضى به; لأننا نشاهد أناساً يقفون عند القبر على هذه الصفة، ومع ذلك لا يمكن أن يتزحزح، حتى لو أردت أن تزحزحه لتمر من عنده أبى أن يتحرك, وهذا لا شك أنه منكر عظيم, والله أعلم بما في قلبه. ربما يكون هذا الوقوف تعبداً للرسول عليه الصلاة والسلام فيكون مشركاً من حيث لا يشعر

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d