குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

கேள்வி:

குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

 

பதில்:

அல்ஹம்துலில்லாஹ்…,
குர்ஆனில் ஸஜ்தாவுடைய இடங்கள் 15 ஆகும்.
அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் 15 ஸஜ்தா வசனங்களை ஓதினார்கள். அதில் மூன்று முஃபஸ்ஸலிலும் சூரா ஹஜ்ஜிலே இரண்டு வசனங்களும் ஆகும்.
இந்த செய்தி அபூதாவூத், இப்னுமாஜா,ஹாகிம்,தாரகுத்னீ இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) ஆகியோர் இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்தது என்று கூறியிருக்கிறார்கள்.

குர்ஆனில் இடம் பெற்ற 15 வசனங்கள்.
சூரா அஹ்ராஃப் 206
சூரா அர் ரஹ்து 15
சூரா நஹ்ல் 49.
சூரா இஸ்ரா 107
சூரா மர்யம் 58
சூரா ஹஜ் 18
சூரா ஹஜ் 77
சூரா அல்ஃபுர்கான் 60
சூரா அந்நம்ல் 25
சூரா ஸஜ்தா 15
சூரா ஸாத் 24
சூரா ஃபுஸ்ஸிலத் 37
சூரா அந்நஜ்ம் 62
சூரா அல் இன்ஷிகாக் 21
சூரா அல் அலக் 19
நூல் : ஃபிக்ஹ‚ஸ் ஸ‚ன்னா பாகம் 1 பக்கம் 186 188

இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஃபிக்ஹீஸ் ஸ‚ன்னாவிற்கு மேலதிக விளக்கம் எழுதும் சொல்கிறார்கள்.
இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்தது அல்ல. ஏனென்றால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம் பெறுகிறார்கள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தன்னுடைய தல்கீஸ் என்னும் நூலில் இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் இருவரும் அபூதாவுதில் இடம் பெறும் செய்தியை ஹஸன் தரத்தில் உள்ளது என்று சொன்னதை பதிவு செய்துவிட்டு மறுப்பாக சொல்கிறார்கள். இந்த செய்தியை அப்துல் ஹக் இப்னுல் கத்தான் (ரஹ்) ஆகியோர் பலவீனமானது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் மனீன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர். அவர் முலம் அறிவிக்கின்ற ஹாரிஸ் பின் ஸயீத் என்பவரும் யாரென்று அறியப்படாதவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனால்தான் இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் சூரா ஸஜ்தாவில் இரண்டாவது ஸஜ்தா வசனம் இல்லை என தேர்வு செய்திருக்கிறார்கள். இதுதான் இமாம் இப்னுஹஸ்ம் (ரஹ் ) அவர்களின் முஹல்லாவில் சொன்ன கருத்தும்கூட.

இமாம் இப்னுஹஸ்ம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

இந்த விசயத்தில் நபியவர்களின் முலம் எந்த ஒரு செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று சொல்கிறார்கள். உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் அவருடைய மகனார் இப்னுஉமர் ரலி அவர்கள் அபூதர்தா ரலி ஆகியோர் சூரா ஸஜ்தாவின் இரண்டாவது ஸஜ்தாவில் ஸஜ்தா செய்ததாக ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது.
இதே இமாம் இப்னுஹஸ்ம் ரஹ் அவர்கள் அல்முஹல்லாவில் மேற்கூறப்பட்ட மற்ற ஸஜ்தா வசனங்களிலும் ஸஜ்தா செய்யலாம் அது அனுமதிதான் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கூறுகிறார்கள். முதல் பத்து ஸஜ்தா வசனங்கள் உலமாக்களிடத்தில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் இதே கருத்தை இமாம் தஹாவி ரஹ் அவர்களும் ஷரஹ் அல் மஆனி அல்ஆஸார் பாகம் 1 பக்கம் 211 ல் தெரிவித்துள்ளார்கள்.

என்றாலும் தஹாவி ரஹ் அவர்கள் சூரா ஸாத் க்கு பகரமாக சூரா ஃபுஸ்ஸிலத்தை ஸஜ்தாவின் வசனமாக கருதியிருக்கிறார்கள். பிறகு இரண்டிற்கும் ஆதரப்பூர்வமான செய்திகளை பதிவு செய்துள்ளார்கள்.
மேலும் நபியவர்கள் சூரா ஸாத் சூரா அந்நஜ்ம் சூரா இன்ஷிகாக் சூரா இக்ரஃ ஆகிய சூராக்களிலும் ஸஜ்தா செய்துள்ளார்கள்.

ஆக மொத்தத்தில் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாக இருந்தாலும் இந்த உம்மத் ஏகோபித்து இந்த ஸஜ்தா வசனங்களில் அதிகமானவற்றில் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். மற்ற செய்திகளுக்கு ஆதரப்பூர்வமான செய்திகளும் சான்றாக இருக்கிறது.

ஆனால் ஹஜ்ஜீடைய இரண்டாவது ஸஜ்தாவிற்கு ஆதரப்பூர்வமான செய்தி இல்லையென்றாலும் நபித்தோழர்களில் சிலர் ஹஜ்ஜுடைய இரண்டாவது ஸஜ்தாவில் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். இது இரண்டாவது ஸஜ்தா மார்க்கத்திலுள்ளதுதான் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இந்த நபித்தோழர்களின் செயலுக்கு மாற்றமான கருத்துக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆக ஸஜ்தாவின் வசனங்கள் மொத்தம் 15 ஆகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்; கடையநல்லூர்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply