நோன்பு காலத்தில் கண்ணுக்கு சொட்டு மருந்து இடலாமா

கண்ணிற்கு இடும் சொட்டு மருந்தின் சுவை தொண்டையை அடைந்தால், நோன்பு முறிந்து விடுமா?அவ்வாறு நோன்பு முறிந்து விடுமென்றால் , நான் நோன்பின் பகல் பொழுதில் சொட்டு மருந்து பயன் படுத்தினேன் பின்னர் உறங்கிவிட்டேன், மருந்தை நான் விழுங்கினேனா இல்லையா என்று தெரியவில்லை, இதன் சட்டம் என்ன?

பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

கண்ணிற்கு பயன் படுத்தும் சொட்டு மருந்துகள் நோன்பை முறிக்குமா இல்லையா எனும் விடையத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா, மற்றும் ஷேக் இப்னு உஸைமீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கும் கருத்தானது, அது நோன்பை முறிக்காது என்பதே.

ஷேக் இப்னு உஸைமீன் கூறுகிறார்கள்:
ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களின் கருத்துப் படி,
குஹ்ல் (சுர்மா) இடுவுது நோன்பை முறிக்காது, அதன் சுவை தொண்டையை அடைந்தாலும் சரியே. இது உண்பது, குடிப்பது என்று கூறப்படாது, இது உண்பதை குடிப்பதை போன்று அல்ல, இதை கொண்டு உண்பதால், குடிப்பதால் அடையும் பயன் அடையப்படுவதில்லை என்கிறார். நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து சுர்மா இடுவது நோன்பை முறிக்கும் என்று குறிக்கும் வண்ணம் யாதொரு  ஸஹீஹான தெளிவான ஹதீஸும் இல்லை. ஒரு விடையம் நோன்பை முறிக்கும் என்று தெளிவான ஆதாரம் இல்லாத வரை அது நோன்பை முறிக்காத, அந்த வணக்க வழிபாடு சரியானது தான் என்பது தான் அடிப்படை விதி. ஆகையால் ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمه الله கூறுவது தான் சரியான கருத்து.

அதே அடிப்படையில் ஒரு மனிதர் கண்ணிற்கு சொட்டு மருந்து இட்டு அது அவரின் தொண்டையை அடைந்தால், அவரின் நோன்பு முறியாது.

[ஷரஹ் அல் மும்தி]

 

https://islamqa.info/en/answers/22199/

தமிழாக்கம் நயீம் இப்னு ஆப்தில் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply