சூரா அல்-அஸ்ர் விளக்க உரை – இமாம் அல்-ஸஅதி

{1 – 3} {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ * إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ * إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ} .

காலத்தின் மீது சத்தியமாக.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

அல்லாஹு தஆலா அல்-அஸ்ரை கொண்டு சத்தியம் செய்கிறான். அல்-அஸ்ர்(காலம்) என்பது மனிதர்களின் செயல்களும் காரியங்களும் நடக்கும் இரவையும் பகலையும் குறிக்கும் .
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான் என்று சத்தியம் இட்டு கூறுகிறான். நஷ்டவாளி என்பவன் வெற்றிபெற்றவனின் எதிர்மறையாகும்.
நஷ்டங்கள் பலவகைப்படும். படித்தரங்களிலும், வகைகளிலும், எண்ணிக்கயிலும் வேறுபட்டதாக இருக்க கூடும்.

أقسم تعالى بالعصر، الذي هو الليل والنهار، محل أفعال العباد وأعمالهم أن كل إنسان خاسر، والخاسر ضد الرابح.
والخسار مراتب متعددة متفاوتة:

சிலர் முழுமையான நஷ்டவாளிகளாக இருக்கக்கூடும், இந்த உலகத்தையும் ஆகிரத்தயும் இழந்தவர்கள் போல.

قد يكون خسارًا مطلقًا، كحال من خسر الدنيا والآخرة، وفاته النعيم، واستحق الجحيم.

அத்தகையவன் சொர்க்கத்தையும் சந்தோசத்தாயும் இழந்தான், நரக நெருப்பை பெற்றான்.

சில நேரங்களில் நஷ்டம் என்பது ஒரு சில வகையில் மட்டும் ஏற்பட கூடும். இதனால் தான், கீழ்வரும் நான்கு பண்புகளை கொண்டவர்களை தவிர, மனிதர்கள் அனைவரையும் அல்லாஹ் நஷ்டவாளிகளாக கூறுகிறான்

وقد يكون خاسرًا من بعض الوجوه دون بعض، ولهذا عمم الله الخسار لكل إنسان، إلا من اتصف بأربع صفات:
1) அல்லாஹ் எதை ஈமான் கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டானோ அதை ஈமான் கொள்வது . ஈமான் என்பது இல்மு எனும் மார்க்க கல்வி இல்லாமால் ஏற்படாது, இல்மு ஈமானில் ஒரு கிளைப்பகுதியாகும், இல்மு இல்லாமல் ஈமான் முழுமை அடையாது.
2) நல் அமல்கள்கள். இது (a) வெளிப்படையான அல்லது மறைவான அனைத்து அமல்களையும் குறிக்கும் (b) இறைவனக்கு செய்யவேண்டிய கடமைகளையும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் (c) கடமையான (வாஜிப்) அல்லது விரும்பத்தக்க (முஸ்தஹப்) ஆகிய அனைத்து நற்காரியங்களையும் குறிக்கும்.
3) சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து. அதாவது ஈமான் மற்றும் நல் அமல்களின் பக்கம் ஒருவர் ஒருவருக்கு உபதேசம் செய்வது, ஆர்வம் ஊட்டுவது.
4) (a) இறைவனை பின்பற்றுவதிலும், (b) பாவங்களிலிருந்து விலகி இருப்பதிலும், (c) இறைவனின் விதியால் ஏற்படும் தீங்குகளிலும், பொறுமை(ஸபர்) கொள்ளுமாறு ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்வது.

الإيمان بما أمر الله بالإيمان به، ولا يكون الإيمان بدون العلم، فهو فرع عنه لا يتم إلا به.
والعمل الصالح، وهذا شامل لأفعال الخير كلها، الظاهرة والباطنة، المتعلقة بحق الله وحق عباده (1) ، الواجبة والمستحبة.
والتواصي بالحق، الذي هو الإيمان والعمل الصالح، أي: يوصي بعضهم بعضًا بذلك، ويحثه عليه، ويرغبه فيه.
والتواصي بالصبر على طاعة الله، وعن معصية الله، وعلى أقدار الله المؤلمة.

முதல் இரண்டு காரியங்கள் மூலம் ஒரு மனிதன் முழுமை அடைகிறான். இறுதி இரண்டு காரியங்களின் மூலம் பிறரை முழுமை அடைய செய்கிறான்.
இந்த நான்கு விஷயங்களையும் முழுமையாக செய்தால், ஒரு மனிதன் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பு அடைகிறான், மேலும் மிகப்பெரிய வெற்றியை அடைகிறான்.

فبالأمرين الأولين، يكمل الإنسان (2) نفسه، وبالأمرين الأخيرين يكمل غيره، وبتكميل الأمور الأربعة، يكون الإنسان قد سلم من الخسار، وفاز بالربح [العظيم] .

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply