சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

 

قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١ اللَّـهُ الصَّمَدُ ﴿٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.

அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்:

“(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் கூறுவீராக, “அல்லாஹ் ஒருவன்தான்.” ஏகத்துவம் அவனுக்கு மட்டுமே உரியது.

அவன் தன் பரிபூரணத்தில் தனித்தவன், ஒருவன். அழகிய பெயர்களுக்கும், உயர்ந்த முழுமையான பண்புகளுக்கும், தூய செயல்களுக்கும் உரியவன். அவனுக்கு எந்த வகையிலும் யாதொரு இணையும் இல்லை.

அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!

அனைத்து தேவைகளுக்கும் அவனிடமே உதவி தேடப்படுகிறது, வானங்கள் பூமிகளில் அனைவருமே தங்கள் எல்லா தேவைகளுக்கும் அவனையே சார்ந்திருக்கிறார்கள், அவனிடமே தங்கள் தேவைகளை தேடுகிறார்கள், ஆசைகளுக்கு நம்பியிருக்கிறார்கள், ஏனென்றால் அவனுடைய பண்புகள் பரிபூரணமானவை, குறையற்றவை. அவனே தன் அறிவில் பரிபூரணமான அல் அலீம் (யாவற்றையும் அறிந்தவன்), தனக்கு மாறு செய்தவர்கள் விஷயத்தில் பொறுமை(அல் ஹில்ம்) கொள்ளும் பரிபூரணமான அல் ஹலீம், தன் கருணையில் பரிபூரணமான அர்ரஹீம், அவனுடைய கருணை அனைத்தையும் சூழ்ந்தது, அதே போல் அவனுடைய அனைத்து பண்புகளும் பரிபூரணமானது .

 

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. இதுவும் அவனுடைய பரிபூர்ணத்தில் ஒன்று.

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.காரணம் அவன் யாதொரு தேவையும் அற்றவன்.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அவனுடைய 1) பெயர்கள் 2) பண்புகள் 3) செயல்களில் அவனுக்கு யாதொரு இணையும் இல்லை, தபாரக வ தஆலா (அதிகமான நன்மைகள் பொருந்தியவன், எந்த குறையையும் விட்ட உயர்ந்தவன்).

 

இந்த சூராவில் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் தவ்ஹீத் இடம் பெற்றுள்ளது.

أي {قُلْ} قولا جازمًا به، معتقدًا له، عارفًا بمعناه، {هُوَ اللَّهُ أَحَدٌ} أي: قد انحصرت فيه الأحدية، فهو الأحد المنفرد بالكمال، الذي له الأسماء الحسنى، والصفات الكاملة العليا، والأفعال المقدسة، الذي لا نظير له ولا مثيل.

{اللَّهُ الصَّمَدُ} أي: المقصود في جميع الحوائج. فأهل العالم العلوي والسفلي مفتقرون إليه غاية الافتقار، يسألونه حوائجهم، ويرغبون إليه في مهماتهم، لأنه الكامل في أوصافه، العليم الذي قد كمل في علمه، الحليم الذي قد كمل في حلمه، الرحيم الذي [كمل في رحمته الذي] وسعت رحمته كل شيء، وهكذا سائر أوصافه، ومن كماله أنه {لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ} لكمال غناه {وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ} لا في أسمائه ولا في أوصافه، ولا في أفعاله، تبارك وتعالى.

فهذه السورة مشتملة على توحيد الأسماء والصفات.

 

சூரா அல் இஃக்லாஸ்
சூரா அல்இஃக்லாஸ்
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply