இஸ்ரா மிஃராஜ் நாள் நோன்பு வைப்பது சுன்னத்தா

கேள்வி: இஸ்ரா மிஃராஜ் இரவின் நாளில் நோன்பு நோர்பது, கடமையா, அல்லது விரும்பத்தக்கதா, அல்லது பித்அதான காரியமா? உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய கூலியை கொடுக்கட்டும்.

பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே, அல்லாஹ்வின் ரஸூலின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் உண்டாகட்டும்.

நொன்புகளில் ரமதான் மாதத்தை போன்று கடமையான நொன்புகளும் உள்ளன, முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்கள், அரஃபா நாள் போன்ற கடமை அற்ற நோன்புகளும் உள்ளன. இந்த நாட்களில் நோன்பு வைக்குமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்، இதே போன்று மாதம் தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோர்க்கவும், திங்கள் வியாழக் கிழமைகளில், நோன்பு நோர்க்கவும் வழிகாட்டியுள்ளார்கள். இந்த நாட்களில் நோன்பு நோர்பது, நபி صلى الله عليه وسلم அவா்களின் சுன்னத்களை சேர்ந்தவை.

ஆனால் இஸ்ரா மிஃராஜ் இரவின் தினங்களில் நோன்பு நோர்ப்பது முஸ்தஹப்பும் கிடையாது, சுண்ணத்தும் கிடையாது, கடமையும் கிடையாது. ஏன் என்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்றைய தினம் நோன்பு வைத்ததாகவோ, வைக்குமாறு கூறியதாகவோ யாதொரு அறிவிப்பும் இல்லை. அன்று நோன்பு வைப்பது சிறந்ததாகவோ, சுன்னத்தாகவோ இருந்திருந்தால், நபி صلى الله عليه وسلم அவர்கள் அரஃபா, ஆஷுரா ஆகிய நாட்களின் சிறப்பை தெளிவு படுத்தியது போல், இதையும் தெளிவு படுத்தி இருந்திருப்பார்கள். ஆதலால் இந்நாளில் நோன்பு நோர்ப்பது சிறந்தது என்று கூறுவது அனுமதிக்கப்பட்டது அல்ல.
இன்னும் கூறினால், இஸ்ரா மிஃராஜ் பயணம் எந்த இரவு நடந்தது எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இமாம் ஹாஃபித் இப்னு ஹஜர் அல் அஸ்களானி رحمه الله தனது ஃபத்ஹுல் பாரி எனும் நூலில், இது குறித்து பத்துக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறுகின்றார்.(فتح الباري 7/254)
இந்த நாள் அன்று நோன்பு வைப்பதிலோ, இரவு தொழுவதிலோ, எந்த தனி சிறப்பும் இல்லை என்பது இந்த கருத்து வேறுபாடுகளிலிருந்தே தெரிகிறது.
அவ்வாறு இருந்திருந்தால், நபி صلى الله عليه وسلم அவர்களும் அவா்களின் தோழர்களும் தான் அதை செயல்படுத்துவதில் முந்தி இருப்பார்கள்.

மேல் கூறிய காரணங்களினால் ரஜப் மாதம் 27ஆம் நாள் இவ்வாறு இஸ்ரா மிஃராஜ் நாள் என்று நோன்பு வைப்பது புதிதாக உருவாகிய ஒரு பித்அத், அவ்வாறு செய்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று சிலர் கூறுதுகின்றனர்.
ஆனால் இந்த நாள் சுண்ணத்தான பிற நோன்புகள் வைக்கும் நாளில் வந்தால், உதாரணமாக, திங்கள், வியாழக்கிழமைகள், ஆகிய நாட்களில் வந்தால், அல்லது ஒரு மனிதர் வழக்கமாக நோன்பு வைக்கும் நாளில் வந்தால், உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைக்கும் ஒரு மனிதர், அப்போது இது இஸ்ரா மிஃராஜ் நோன்பு என்று நிய்யத் இல்லாமால் வைக்கலாம்.

ஒரு முஸ்லிம் சுன்னத்களை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும், பித்அத்களை விட்டும் விலக வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.
இதை ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் அல்புகாரி,ஸஹீஹ் முஸ்லிம்)

நிராகரிக்கப்படும் எனும் சொல்லின் பொருள், ஏற்றுக்கொள்ளப்படாது என்பதாகும்.

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்.

மூலம்: https://www.islamweb.net/ar/fatwa/5951/

இமாம் இப்னுல் கய்யிம் رحمه الله கூறுகிறார்கள்:

ரஜப் மாதத்தில் நோன்பு வைப்பதன், அல்லது அதன் சில இரவுகளில் நின்று தொழுகுவதன் சிறப்புகள் குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்களே. (அல் மனார் அல் முநீஃப் பக்கம் 96)

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்களானி رحمه الله: ரஜப் மாதத்தின் சிறப்புகள் குறித்தோ, அதில் நோன்பு வைப்பதன் சிறப்புகள் குறித்தோ, அல்லது அதில் சில குறிப்பிட்ட நாட்களில் நோன்பு வைப்பதன் சிறப்புகள் குறித்தோ, அதில் குறிப்பிட்ட இருவுகள் நின்று தொழுகுவதை குறித்தோ, ஆதாரமாக எடுக்க தகுதியான சஹீஹான ஹதீஸ்கள் எதுவும் இல்லை. ( தப்யீன் அல்அஜப்)

அஷ்ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்:
இஸ்ரா மிஃராஜ் இரவென்பது, இரஜப் மாதத்தின் 27ஆம் இரவு தான், என்று மக்களில் அதிகமானோர் மத்தியில் உள்ள கருத்து, எவ்வகையிலும் சரியான கருத்தல்ல.

இது விடயத்தில் வந்துள்ள கருத்துகளில் இச்சம்பவம், ரபீயுல் அவ்வல் மாதத்தில் நடந்தது என்பதுவே பலமான கருத்து.

ஆகவே இரஜப் மாதத்தின் 27ஆம் இரவு நடக்கும் சிறப்பு கொண்டாட்டங்கள், வழிபாடுகள் யாவும் ஆதாரமற்ற பித்அத்களாகும்.

(லிகா அல் பாப் அல் மஃப்தூஹா)

 

وقال ابن القيم رحمه الله:
” كل حديث في ذكر صيام رجب وصلاة بعض الليالي فيه فهو كذب مفترى.” انتهى من “المنار المنيف” (ص96).

وقال الحافظ ابن حجر في “تبيين العجب” (ص11):

” لم يرد في فضل شهر رجب، ولا في صيامه ولا صيام شيء منه معين، ولا في قيام ليلة مخصوصة فيه حديث صحيح يصلح للحجة.” انتهى.

 

هل صيام يوم الاسراء والمعراج واجب أم بدعة أم مستحب؟ ولكم أعظم الأجر.

الإجابــة
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد:

فمن الصيام ما هو واجب كصيام شهر رمضان، ومنه ما هو دون ذلك كصيام يومي تاسوعاء، وعاشوراء، ويوم عرفة، وقد أرشدنا النبي صلى الله عليه وسلم إلى هذه المواطن، كما أرشد إلى صيام ثلاثة أيام من كل شهر، ويومي الاثنين والخميس. والصيام في هذه الأوقات من سنة النبي صلى الله عليه وسلم. لكن يوم الإسراء والمعراج لا يجب ولا يستحب، ولا يسن صيامه، لأنه لم يرد عن النبي صلى الله عليه وسلم أنه صامه أو أمر بصيامه، ولو كان صومه مندوباً أو مسنوناً لبينه النبي صلى الله عليه وسلم، كما بين فضل الصيام في يوم عرفة، وعاشوراء.. الخ.
وعلى هذا فلا يصح أن يقال بصيام هذا اليوم، بل إنه يوم مختلف في تعيينه على أقوال كثيرة قال عنها الحافظ ابن حجر في الفتح بأنها تزيد على عشرة أقوال. فتح الباري (7/254) باب المعراج: كتاب مناقب الأنصار. وهذا الاختلاف دليل على أن هذا اليوم ليس له فضيلة خاصة بصيام، ولا تخص ليلته بقيام، ولو كان خيراً لسبقنا إليه النبي صلى الله عليه وسلم وصحابته الكرام، وبناءً على هذا فإن صوم يوم الإسراء والمعراج (27 من رجب) على أحد الأقوال بدعة محدثة لا يصح التمسك بها، لكن إن وافق هذا اليوم سنة أخرى في الصيام كيوم الاثنين، أو الخميس أو وافق عادة امرئ في الصيام، كمن يصوم يوماً ويفطر يوماً فعندئذ يجوز صيامه لكونه يوم الاثنين أو الخميس أو اليوم الذي يصومه – مثلا- لا لكونه يوم الإسراء والمعراج. وعلى المسلم أن يتحرى السنن و يبتعد عن البدع، قال رسول الله صلى الله عليه وسلم: “من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد” رواه البخاري ومسلم، ومعنى (رد) أي: مردود على صاحبه غير مقبول منه.
والله تعالى أعلم

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply