சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ ۝١

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا ۝٢

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا ۝٣

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்:
இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது .

நற்செய்தி:

அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , அவரை பின்பற்றுபவர்களாகவும் ஆகிவிடுவதும் தான் இந்த நற்செய்தி . இது நடந்தேறியது.

உதவியும் வெற்றியும் கிடைத்த பிறகு என்ன செய்யவேண்டும் எனும் கட்டளை:

அல்லாஹ் கொடுத்த இந்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றி செலுத்துமாறும், தஸ்பீஹ் (அல்லாஹ் அனைத்து விதமான குறைகளை விட்டும் தூயமையானவன் என்று கூறுவது – சுபானல்லாஹ்) மற்றும் தஹ்மீத்(அல்லாஹ்வை அவனின் அழகிய பெயர்களுக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் , அவன் கொடுத்த அருட்கொடைகளுக்காகவும் புகழ்வது- அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவது ) செய்யுமாறும், அல்லாஹ் தன் தூதருக்கு صلى الله عليه وسلام கட்டளை இடுகிறான்.

அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும் குறிப்பு:

இந்த சூராவில் இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டுகிறான்.

1)இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவி நீடிக்கும்,  அல்லாஹ்வை அவனுடைய தூதர் தஸ்பீஹ்,தஹ்மீத் செய்வதாலும் பாவமன்னிப்பு கோருவதாலும் இந்த உதவி அதிகரிக்கும். இது அல்லாஹ்வுக்கு நன்றி(ஷுகர் ) செலுத்துவதாகும்.

அல்லாஹ்  கூறுகிறான்:

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் அதிகமாக்குவேன்;

இந்த உதவி நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலும் அதற்க்கு பிற்காலத்திலும் அதிகரித்தது, இஸ்லாமிய மார்க்கம் மற்ற மார்க்கங்கள் அடைந்திடாத வெற்றியை அடைந்தது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை மற்ற மார்க்கங்களை விட அதிகமானது. பின்பு இந்த முஸ்லிம் உம்மத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல் அதிகரித்தது, ஆகையால் அல்லாஹ் இந்த உம்மத்தை பிரிவிகளாலும் குழப்பங்களாலும் சோதித்தான்.

 

ஆயினும் இந்த உம்மத்திற்கும் இந்த மார்க்கத்திற்கும் அல்லாஹ் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அருள் செய்திருக்கிறான் .

 

2)இரண்டாவது, அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام இறுதி நேரம் நெருங்கிவிட்டது என்பதையும் இந்த சூரா குறிப்பாக கூறுகிரான். ஏனென்றால் நபியின் صلى الله عليه وسلام வாழ்க்கை,  உன்னதமான வாழ்க்கை. அல்லாஹ் அவருடைய வாழ்க்கையின் மீது சத்தியம் செய்தான்.  உன்னதமான அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி முடிவதே வழக்கம் என்பது தெரிந்ததே, தொழுகை, ஹஜ்ஜை போழ்.

 

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلام பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்வை புகழுமாரு, அல்லாஹ் கட்டளை இடுவதிலிருந்து, அவரின் வாழ்க்கை முடிவடைவததை புரிந்து கொள்ளலாம். ஆகவே அவர் தன் இறைவனை சந்திப்பதற்கு ஆயத்தமாகட்டும், மேலும் அவரின் வாழ்வை மிக சிறந்த இபாதத்துகளைக்கொண்டு முடிக்கட்டும். அவரின் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.

 

நபி صلى الله عليه وسلام  இந்த குர்ஆன் ஆயத்தை செயல் படுத்தும் விதமாக தன்னுடைய ருகூவிலும் சுஜூதிலும்:

 

سبحانك اللهم وبحمدك، اللهم اغفر لي
அல்லாஹ்வே நீ அனைத்து குறைகளை விட்டும் தூயவன், எல்லா புகளுக்குமுரியவன். அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக!
என்று அதிகதிகமாக கூறுவார்கள்

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

{1 – 3} {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ * وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا * فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} .
في هذه السورة الكريمة، بشارة وأمر لرسوله عند حصولها، وإشارة وتنبيه على ما يترتب على ذلك.
فالبشارة هي البشارة بنصر الله لرسوله، وفتحه مكة، ودخول الناس في دين الله أفواجًا، بحيث يكون كثير منهم من أهله وأنصاره، بعد أن كانوا من أعدائه، وقد وقع هذا المبشر به، وأما الأمر بعد حصول النصر والفتح، فأمر رسوله أن يشكر ربه على ذلك، ويسبح بحمده ويستغفره، وأما الإشارة، فإن في ذلك إشارتين: إشارة لأن يستمر النصر لهذا الدين (1) ، ويزداد عند حصول التسبيح بحمد الله واستغفاره من رسوله، فإن هذا من الشكر، والله يقول: {لَئِنْ شَكَرْتُمْ لأزِيدَنَّكُمْ} وقد وجد ذلك في زمن الخلفاء الراشدين وبعدهم في هذه الأمة لم يزل نصر الله مستمرًا، حتى وصل الإسلام إلى ما لم يصل إليه دين من الأديان، ودخل فيه ما لم يدخل في غيره، حتى حدث من الأمة من مخالفة أمر الله ما حدث، فابتلاهم الله (2) بتفرق الكلمة، وتشتت الأمر، فحصل ما حصل.
[ومع هذا] فلهذه الأمة، وهذا الدين، من رحمة الله ولطفه، ما لا يخطر بالبال، أو يدور في الخيال.
وأما الإشارة الثانية، فهي الإشارة إلى أن أجل رسول الله صلى الله عليه وسلم قد قرب ودنا، ووجه ذلك أن عمره عمر فاضل أقسم الله به.
وقد عهد أن الأمور الفاضلة تختم بالاستغفار، كالصلاة والحج، وغير ذلك.
فأمر الله لرسوله بالحمد والاستغفار في هذه الحال، إشارة إلى أن أجله قد انتهى، فليستعد ويتهيأ للقاء ربه، ويختم عمره بأفضل ما يجده صلوات الله وسلامه عليه.
فكان صلى الله عليه وسلم يتأول القرآن، ويقول ذلك في صلاته، يكثر أن يقول في ركوعه وسجوده: ” سبحانك اللهم وبحمدك، اللهم اغفر لي “.
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply