ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏
பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏
இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது,
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏
இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது,
يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏
அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்-
بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏
ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.
يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
அந்நாளில் மனிதர்கள்,தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாக  வருவார்கள்.
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்:

உயர்ந்தோன் அல்லாஹ், இங்கு, கியாமத் நாளில் என்ன நடக்கும் என்று அறிவிக்கிறான். அந்த நாளில் ஏற்படும் நிலநடுக்கும், அதிர்வுகள் குறித்து அறிவிக்கிறான். அதனால் பூமியின் கட்டிடங்கள், அடையாளங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் அழிந்துவிடும்.

பூமியின் மலைகள் உடைந்து சமமாகும், மலைக்குன்றுகள் மட்டமாகும். மேடுகளும் பள்ளங்களும் இல்லாத நிலையான சமமான நிலமே இருக்கும்.

 

{وَأَخْرَجَتِ الأرْضُ أَثْقَالَهَا}
இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது,

அதன் உள்ளே இருக்கும் மரணித்தவற்றையும் புதையல்களையும் வெளியாக்கும்.

 

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-

நடக்கும் பயங்கர நிகழ்வுகளை காணும் மனிதன் வியந்து கூறுவான், “அதற்கு என்ன நேர்ந்தது?”

 

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

பூமி, அதன் மீது மக்கள் செய்த தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் சாட்சியளிக்கும். அந்நாளில் அல்லாஹ்வின் அடியார்களின் செயல்களை குறித்து சாட்சியளிக்கும் சாட்சிகளில் பூமியும் ஒன்று.

 

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.

பூமி சாட்சியளிப்பதெல்லாம் உம்முடைய இறைவன் அதற்க்கு வஹீ மூலம் அறிவித்ததனாலும் அதன்மீது செய்யப்பட செயல்களை குறித்து அறிவிக்குமாறும் கட்டளையிடதனால் தான், அல்லாஹ்வின் கட்டளைக்கு அது ஒருபொழுதும்  மாறு செய்யாது.

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
அந்நாளில் மனிதர்கள்,தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாக  வருவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் அந்நாளில், அவர்கள் எழுப்பப்பட்ட இடங்களிலிருந்து மக்கள் வருவார்கள்.

பல்வேரு வகைகளாகவும், குழுமங்களாகவும் பிரிந்து வருவார்கள். அல்லாஹ் அவர்கள் செய்த நற்செயல்கள், தீமைகளையும் அவர்களுக்கான கூலியையும் கண்முன்னே காட்டுவான்

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.

அல்லாஹ் கூறுகிறான்

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا

ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.

وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا
இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்;

இந்த ஆயத்துகள் , நன்மைகள் சிறிதானாலும் குறைந்தளவினாலும் செய்வதற்கு ஊக்குவிக்கிறது, இன்னும் தீமைகளை எவ்வளவு சிறிதானாலும், குரைவானாலும் அதைவிட்டு விலக அச்சமூட்டுகிறது.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply