சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1

  • بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
    سُورَةُ الْفَاتِحَةِ
    (قَوْلُهُ تَعَالَى: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
    ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்:

அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே? எப்போது? என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்:

وَلَهُ الْحَمْدُ فِسّ

இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்.

(சூரா அர்ரூம்:18)

மேலும் சூரத்துல் கஸஸில் அல்லாஹ்விற்கு எப்பொழுது புகழ் என்று கூறுகிறான்:

وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلْحَمْدُ فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِۖ

அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லவே இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன! .

அல் கஸஸ் 28:70

சூரா சப்அவின் ஆரம்பத்தில் கூறுகிறான்:

وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْءَاخِرَةِۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்

சூரா அல் சப்அ 34:1.

அல்ஹம்து எனும் சொல்லில் “அல்” எனும் எழுத்து வருவதால் இச்சொல் அனைத்து வகை புகழையும் குறிக்கும்.

இந்த ஆயத்தில் அல்லாஹ் தன்னை தானே புகழ்ந்துள்ளான், அதே நேரம் தன் அடியார்களையும் புகழுமாரு கட்டளை இடுகிறான்.

رَبِّ ٱلْعَٰلَمِينَ

அகிலத்தாரின் அதிபதி

ஆலமூன் (அகிலங்கள்) எனும் சொல்லின் விளக்கத்தை அல்லாஹ் இங்கு கூறவில்லை, மற்றோர் இடத்தில் அல்லாஹ் விளக்கியுள்ளான்

﴿قالَ فِرعَونُ وَما رَبُّ العالَمينَ۝قالَ رَبُّ السَّماواتِ وَالأَرضِ وَما بَينَهُما إِن كُنتُم موقِنينَ﴾

ஃபிர்அவ்ன்; “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.

அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் ( நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)” என்று கூறினார்.

அஷ்ஷுஅரா 23-24

உலமாக்களில் சிலர் “ஆலமூன்” எனும் சொல் “அலாமத் – அடையாளம்” எனும் மூலச்சொள்ளிருந்து வருகிறது என்கின்றனர். ஏனென்றால் அகிலங்கள் இருப்பது, முழுமையான பண்புகளும்,வல்லமையும் கொண்ட படைப்பாளன் உள்ளான் என்பதற்கு அத்தாட்சியாகவும் அடையாளமாகவும் இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَءَايَٰتٍ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

ஆலி இம்ரான்: 190﴿

 

الرَّحمنِ الرَّحيمِ

(அவன்) அர்ரஹ்மான், அர்ரஹீம்.

இவையிரண்டும் அல்லாஹ்வின் பண்புகளை விவரிக்கும் சொற்கள், அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் இரு பெயர்கள். ரஹ்மத் (கருணை) எனும் வேர் சொல்லிலிருந்து தோன்றும் இச்சொற்கள் கருணையின் உச்ச நிலையை குறிக்கும். ரஹ்மான் எனும் பெயர் ரஹீம் எனும் பெயரைவிட ஆழ்ந்த, மிகைத்த அர்த்தம் கொண்டது, ஏனென்றால், ரஹ்மான் என்பவன் இம்மயில், அனைத்து படைப்புகளின் மீதும் முழுமையான கருணை கொண்டவன், மறுமையில் மூமின்கள் மீது கருணை காட்டுபவன்.

அர்ரஹீம் என்பவன் மறுமையில் மூமின்கள் மீது கருணை காட்டுபவன்.

இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. இமாம் இப்னு ஜரீரின் சொற்களிலிருந்து இந்த விடயத்தில் உலமாக்கள் மத்தியில் எகோபித்த கருத்து (இஜ்மா) உள்ளதாக அறியலாம். மேலும் இப்னு கஸீர் குறிப்பிடுவதை போல், ஸலஃபுகளில் (முன்னோர்களில்) சிலரின் த்ஃப்சீர்களில் இதைகானலாம்.

ஈஸா அறிவிக்கும் ஒரு ஹதீஸிலும் இதே கருத்தே கிடைக்கிறது, நபி ,صلى الله عليه وسلم கூறுகிறார்கள், “அர்ரஹ்மான் இம்மை மற்றும் மறுமையின் ரஹ்மானாவான், அர்ரஹீம் மறுமையின் ரஹீமாவான்”

[இமாம் இப்னு அல் ஜவ்ஸீ இந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் வகையில் சேர்க்கிறார்.]

இதே பொருளை உணர்த்தும் வண்ணம், அல்லாஹ் பின்வரும் ஆயத்துகளில் குறிப்பிடுகிறான்.

ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَن

பின்னர், அவன் ‘அர்ஷின்’ மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்).

அல் ஃபுர்கான் : 59

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى

ரஹ்மான் அர்ஷின்மீது உயர்ந்து விட்டான்.

தாஹா:5

அவனின் கருணை அனைத்து படைப்புகளுக்கும் சொந்தமானது என்பதால், அவனின் உயர்வை ரஹ்மான் எனும் பெயருடன் சேர்த்து கூறுகிறான். இதையே இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்.

இது போன்ற மற்றோர் ஆயத்,

أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَٰٓفَّٰتٍ وَيَقْبِضْنَۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَٰنُۚ

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை –

அதாவது பறவைகளுக்கு அவன் காட்டிய கருணை, சிறகுகளை விரித்தும் மடக்கியும் வானத்தில் பறக்கும் பொழுது, கீழே விழாமல் அவற்றை அவன் பாதுகாப்பதும், அவனுடய ரஹ்மானியத்தில் சேர்ந்தது.

இவ்விடயத்தில் மிக தெளிவான ஆதாரங்களில் ஒன்று

ٱلرَّحْمَٰنُ

அளவற்ற அருளாளன்,

என்று துவங்கி

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

வரை உள்ள அற்றஹ்மான் சூராவின் ஆயத்துகள்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا

மேலும், அவன் முஃமின்களிடம் ரஹீமாக இருக்கின்றான்.

அல் அஹ்ஸாப்: 43

ஆக, ரஹீம் எனும் தன்னுடைய பெயரை முஃமின்களுக்குமட்டம் பிரத்தியேகமாக ஆக்கினான்,

” நபியிடமிருந்து அறிவிக்கப்படும் ‘அவன் இம்மை மறுமையின் ரஹ்மான் மற்றும் அவற்றின் ரஹீம்’ எனும் வார்த்தைகளுக்கு நீங்கள் இதுவரை கூறிய கருத்து முரணாக உள்ளதே?” என்று யாரேனும் கேட்டாள், அதன் பதில்:

நாம் கூறியது போல் அல்லாஹு மூஃமின்களுக்கு மட்டமே ரஹீம், ஆனால் மூஃமிங்களுக்கான அவனுடய இந்த கருணை, மறுமையில் மட்டும் இல்லை, இம்மயிலும் மறுமையிலும் அவன் மூஃமீன்களுக்கு ரஹீமாவான்.

அவன், மூஃமீன்களின் மீது இம்மயிலும் ரஹீம் என்பதற்கு ஆதாரம், பின்வரும் ஆயத்தின் பொருள்:

هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا

அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக (ரஹீமாக) இருக்கிறான்.

அல் அஹ்ஸாப்: 43

அவர்களை இருளிலிருந்து வெளியேற்றிய அல்லாஹ்வின் இந்த அருள், அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் செய்த கருணை, அது மறுமையின் கருணைக்கு காரணமாக இருந்த நிலையிலும் சரி.

இதற்கு இன்னுமோர் ஆதாரம்:

لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِىِّ وَٱلْمُهَٰجِرِينَ وَٱلْأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِى سَاعَةِ ٱلْعُسْرَةِ مِنۢ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْۚ إِنَّهُۥ بِهِمْ رَءُوفٌ رَّحِيمٌ

நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் – நிச்சயமாக அவன் அவர்கள் மீது ரவூஃபாகவும், ரஹீமாகவும் இருக்கின்றான்.

அத்தவ்பா:117

இந்த ஆயத்தில் அல்லாஹ்வுடைய ரஹ்மத், நபி மற்றும், அவரின் தோழர்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுடனும், அவர்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்புடனும் இணைத்து கூறப்பட்டுள்ளது.இவை அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் செய்த ரஹ்மத், அது மறுமையின் ரஹ்மதிர்க்கு கார்ணமாக இருந்தாலும் சரி! அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

(அவனே ) தீனுடைய நாளின் அதிபதி(யும் ஆவான்).

தீன் என்றால் என்னவென்று அல்லாஹ் இவ்விடத்தில் விளக்கவில்லை, மற்றோரிடத்தில் அல்லாஹ் விளக்கிக்கூறுகிரான்:

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

நியாயத் தீர்ப்பு (தீனுடைய) நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

பின்னும் – நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔاۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

அல் இந்ஃபிதார்:17-19

இந்த ஆயத்தில் தீன் எனும் சொல்லின் அர்த்தம் “கூலி வழங்குதல்” என்பதாகும், பின் வரும் ஆயத்தை காணுங்கள்.

An-Nur 24:25

يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ ٱلْمُبِينُ

அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்;

அந்நூர்: 25
لَمْ يَذْكُرْ لِحَمْدِهِ هُنَا ظَرْفًا مَكَانِيًّا وَلَا زَمَانِيّا وَذَكَرَ فِي سُورَةِ الرُّومِ أَنَّ مِنْ ظُرُوفِهِ الْمَكَانِيَّةِ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي قَوْلِهِ: (وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ) وَذَكَرَ فِي سُورَةِ الْقَصَصِ أَنَّ مِنْ ظُرُوفِهِ الزَّمَانِيَّةِ: الدُّنْيَا وَالْآخِرَةَ فِي قَوْلِهِ: (وَهُوَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ) ، وَقَالَ فِي أَوَّلِ سُورَةِ سَبَأٍ: (وَلَهُ الْحَمْدُ فِي الْآخِرَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ) ، وَالْأَلِفُ وَاللَّامُ فِي (الْحَمْدُ) لِاسْتِغْرَاقِ جَمِيعِ الْمَحَامِدِ. وَهُوَ ثَنَاءٌ أَثْنَى بِهِ تَعَالَى عَلَى نَفْسِهِ وَفِي ضِمْنِهِ أَمَرَ عِبَادَهُ أَنْ يُثْنُوا عَلَيْهِ بِهِ.
وَقَوْلُهُ تَعَالَى: (رَبِّ الْعَالَمِينَ) لَمْ يُبَيِّنْ هُنَا مَا الْعَالَمُونَ، وَبَيَّنَ ذَلِكَ فِي مَوْضِعٍ آخَرَ بِقَوْلِهِ: (قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا) [٢٦ \ ٢٣، ٢٤] .
قَالَ بَعْضُ الْعُلَمَاءِ: اشْتِقَاقُ الْعَالَمِ مِنَ الْعَلَامَةِ ; لِأَنَّ وُجُودَ الْعَالَمِ عَلَامَةٌ لَا شَكَّ فِيهَا عَلَى وُجُودِ خَالِقِهِ مُتَّصِفًا بِصِفَاتِ الْكَمَالِ وَالْجَلَالِ، قَالَ تَعَالَى: (إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ) [٣ \ ١٩٠] ، وَالْآيَةُ فِي اللُّغَةِ: الْعَلَامَةُ.
قَوْلُهُ تَعَالَى: (الرَّحْمَنِ الرَّحِيمِ)
همَا وَصْفَانِ لِلَّهِ تَعَالَى، وَاسْمَانِ مِنْ أَسْمَائِهِ الْحُسْنَى، مُشْتَقَّانِ مِنَ الرَّحْمَةِ عَلَى وَجْهِ الْمُبَالَغَةِ، وَالرَّحْمَنُ أَشَدُّ مُبَالَغَةً مِنَ الرَّحِيمِ ; لِأَنَّ الرَّحْمَنَ هُوَ ذُو الرَّحْمَةِ الشَّامِلَةِ لِجَمِيعِ الْخَلَائِقِ فِي الدُّنْيَا، وَلِلْمُؤْمِنِينَ فِي الْآخِرَةِ، وَالرَّحِيمُ ذُو الرَّحْمَةِ لِلْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ. وَعَلَى هَذَا أَكْثَرُ الْعُلَمَاءِ. وَفِي كَلَامِ ابْنِ جَرِيرٍ مَا يُفْهَمُ مِنْهُ حِكَايَةُ الِاتِّفَاقِ عَلَى هَذَا. وَفِي تَفْسِيرِ بَعْضِ السَّلَفِ مَا يَدُلُّ عَلَيْهِ، كَمَا قَالَهُ ابْنُ كَثِيرٍ، وَيَدُلُّ لَهُ الْأَثَرُ الْمَرْوِيُّ عَنْ عِيسَى كَمَا ذَكَرَهُ ابْنُ كَثِيرٍ وَغَيْرُهُ، إِنَّهُ قَالَ عَلَيْهِ وَعَلَى نَبِيِّنَا الصَّلَاةُ وَالسَّلَامُ: الرَّحْمَنُ رَحْمَنُ الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالرَّحِيمُ رَحِيمُ
الْآخِرَةِ.

.

وَقَدْ أَشَارَ تَعَالَى إِلَى هَذَا الَّذِي ذَكَرْنَا حَيْثُ قَالَ: (ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ) ، وَقَالَ: (الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) ، فَذَكَرَ الِاسْتِوَاءَ بِاسْمِهِ الرَّحْمَنُ لِيَعُمَّ جَمِيعَ خَلْقِهِ بِرَحْمَتِهِ، قَالَهُ ابْنُ كَثِيرٍ. وَمِثْلُهُ قَوْلُهُ تَعَالَى: (أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ) أَيْ: وَمِنْ رَحْمَانِيَّتِهِ: لُطْفُهُ بِالطَّيْرِ، وَإِمْسَاكُهُ إِيَّاهَا صَافَّاتٍ وَقَابِضَاتٍ فِي جَوِّ السَّمَاءِ. وَمِنْ أَظْهَرِ الْأَدِلَّةِ فِي ذَلِكَ قَوْلُهُ تَعَالَى: (الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ) إِلَى قَوْلِهِ: (فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ) ، وَقَالَ: (وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا) فَخَصَّهُمْ بِاسْمِهِ الرَّحِيمِ. فَإِنْ قِيلَ: كَيْفَ يُمْكِنُ الْجَمْعُ بَيْنَ مَا قَرَّرْتُمْ، وَبَيْنَ مَا جَاءَ فِي الدُّعَاءِ الْمَأْثُورِ مِنْ قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحْمَانُ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيمُهُمَا» . فَالظَّاهِرُ فِي الْجَوَابِ، وَاللَّهُ أَعْلَمُ، أَنَّ الرَّحِيمَ خَاصٌّ بِالْمُؤْمِنِينَ كَمَا ذَكَرْنَا، لَكِنَّهُ لَا يَخْتَصُّ بِهِمْ فِي الْآخِرَةِ؛ بَلْ يَشْمَلُ رَحْمَتَهُمْ فِي الدُّنْيَا أَيْضًا، فَيَكُونُ مَعْنَى: «رَحِيمُهُمَا» رَحْمَتُهُ بِالْمُؤْمِنِينَ فِيهِمَا.
وَالدَّلِيلُ عَلَى أَنَّهُ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ فِي الدُّنْيَا أَيْضًا: أَنَّ ذَلِكَ هُوَ ظَاهِرُ قَوْلِهِ تَعَالَى: (هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا) لِأَنَّ صَلَاتَهُ عَلَيْهِمْ وَصَلَاةَ مَلَائِكَتِهِ وَإِخْرَاجَهُ إِيَّاهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ رَحْمَةٌ بِهِمْ فِي الدُّنْيَا. وَإِنْ كَانَتْ سَبَبَ الرَّحْمَةِ فِي الْآخِرَةِ أَيْضًا، وَكَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: (لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ) [٩ \ ١١٧] فَإِنَّهُ جَاءَ فِيهِ بِالْبَاءِ الْمُتَعَلِّقَةِ بِالرَّحِمِ الْجَارَّةِ لِلضَّمِيرِ الْوَاقِعِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ، وَتَوْبَتُهُ عَلَيْهِمْ رَحْمَةٌ فِي الدُّنْيَا وَإِنْ كَانَتْ سَبَبَ رَحْمَةِ الْآخِرَةِ أَيْضًا. وَالْعِلْمُ عِنْدَ اللَّهِ تَعَالَى.

وَقَوْلُهُ: (مَالِكِ يَوْمِ الدِّينِ)
لَمْ يُبَيِّنْهُ هُنَا، وَبَيَّنَهُ فِي قَوْلِهِ: (وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا) الْآيَةَ [٨٢ \ ١٧، ١٨، ١٩] .
وَالْمُرَادُ بِالدِّينِ فِي الْآيَةِ الْجَزَاءُ. وَمِنْهُ قَوْلُهُ تَعَالَى: (يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ اللَّهُ دِينَهُمُ الْحَقَّ) أَيْ: جَزَاءُ أَعْمَالِهِمْ بِالْعَدْلِ.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: