தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ?

கேள்வி : ஒருவர் தாவாஃப் செய்ய துவங்கி, மூன்று, நான்கு சுற்றுகள் முடித்துவிட்டார், இந்நிலையில் ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும்? தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா? தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால்,  மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா?

பதில் : ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால், அவர் தவாஃப் செய்வதை நிறுத்திவிட்டு, ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுக வேண்டும். தொழுகை முடிந்து, இமாம் ஸலாம் கொடுத்ததும், அவர் எழுந்து தாவாஃபில் மீதம் உள்ளதை முடிக்கட்டும்.

அவர் தாவாஃபின் சுற்று ஒன்றை பாதியில் நிறுத்தியிருந்தால் , எந்த இடத்தில் நிறுத்தினார் என்று நினைவிருந்தால், அங்கிருந்தே துவங்கலாம்.

அவர் தாவாஃபையும் முழுமையாக முதலிருந்து துவங்க வேண்டிய அவசியம் இல்லை, பாதியில் விட்ட அந்த சுற்றையும் முதலிருந்து துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

-ஷேக் முஹம்மத் இபின் ஸாலிஹ் அல் உஸைமீன்.-

 

[فتاوى الحج أجاب عليها شيخ محمد ابن صالح العثيمين  ص. 20 [دار ابن القيم

 

தவாஃப்
தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ?
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply