செல்போன்களிலிருந்து குர்ஆன் ஓதுவதற்கு தூய்மை அவசியமா?

கேள்வி:
சில செல்போன்களில், குர்ஆன் மென்பொருள்கள் உள்ளன, இதனால் ஒருவர் தான் எந்த நேரம் விரும்பினால், குர்ஆனை எடுத்து ஓத இயலும். என் கேள்வி, இவ்வாறு ஓதுவதற்கு தூய்மை அவசியமா?

பதில்:
புகழனைத்தும் இறைவனுக்கே,

குர்ஆனின் எழுத்துகளும், கிறாஅத்துகளும் இருக்கும் இந்த செல்போன்கள் முஸ்ஹஃப்களை போன்றல்ல, இதை தூய்மையின்றி தொடுவது அனுமதிக்கப்பட்டது, அதை எடுத்துக்கொண்டு நீங்கள் கழிவறைகளுக்குள்ளும் செல்லலாம். ஏனென்றால் இந்த செல்போன்களில் வரும் எழுத்துகள் முஸ்ஹஃபின் எழுத்துக்கள் போன்றல்ல, இந்த எழுத்துகள் அலைகளைப்போன்ற வடிவங்களை பெறுகின்றது, தோன்றி மறையவும் செய்கிறது, மேலும் குர்ஆனை தவிர வேறு விஷயங்களும் அதில் உள்ளது .

ஷேக் அப்துர்ரஹ்மான் இபின் நாஸிர் அல்பர்ராக்கிடம் இது குறித்து கேட்கப்பட்டது, அதற்க்கு அவர் பதிலளித்தார்:

“புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் இறுதி நபியின் மீது உண்டாகட்டும். குர்ஆனை நினைவிலிருந்து ஓத உதுவுடன் இறப்பது அவசியம் இல்லை என்பது அறிந்ததே, ஏன் குளிப்புக்கடமையான நிலையிலும் ஓதலாம், ஆனால் மனதிலிருந்து ஓதும்போதும் தூயமையுடன் இருப்பது சிறந்தது. குர்ஆனை கண்ணியப்படுத்துவதில் இதுவும் ஒன்று.

முஸ்ஹஃபை பொறுத்தமட்டில், அதை தொடுவதற்கு தூய்மையாக இருப்பது அவசியம், இதற்க்கு ஆதாரம் ‘குர்ஆனை தூய்மையானவரை தவிர யாரும் தொடக்கூடாது’ எனும் பிறபலியமான ஹதீஸ், மேலும் சஹாபாக்களிடம் இருந்து வந்துள்ள அறிவிப்புகள், இது தான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும், அதாவது குர்ஆனை ஓதுவதற்க்காகவோ, அல்ல வேறு காரணங்களுக்காகவோ, தூய்மையானவரை தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்பது.

இதிலிருந்து, செல்போன்களில் உள்ள குர்ஆன் மென்பொருள்கள் முஸ்ஹஃபை போலல்ல என அறியலாம். அதில் உள்ள எழுத்துக்கள் நாம் படிக்கும் வடிவத்தில் இல்லை, அவை தேவைப்படும் போது தோன்றுகின்றன, நாம் வேறு பக்கம் திருப்பினால் மறைந்துவிடுகின்றன. ஆகையால் குர்ஆன் இருக்கும் செல்போன்கள், கேசெட்டுகள் ஆகியவற்றை தூய்மையற்ற நிலையில் தொடுவதும், ஓதுவதும் அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.”

ஷேய்க் பவ்ஃஸானிடம் ஒருவர்: “நான் குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் உடையவன், பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு முதலாக சென்றுவிடுவேன், என்னிடம் இந்த நவீன செல்போன் உள்ளது, அதில் முழு குர்ஆனும் உள்ளது. சில வேலை நான் தூய்மையற்ற நிலையில் சில பகுதிகளை ஓதுகிறேன். செல்போன்களில் இருந்து ஓத தூய்மை அவசியமா?” என்று கேட்டார்.

அதற்கவர் பதிலளித்தார்: “நவீன கால வசதிகளில் இதுவும் ஒன்று, முஸ்ஹப்கள் பள்ளிவாசல்களில், அழகான எழுத்துகளில் நிறையவே இருக்கின்றன, செல் போன்களில் ஓதும் அவசியம் இல்லை. ஆனால் ஒருவருக்கு தேவைப்பட்டால்.. அது முஸ்ஃஹபின் சட்டத்தில் வராது”

“முஸ்ஹஃப்களை, தூய்மையில்லாமல் தொடக்கூடாது, இந்த ஹதீஸில் வருவதைப்போல் ‘குர்ஆனை தூய்மையானவரை தவிர வேறு யாரும் தொடக்கூடாது’. செல்போன்களை பொறுத்தமட்டில், அவை முஸ்ஹஃப் என்று கூற முடியாது”

குர்ஆனை செல்போனிலிருந்து பாத்துஓதுவதனால் மாதவிடாய் பெண்களுக்கும், முஸ்ஹஃபை எளிதில் எடுத்து செல்ல இயலாதவருக்கும், உது செய்வதற்கு கடினமான இடங்களிலும் இலகுவாகிறது.

Help us translate
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

1 thought on “செல்போன்களிலிருந்து குர்ஆன் ஓதுவதற்கு தூய்மை அவசியமா?”

  1. Pingback: மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ? - IslamQ&A Tamil

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: