சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்

கேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்?

பதில்:

ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள்  உண்டு
1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது
2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும்.

இவ்விரண்டு அடிப்படை ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى الله عليه وسلم

ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்,

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ – 98:5

மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதையும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சரியான, நேரிய தீன் ஆகும்.

[அல்குர்ஆன் 98:5]

மேலும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.” [ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்]

மேலும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும். [ஸஹீஹ் முஸ்லிம்]

இது தான் ஹாஜிகள் கடைபிடிக்கவேண்டிய விஷயங்களிலேயே மிக முக்கியமானது, இக்லாஸும், றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவதும் صلى الله عليه وسلم.

நபி صلى الله عليه وسلم தன்னுடைய ஹஜ்ஜில் கூறினார்கள்:
நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

[ஸஹீஹ் முஸ்லிம்]

3) ஹஜ்ஜை ஹலாலான செல்வத்தை கொண்டு செய்யவேண்டும், ஹராமான செல்வத்தை கொண்டு ஹஜ் செய்வது ஹராமாகும், அறிஞர்களில் சிலர் இவ்வாறு ஹஜ் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறார்கள், சிலர்: “ஹராமான செல்வதில் நீ ஹஜ் செய்தால்.. ஹஜ் செய்தது நீ அல்ல உன்னுடைய ஒட்டகம் தான்” என்றும் கூறுகிறார்கள்

4) அல்லாஹ் தடுத்ததிலிருந்து விலகிக்கொள்வது:

 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ

ஹஜ்ஜுக்குரிய காலம்  அறியப்பட்ட மாதங்களாகும், ஆகவே, அவற்றில் எவரொருவர் (இஹ்ராம் கட்டுவதன் மூலம்) ஹஜ்ஜை (த்தன் மீது) கடமையாக்கிக் கொண்டால், தாம்பத்திய உறவு கொள்வதும், கெட்ட பேச்சுக்கள் பேசுவதும், வீண் தர்க்கம் செய்வதும், ஹஜ்ஜில் கூடாது.

[அல் குர்ஆன் 2:197]

ஹஜ்ஜிலும் மற்ற காலங்களிலும், அல்லாஹ் ஹராமாக்கிய பாவங்கள், அசிங்களை செய்வதிலிருந்து, பார்ப்பதிலிருந்து, கேட்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

ஹாஜிகளுக்கு தனியாக  அல்லாஹ் ஹராமாக்கியவற்றை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும், உதாரணமாக மனைவியருடன் சேர்வது, தலை முடியை நீக்குதல். நபி صلى الله عليه وسلم இஹ்ராமின் போது உடுக்க தடை விதித்தவற்றை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும்.

ஆக இஹ்ராமில் உல்லவருக்கு தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு விலகவேண்டும்.

 

5) ஹாஜிகள் தங்கள் செயல்களிலும், செல்வங்கள் விஷயத்திலும் பண்புடனும், மென்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும்  .

தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களுடன் எவ்வளவு பண்புடன் நடக்க இயலுமோ அதை செய்யவேண்டும்.
ஹஜ் கிரிகைகளின் இடங்களிலும், வீதிகளிலும், சந்தைகளிலும்,  யாருக்கும் எந்த வகையிலும் தீங்கிழைக்கக்கூடாது. தவாஃபில், ஸயீயில், கல்லெறியும்போது கூட்ட நெரிசலில் யாருக்கும் தீங்கிழைக்க கூடாது.

இந்த விஷயங்களை ஹாஜிகள் தங்களுடைய ஹஜ்ஜுகளின் போது கடைப்பிடக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்க உங்களுக்கு உதவுவது:

1)மார்க்க அறிவுடைய ஒரு ஆலிமான மனிதருடன் சேர்ந்து செல்வது.

2)அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால் ஹஜ் செல்லும் முன்னர் நம்பிக்கைக்குரிய ஒரு ஆலிமின் கிதாபை படித்துவிட்டு செல்லுங்கள், இதன் மூலம் அல்லாஹ்வை தெளிவான இல்முடன் வணங்க இயலும்

 

-ஷேக் முஹம்மது இபின் ஸாலிஹ் அல் உஸைமீன்-

ஷேக் முஹம்மது இபின் ஸாலிஹ் அல் உஸைமீனின்  ஃபத்வா மற்றும் எழுத்துகளின் கோர்வை 21 பாகம்: பக்கம் 21-23

[مجموع الفتاوى و رسائل فضيلة الشيخ محمد ابن صالح العثيمين- جمع و ترتيب فهد ابن ناصر إبراهيم السليمان ٢١/ ٢٠-٢٢ ]

 

ஹஜ் மப்ரூர்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply