சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு ... Read more

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?

கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் ... Read more

வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும். வாந்தி என்பது ... Read more

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம்

கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன்  படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை  சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது. ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979 ஷேக் இப்னு உஸைமீன் ... Read more

ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா? மெளலவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி: ஜுமுஆ தொழுகை நிறைவேற்றுவதிலுருந்து “அஹ்லுல் அஃதார்” (ஷரீஅத் வழங்கும் தகுந்த காரணங்கள் படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்) விதிவிலக்கு வழங்கப்படுகிறார்கள். உதாரணமாக பிரயாணி 10 பேருடன் பிரயாணம் செய்கிறார் என்றால் தொழுகை நேரம் வரும்போது சுருக்கியோ, சேர்த்தோ தொழுவார் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிரயாணிகள் ஜுமுஆ தொழுகை நடத்தியதாக எந்த ... Read more

கொள்ளை நோய், அல்லது கொள்ளை நோய் பரவும் எனும் அச்ச காலத்தில் ஜும்ஆ தொழுகை, ஜமாஆத் தொழுகைக்கு செல்வதன் சட்டம்

கேள்வி: கொள்ளை நோய் பரவும் காலத்திலும் கொள்ளை நோய் பரவும் எனும் அச்சம் நிலவும் சூழ்நிலையிலும், ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுக்காமல் இருப்பதன் சட்டம் என்ன? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கு. சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்கள் குழு ஹிஜ்ரி 16/7/1441 தேதி அன்று பின் வரும் ஃபத்வாவை வெளியிட்டது: எல்லா புகழும் இறைவனுக்கே, அவன் தான் அகிலங்களின் அதிபதி, ஸலாத்தும் ஸலாமும் நம் முஹம்மது நபியின் மீதும் அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும், அவரை பின் ... Read more

குர்ஆனின் சில பாகங்களை மனனம் செய்து விட்டு பின்னர் மறந்துவிட்டார்!

கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மனனம் செய்ய குர்ஆனின் சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும்பொழுது, முந்தைய வகுப்பின் சூறாக்கள் சிலவற்றை மறந்துவிடுகிறோம். இது ஹராம் ஆகுமா? பதில்: உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு குர்ஆனின் சில பகுதிகளின் மனனத்தை கொடுத்தால், அது ஒரு மிகப்பெரும் அருட்கொடை என்பதை அறியுங்கள். அதை அவா் அலட்சியப்படுத்த வேண்டாம். குர்ஆனை மனனம் செய்த பின்பு மறப்பவரை கடுமையாக அச்சுறுத்தி ஓர் ... Read more

சிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்

கேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? பதில்: ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள்  உண்டு 1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது 2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும். இவ்விரண்டு அடிப்படை ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى ... Read more

தவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் ?

கேள்வி : ஒருவர் தாவாஃப் செய்ய துவங்கி, மூன்று, நான்கு சுற்றுகள் முடித்துவிட்டார், இந்நிலையில் ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும்? தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா? தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால்,  மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா? பதில் : ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால், அவர் தவாஃப் செய்வதை நிறுத்திவிட்டு, ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுக வேண்டும். தொழுகை முடிந்து, இமாம் ஸலாம் கொடுத்ததும், அவர் ... Read more

செல்போன்களிலிருந்து குர்ஆன் ஓதுவதற்கு தூய்மை அவசியமா?

கேள்வி: சில செல்போன்களில், குர்ஆன் மென்பொருள்கள் உள்ளன, இதனால் ஒருவர் தான் எந்த நேரம் விரும்பினால், குர்ஆனை எடுத்து ஓத இயலும். என் கேள்வி, இவ்வாறு ஓதுவதற்கு தூய்மை அவசியமா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே, குர்ஆனின் எழுத்துகளும், கிறாஅத்துகளும் இருக்கும் இந்த செல்போன்கள் முஸ்ஹஃப்களை போன்றல்ல, இதை தூய்மையின்றி தொடுவது அனுமதிக்கப்பட்டது, அதை எடுத்துக்கொண்டு நீங்கள் கழிவறைகளுக்குள்ளும் செல்லலாம். ஏனென்றால் இந்த செல்போன்களில் வரும் எழுத்துகள் முஸ்ஹஃபின் எழுத்துக்கள் போன்றல்ல, இந்த எழுத்துகள் அலைகளைப்போன்ற வடிவங்களை பெறுகின்றது, ... Read more