இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்தனை முறை கூற வேண்டும்

மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்
https://islamqa.info/ar/answers/70298
புகழனைத்தும் இறைவனுக்கே.

இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்sds

தனை முறை கூற வேண்டும் என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதில் சரியான கருத்து, இரு தொழுகைகளுக்கும் சேர்த்து ஒரு முறை அதான் கூற வேண்டும், மேலும் ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் ஒருமுறை இகாமத் கூற வேண்டும் என்பதே. இதுவே ஹனஃபிகள், ஹன்பலிகளின் கருத்து, ஷாஃபிகளிடம் இதுவே சரியான கருத்து. சில மாளிகிகளும் இந்த கருத்தில் தான் இருக்கின்றனர்.
[மவ்சூஅத்துள் பிக்கிய்யா]m

இதற்கான ஆதாரம், நபி صلى الله عليه وسلم அவர்கள் இறுதி ஹஜ்ஜில் இவ்வாறு செய்தார்கள் என்று வந்துள்ள ஆதாரப்பூர்வனமான ஹதீஸ். அவர் துஹர் மற்றும் அஸர் தொழுகைகளை அரஃபாவில், ஒரு அதானுடனும், இரு இகாமத்துகளுடனும், இணைத்து தொழுதார்கள்
அதே போன்று மக்ரிப் மற்றும் இஷாவை முஸ்தலிஃபாவில் சேர்த்து ஒரு அதானுடனும், இரு இகாமத்துகளுடனும் தொழுதார்கள்..

ஜாபிர் رضي الله عنه நபியின் صلى الله عليه وسلم ஹஜ்ஜை விவரிக்கும் போது அறிவிக்கின்றார்:
பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச்செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை……இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு “தொழுகை அறிவிப்பு”ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

[ஸஹீஹ் முஸ்லிம்]

நிரந்திர பஃத்பவா குழுவிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது:
“மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகள் இரண்டும் இணைத்து இரு அதான்களுடன், மழை காலங்களில் தொழுகப்படும்” என்று சில உலமாக்கள் கூறுகின்றனர், இதன் சட்டம் என்ன?
அவர்கள்: “பயணம், நோய், மழை போன்ற தகுந்த காரணங்கள் அமைந்தால் மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை ஒரு அதான் மற்றும் இரு இகாமத்துகளுடன் தொழுவது தான் சுன்னத். இது தான்
நபியின் صلى الله عليه وسلم செயல்களிலிருந்து, பெறப்பட்ட ஸஹீஹான சுன்னாஹ்வில் இடம் பெற்றுள்ளது, ” என்று பதிலளித்தனர்.

[ஃபதாவை லஜ்னா அத் தாயிமா ]

ஷேக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் கூறுகின்றார்:
“ஒரு மனிதர் இரு தொழுகைகளை இணைத்து தொழுதால், முதலாவது தொழுகைக்கு அதான் கூறட்டும், பின்னர் இரு கடமையான தொழுகைகளுக்கும் இகாமத் கூறட்டும், இது அவர் ஊரில் இல்லாத சமயத்திற்கான சட்டம். அவர் ஒரு ஊரில் இருந்தால், அந்த ஊரின் அதானே அவருக்கு போதுமானது, அவர் இகாமத் மட்டும் கூறினால் போதும்.

இதற்கான ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஜாபிர் رضي الله عنه அவர்களின் ஹதீஸ், அவர் நபி صلى الله عليه وسلم அரஃபாவில் அதான் கூறி, இகாமத் கூறி துஹர் தொழுதார், பின்னர் மீண்டும் இகாமத் கூறி அஸ்ர் தொழுதார், அதே போன்று முஃஸ்தலிபாவில் அதான் கூறி, இகாமத் கூறி மக்ரிப் தொழுதார் பின்னர் இகாமத் கூறி இஷா தொழுதார்”
[ஷரஹ் அல் மும்தி ]

அதான் மட்டும் இகாமத்தை பொறுத்தவரை அவை ஃபர்து கிஃபாயாவாகும், அதாவது ஒரு கூட்டத்தில் ஒருவர் அதான் மட்டும் இகாமத் கூறினால் அதுவே போதுமானது, அனைவரும் கூறவேண்டிய அவசியம் இல்லை. நாம் முன் கூறிய ஷேக் உஸைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து, ஒருவர் ஒரு ஊரில் இருந்து, அந்த ஊரின் மஸ்ஜிதுகளில் அதான் கூறப்பட்டுவிட்டால், அவருக்கு அது போதுமானது, அவர் தொழுகைக்கு இகாமத் மட்டும் கூற வேண்டும்.

மேலும் ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் கூறுகின்றார்: “அதான் மட்டும் இகாமத் கடமையானது என்பதற்கு ஆதாரம், பல ஹதீஸ்களில் நபி صلى الله عليه وسلم கட்டளை இட்டது, மேலும் அவர் ஊரிலும், பயணத்திலும் என்றும் அதானும் இகாமத்தும் கூறி தொழுதது, மேலும் பெரும்பாலும் தொழுகையின் நேரங்கள் அதான் இல்லாமல் தெரிவதில்லை, மேலும் அவை இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று, ஆகியவற்றிலிருந்து தெரிகிறது.

“மேலும் அவை இரண்டும் பயணிகளின் மீதும், பயணம் செய்யாதவர்கள் மீதும் கடமையானவை. இதற்க்கு ஆதாரம்

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்’ என்று கூறினார்கள்.
[புகாரி, முஸ்லீம் ]

அவர்கள் நபியிடம் வந்து பின்னர் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் அதான் கூறுமாறு அவர்களுக்கு கட்டளை இட்டார். மேலும் நபி அவர்கள் எப்போதும், பயணத்திலும், பயணம் அல்லாத சமயங்களிலும் ஒரு போதும் அதானையும் இகாமத்தையும் புறக்கணித்தது இல்லை. அவர் பயணித்த பொழுது பிலாலை அதான் கூறுமாறு ஏவுவார்.

பயணத்திலும், பயணம் அல்லாத பொழுதுகளிலும் அதான் மட்டும் இகாமத் கூறுவது கட்டாயம் என்பதே சரியான கருத்து. அவர்கள் தொழுகைகளை இணைத்து தோலுக்காவிட்டாடல் ஐந்து நேரமும் அதான் கூற வேண்டும்.சேர்த்து தொழுதால், ஒரு அததானும், இரு இகாமத்துகளுளம் கொடுக்க வேண்டும்.”
[ஷரஹ் அல் மும்தி ]

இறைவனே நன்கு அறிந்தவன்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply