____﷽_____
கேள்வி:
பிரார்த்தனை செய்யும்போது கை உயர்த்துவதின் சட்டமென்ன.
பதில்:
ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹைலி (ஹபிதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்.
பிராத்தனை செய்யும்போது கை உயர்த்துவதற்கு மூன்று நிலைகள் இருக்கின்றது.
நபி அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அப்போது கையை உயர்த்தவும் செய்த நேரங்கள்.
இந்த நேரங்களில் கை உயர்த்துவது சுன்னத்தும், இபாதத்தும் ஆகும்.
உதா: ஸஃபா மர்வா ஏறும்போது பிரார்த்தனை செய்யும் பிரார்த்தனை.
நபி அவர்கள் கை உயர்த்தாமல் பிரார்த்தனை செய்த நேரங்கள்.
இந்த நேரங்களில் கை உயர்த்தல் பித்அத்தாகும். காரணம் நபி அவர்கள் அந்த நேரங்களில் கையை உயர்த்தியதில்லை
உதா: உரை நிகழ்த்திகின்ற நேரத்தில் கை உயர்த்தி பிரார்த்திப்பது.
நபி பிரார்த்தனை செய்தார்கள் என்றோ, அல்லது கையை உயர்த்தினார்கள் என்றோ வராத நேரங்கள்.
இந்த நேரங்களில் கை உயர்த்தலாம். ஆனால் அவ்வப்பொழுது கையை உயர்த்தாமலும் பிராத்திக்கலாம் இடையில் தவிர்ப்பது நல்லதாகும் காரணம் சில நேரங்களில் சுன்னத் என்று தவறாக எண்ணப்படும்.
உதா :
பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையிலுள்ள நேரங்களில் பிரார்த்தனை செய்யும்போது கையை உயர்த்துவது இந்த பிரிவில் தான் வரும்.
ஷைய்ஃக் சுலைமான் அர்-ருஹைலி உரையிலிருந்து எடுக்கப்பட்டது…
இதை குறித்து விரிவாக கேட்க்க
https://youtu.be/MiTeKeS90pw
மொழிப்பெயர்ப்பு: முஹம்மத் ரித்வான்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: