ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி:

ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா?

பதில்:
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும்.

ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.
கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், வானவர்கள், ஷய்தான்கள்) போன்ற மறைவான விடயங்களை மறுத்தல், அல்லாஹ்வின் மார்கத்தை இழிவாக கருதுவது, அதை கேலி செய்வது, இஸ்லாத்தின் சட்டங்கள் ஒழுங்குகளை துட்சப்படுத்துவது ஆகியவை.

இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் ஒரு முஸ்லிம், ‘மார்கங்கள் தான் மனிதர்களின் போதை பொருள்’ என்று கூறும் சித்தாந்தத்தை எப்படி பின்பற்றுவார்.

அல்லாஹ் பின்வரும் ஆயத்தில் மருக்கும் காஃபிர்களில் கம்யூனிஸ்டுகளும் ஒருவரே.

أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَٰلِقُونَ
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?

أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَۚ بَل لَّا يُوقِنُونَ

அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.

அத்தூர் 35-36

இது போன்ற நம்பிக்கைகள் கொண்ட ஒரு கூட்டத்தை முஸ்லிம்கள் இவ்வாறு பின்பற்ற முடியும்.

அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம்.

மொழிப்பெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்.
மூலம்: islamqa.info

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: