இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர்.

பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை.

*முதலாவது :*

இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும்.

*இரண்டாவது :*

யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ‌ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ‌ .

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்.

இங்கு இசையைப் பயன்படுத்துவது அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்புதல் என்ற விடயத்தினை கெடுத்துவிடும், மேலும் இறைவனை நினைவுகூருவதில் இருந்து அவர்களைத் திசைதிருப்பிவிடும்.

*மூன்றாவது :*

இவற்றை(இசைக்கருவிகளை)ப் பயன்படுத்துவது காபிர்களின் பழக்கமாகும்.
எனவே,குறிப்பாக அல்லாஹ் நமக்கு தடை விதித்த இசை போன்றவற்றில் இவர்களைப் பின்பற்றுவது அனுமதிக்கப்படமாட்டாது.

(அஸ்ஸஹீஹா 1/145)

விவாதிக்கும் திறன் வழங்கப்பட்டதன் பின்னரே நேர்வழியில் வாழ்ந்த ஒரு கூட்டத்தினர் வழிதவறிச் சென்றனர்.

(அஸ்ஸஹீஹ் )

அபிசீனியர்கள் மஸ்ஜிதில் விளையாடினார்கள் என்ற ஹதீஸைப் இசை ஹலால் என்பதற்கு ஆதாரமாக அவர்களில் சிலர் மேற்கோள் காட்டுகின்றனர்.

புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஸஹீஹில் இந்த ஹதீஸிற்கு “பெருநாள் தினத்தன்று ஈட்டிகள் மற்றும் கேடயங்கள் (மூலம் விளையாடுதல் ) பற்றிய அத்தியாயம் ” என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

போராயுதங்கள் மூலம் விளையாடவும் யுத்தத்திற்கு துணையாக இருக்கும் செயற்பாடுகளை மஸ்ஜிதில் மேற்கொள்ளவும் முடியுமென்று இந்த ஹதீஸ் விளக்குவதாக இமாம் நவவி( றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(ஷர்ஹு முஸ்லிம் )

தனக்கு சம்பந்தமில்லாத கலைகள் பற்றி ஒருவன் பேச ஆரம்பித்தால், இது போன்ற விசித்திரமான விடயங்களையே கூறுவான் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ் ) அவர்கள் கூறுவற்கமையவே இங்கு அனைத்தும் நடக்கிறது.

இரண்டு அடிமைப் பெண்கள் பாடியதாக குறிப்பிடும்
ஹதீஸையும் இசை ஹராம் என்பதற்கு சிலர் மேற்கோள் காட்டுகின்றனர்.

இங்கு நாம் இப்னுல் கய்யிம் (றஹ்) அவர்களின் பின்வரும் கருத்தினை தருகின்றோம்:

” ஆச்சரியம் என்னவென்றால்,பருவமடையாத இரண்டு இளம் பெண்கள் பெருநாளில் ஓர் இளம் பெண்ணிடம் பாடியதை வைத்து அதுவும் வீரம், போர், நல்லொழுக்கம் மற்றும் விழுமிய விடயங்கள் தொடர்பாக பாடப்பட்ட ஒரு அரேபிய கவிதையை வைத்துக் கொண்டு படுமோசமான தற்கால சமூக அமைப்பிலுள்ள இசை அனுமதிக்கப்பட்டது தான் என்று வாதிடுவதாகும்.

இன்றைய இசைக்கும் அன்றைய அந்த பாடலுக்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

மேலும், விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த ஹதீஸ் அவர்களின் இந்த கருத்திற்கு எதிரான மிகப்பெரிய சான்றுகளில் ஒன்றாகும்.

ஏனெனில், இதனையே ஷைத்தானின்(சங்கீதம்) புல்லாங்குழல் என்று அபூ பக்ர் (றழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதனைப்பார்த்து இவ்வாறு இவர் கூறியதை நபியவர்களும் ஏற்று அங்கீகரித்தார்கள்.

பருவமடையாத இவ்விரு இளம் பெண்களும் பாடுவதற்கு அனுமதித்தார்கள்.

எனவே,இவ்விருவரும் பாடியதிலோ அல்லது அவர்களின் பாடலை செவிமடுத்ததிலோ எதுவித தவறுகளுமில்லை.

நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத சமகால இசை ஹலால் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றதா ?

அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

இவர்கள் எப்படி இவ்வளவு தூரம் வழி தவறிப்போனார்கள் !! ”

(மதாரிகுஸ் ஸாலிஹீன் 1/493)

அந்த நேரத்தில் ஆயிஷா (றழி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள்.

இவர் பருவ வயதை அடைந்த பின்னர் இசையை இகழ்ந்து பேசியதாகவே தகவல்கள் கூறுகின்றன.

இவரின் மாணவரும் சகோதரனின் மகனுமான காஸிம் இப்னு முஹம்மத் என்பவர் இசையை இகழ்ந்து பேசுவதோடு இதனை கேட்கவிடாமல் மக்களை தடுத்துக்கொண்டுமிருந்தார் என்று இப்னுல் ஜௌஸி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(தல்பீஸு இப்லீஸ் 229 )

இசைக்கருவிகளை பயன்படுத்தியோ அல்லது அவை இல்லாமலோ பாடுவது ஹலாலாகும் என்று சில ஸூபிகள் இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்துக் கூறுகின்றனர்.

இவர்கள் இருவரும் பாடகர்கள் அல்ல என்று கூறுவதன் மூலம் இதற்கான தெளிவான மறுப்பினை ஆயிஷா (றழி) அவர்களே கூறுகிறார்கள்.

இசை அனுமதிக்கப்பட்டது என்று கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய அதே வார்த்தையை வைத்தே அவர்களுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு மறுப்பு தெரிவிக்க ஹதீஸில் இடம்பெற்ற வார்த்தைகளோடு மாத்திரம் வரையறை செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(பத்ஹுல் பாரி 443-2/442)

ஸஹாபக்களும் தாபியீன்களும் இசை கேட்டார்கள் அதில் அவர்கள் எந்த தவறையும் காணவில்லை என்று கூறுமளவிற்கு சிலர் துணிந்துவிட்டனர்!!

இவர்கள்(ஸஹாபாக்கள்) இசை தொடர்பாக இவ்வாறு தான் நடந்து கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஸஹீஹான ஸனதுகளுடன் கூடிய ஹதீஸ்களை முன்வைக்குமாறு நாம் அவர்களிடம் கோருகின்றோம் என்று அல் பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

” ஸனத் என்பது மார்க்கத்தின் பாற்பட்ட மிக முக்கியமான விடயமாகும். அது இல்லையெனில், ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதையெல்லாம் மார்க்கமாக கூறிவிடுவார்கள் ” என்று அப்துல்லா இப்னுல் முபாரக் (றஹ்) அவர்கள் கூறியதாக இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இசை ஹராம் என்று விளக்கும் அனைத்து ஹதீஸ்களும் கடுமையான விமர்சனங்களுக்குற்பட்டவை.
இது தொடர்பான எல்லா ஹதீஸ்களுமே ஹதீஸ் துறை அறிஞர்களால் மோசமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளன என்று சிலர் கூறுகின்றனர்!!

இவர்கள் கூறுவது போல இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் மோசமான விமர்சனத்திற்கு உற்பட்டவையல்ல. இவற்றில் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்குப் பிறகுள்ள மிகவும் நம்பகமான நூலெனக்கருதப்படும் ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில ஹதீஸ்கள் ஹஸன் மற்றும் லயீப் என்ற நிலைகளிலும் உள்ளன.

பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களுக்கூடாக அறிவிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் இவை “இசை” ஹராம் என்பதற்கு மிகத் தெளிவான உறுதிமிக்க ஆதாரங்களாக நோக்கப்படுகின்றன என்று இப்னு பாஸ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்கள் ஸஹீஹானவை என்று ஆபூ ஹாமித் அல் கஸ்ஸாலி தவிர்ந்த ஏனைய இமாம்கள் ஏகமனதாக தெரிவித்துள்ளனர்.

ஹதீஸ் துறை பற்றிய அறிவு அல் கஸ்ஸாலி அவர்களுக்கு கிடையாது. இப்னு ஹஸ்ம் அவர்களின் நிலையும் அவ்வாறே.

இவரின் தவறுகளை ஷெய்க் அல்பானி (றஹ்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகிறார்கள்.

இசை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களில் ஏதாவது ஆதாரபூர்வமானதாக இருந்தால் அதை நானே கூறி இருப்பேன் என்று இப்னு ஹஸ்ம் அவர்களே கூறுகிறார்கள்.

ஆனால், அறிஞர்களின் புத்தகங்கள் பெருகி, இந்த ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானவை என்ற செய்தி “தவாதுர்”எனும் அடிப்படையில் பரவியதால், இவை சரியானவை தான் என்று இக்கால மக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ளன.
ஆனாலும்,இவர்கள் இதனை புறக்கணிக்கின்றனர். இவர்கள் இப்னு ஹஸ்மைப் போன்றவர்கள் அல்ல.

இவரை விட இந்த விடயத்தில் இவர்கள் பன்மடங்கு கடினத்தன்மை கொண்டவர்கள்.

எனவே,இவர்கள் தகுதியற்றவர்களாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

இரவு நேர களியாட்டங்களுக்கு மத்தியில் மதுபானங்கள் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் சபைகளில் இசைப்பதன் காரணமாகத்தான் இசை ஹராம் என்று சிலர் கூறுகின்றனர்.

இசை, மது மற்றும் விபச்சாரம் போன்ற அனைத்தும் ஒரே சந்தர்ப்பத்தில் இணைந்ததாக நடந்தால் தான் இசை ஹராம் என்று கூற முடியாது.

அவ்வாறு கூறுவதாயின் ஹதீஸ்களில் மிகத் தெளிவாக ஹராமென நிரூபிக்கப்பட்ட விபச்சாரமும் மது அருந்தும் போதும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போதும் மாத்திரமே ஹராமென கூற வேண்டி வரும்.

இதற்கு அல்குர்ஆனின் பின்வரும் வசனத்திலுள்ள ஒரு விடயத்தினை உதாரணமாக கூறலாம் :

” إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين ”

ஏழைகளுக்கு உணவளிக்க வலியுறுத்தாக நேரத்தில் மட்டுமே அல்லாஹ்வை ஈமான் கொள்ளாமல் இருப்பது ஹராமாகும் என்று பிழையாக இந்த வசனத்திலிருந்து புரிய வேண்டிய நிலை உருவாகும்.

இவை போன்ற விடயங்கள் ஹராம் என்று கூறுவதற்கு வேறு ஆதாரங்கள் தேவை என்று கூறப்படுமானால்,முன்னர் குறிப்பிடப்பட்டது போல இசை ஹராம் என்று வேறு ஆதாரங்கள் மூலம் உணர்த்தப்பட்டுவிட்டது.

(நைலுல் அவ்தார் 8/107 )

“لهو الحديث”
என்பது இசையைக் குறிக்காது என்று சிலர் கூறுகின்றனர்.

இதற்கான மறுப்புரை முன்னரே வழங்கப்பட்டுவிட்டது.

இந்த வார்த்தை இசையைத் தான் குறிக்கிறது என்பதே இந்த வசனம் தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்களில் மிக உயர்ந்தது.

இது இசையையே குறிக்கிறது என்று இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் மூன்று முறை அல்லாஹ் மீது சத்தியம் செய்து கூறினார்கள் என்று கூறும் குர்துபி (றஹ்) அவர்கள் இந்த கருத்தினை முன்வைக்கும் இமாம்களையும் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் வேறு கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த தலைப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் முதலாவது முன்வைக்கப்பட்ட கருத்தே மிகவும் பொருத்தமானவையாகும்.

( தப்ஸீருல் குர்துபி )

இந்த விளக்கத்தினை முன்வைத்ததன் பின்னர் இபனுல் கய்யிம் (றஹ்)அவர்கள் பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, வஹி இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த ஸஹாபக்களினால் முன்வைக்கப்படும் குர்ஆனுக்கான தப்ஸீரானது புஹாரி முஸ்லிம் ஆகிய இருவரின் பார்வையில் “முஸ்னதான ஹதீஸ் “போன்றது என்பதை தப்ஸீர் துறை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அல் ஹாகிம் அபூ அப்தில்லா அல் முஸ்தத்ரக் என்ற தனது நூலில் கூறுகிறார்கள்.

ஒரு ஸஹாபியினால் முன்வைக்கப்படும் தப்ஸீரானது எங்களைப் பொறுத்தவரையில் மர்பூஆன ஹதீஸ் போன்றது என்று இதே நூலில் வேறோர் இடத்தில் அல் ஹாகிம் குறிப்பிடுகிறார்கள்.

இதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இவர்களுக்கு (ஸஹாபக்கள்)ப் பின்னர் வாழ்ந்தவர்களின் விளக்கத்தை விட இவர்களின் விளக்கம் (தப்ஸீர் ) ஏற்றுக்கொள்ளத் தகுதியானது என்பதில் சந்தேகமே இல்லை.

அல்லாஹ் தனது வேதத்தில் என்ன கூற வருகிறான் என்பதை இவர்கள் தான் மிகவும் அறிந்தவர்கள்.

இவர்கள் மீதுதான் இது நேரடியாக இறக்கியருளப்பட்டது.

அல் குர்ஆன் மூலம் முதன் முதலாக விளித்து பேசப்பட்டவர்கள் இவர்கள் தான்.

அல்குர்ஆனுக்கான சொல் மற்றும் செயல் சார்ந்த விளக்கத்தினை நபியவர்களிடமிருந்து நேரடியாக பார்த்துக் கற்றுக் கொண்டவர்கள் இவர்களாவர்.

உண்மையாகவே, இவர்கள் நாவன்மை மிக்க அரேபியர்கள்.

எனவே, இவர்களால் முன்வைக்கப்படும் குர்ஆனிய விளக்கங்களை புறந்தள்ளி நடப்பதில் நியாயம் இருக்காது.

(இகாததுல் லஹ்பான் )

இசை மூலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான வலிமை பெறப்படுமாக இருந்தால், இசையானது வணக்கமாகவே கருதப்படல் வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்!!!

என்ன ஆச்சரியம் இது !
இசையுடன் கூடிய பாடல்களை செவிமடுப்பதன் மூலமாகவா ஈமான், நேர்வழி, இறையொளி என்பன கிடைக்கும்!

அல்லாஹ்வும் அவனது தூதரும் வெறுக்கின்ற,தண்டனைகளைப் பெற்றுத் தருகின்ற ஹராமான விடயங்கள் தான் அவற்றில் அதிகம் உள்ளன.

அல்லாஹ்வின் வெறுப்பிற்குள்ளான இந்த ஹராமான செயலை ரசிப்பதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கம் ஈமானின் அதிகரிப்பு என்பன எப்படி ஏற்படும்?

என்று கேள்வி எழுப்புகிறார் இப்னுல் கய்யிம் (றஹ்) அவர்கள்.

( மதாரிகுஸ் ஸாலிஹீன் 1/485)

இசைக்கு அடிமையாகி அதில் ஊறிப்போனவவர்கள் அல் குர்ஆனை செவிமடுக்க விரும்பவும் மாட்டார்கள் அதில் அவர்கள் மகிழ்ச்சி அடையவும் மாட்டார்கள்.

உண்மையில், அவர்கள் குர்ஆனைக் கேட்டால், கவனம் கலைந்த இதயங்களுடன் தான் அதைக் கேட்பார்கள்.

இசை போன்ற தடைசெய்யப்பட்ட விடயங்களை
கேட்கும்போது, ​​குரல்கள் தாழ்ந்து, அசைவுகள் அமைதியடைந்த நிலையில் தான் அவர்களின் இதயங்கள் அதனைக் கேட்கின்றன என்று இசைக்கு அடிமையானவர்களின் நிலை பற்றி ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

(மஜ்மூஉல் பதாவா 11/557)

இசை இதயங்கள் மற்றும் உணர்வுகளை மென்மையாக்குகிறது அன்பை வளர்க்கிறது என்றெல்லாம் கூறி இசையை சிலர் சந்தைப்படுத்துகின்றனர்.

இவை உண்மையல்ல, ஏனெனில், இசையானது இச்சைகளுக்கும் ஆபாசங்களுக்கும் தூண்டுகோலாகவே இருக்கின்றது.

இவர்கள் கூறுவது போல இசை அவ்வாறான தன்மைகளை உருவாக்குமெனில், இசைக்கலைஞர்களின் இதயங்கள் மென்மையாகி அவர்களின் பண்பாடுகள் செம்மை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களின் நடத்தை நெறிபிறழ்ந்து பண்பாடு சீரழிந்து போய் இருப்பதையே நாம் காண்கின்றோம்.

 

 

 

முடிவாக.

இசை ஹலால் என்பது சரியான கருத்து அல்ல என்பதும் இசை ஹராமனது தான் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதும் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் மூலம் மிதவாத சிந்தனை கொண்டவர்களுக்கு மிகத் தெளிவாகவே புரிந்திருக்கும்.

சிறந்த அறிவுரைகள் மூலம் இந்த பாவத்தை படிப்படியாக தடுத்தாக வேண்டும்.

தீனை பின்பற்றுபவர்கள் செல்லாக்காசுகளாக மாறிப்போய் இருக்கும் காலத்தில் சில மனிதர்களின் பிரபல்யத்தை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

இசை ஹலால் என்று யார் சொன்னாலும் அவர்கள் மக்களின் ஆசைகளுக்கு துணை நின்று பாமரர்கள் போல பத்வா கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு மத்தியில் ஒரு பிரச்சினை முன்வைக்கப்பட்டால், அவர்கள் அதைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்களைப் பார்த்து அவற்றிலுள்ள இலகுவான விடயங்களை எடுத்துக்கொள்கிறார்கள் பின்னர் ஆதாரங்கள் எனும் பேரில் அவதூறான பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட கருத்துக்களையே தேடி முன்வைக்கிறார்கள்.

இவ்வாறே, இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு அந்நியப்பட்ட விடயங்களையே சட்டமாக முன்வைக்கின்றனர்.

எனவே, இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றில்லாமல் குர்ஆன் சுன்னாவிலிருந்து இஸ்லாத்தை அறிந்து கொள்வதில் கவனமாக இருங்கள்.

உண்மை (தீன்)மனிதர்களால் அறியப்படுவதில்லை, ஆனால், உண்மையை (தீனை)தெரிந்து கொண்டால், அதன் மூலம் மனிதர்களை அறிந்துகொள்ளலாம்.

தனது ஆசைகளை கைவிட்டு அல்லாஹ்விற்கு அடிபணிய வேண்டும் என்று நினைக்கும் முஃமின்களாக இருந்தால், இசை ஹராம் என்பதற்கு இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் போதுமானதாகும்.

வஹியை புறக்கணித்து,மார்க்கத்திலுள்ள ஆதாரமற்ற விடயங்களை இலகு கருதி பின்பற்ற எண்ணங்கொண்டவர்களாக இருந்தால், அவர்களின் முகத்திரைகளைக் கலைவதற்கு மேற்குறித்த செய்திகள் வழிவகுக்கும்.

முன்னோர்கள் கூறாத புதிய கருத்துக்களை அறிவின்றி அல்லாஹ் கூறியதாக நினைத்து பித்அத்துக்களை செய்கிறார்கள்.

முஃமின்களின் வழியே இவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

ملخص رسالة الضرب بالنوى لمن أباح المعازف للهوى للشيخ سعد الدين بن محمد الكبي.

மேலதிக தகவல்களுக்கு…

பின்வரும் நூல்களை பார்க்கவும் :

كتاب الإعلام بنقد كتاب الحلال والحرام للشيخ العلامة صالح بن فوزان الفوزان

وكتاب السماع لشيخ الإسلام ابن القيم

وكتاب تحريم آلات الطرب للشيخ محمد ناصر الدين الألباني رحمه الله

தமிழாக்கம்

அஷ்ஷெய்க் எம் எம் றிஸ்வான் (மீஸானி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply