4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை

18. மரணித்தவரின்‌ முகத்தைத்‌ திறந்து பார்ப்பதும்‌ இரு கண்களுக்கு மத்தியில்‌ முத்தமிடுவதும்‌ (ஆர்ப்பாட்டமில்லாமல்‌) அழுவதும்‌ கூடும்‌. இதற்குரிய அதாரங்களாவன :- நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ மரணித்த செய்தியை கேட்டு அபூபக்கர்‌ (رضي الله عنه) அவர்கள்‌ குதிரையில்‌ விரைந்து வந்தார்கள்‌. நபியவர்கள்‌ மரணிக்கும்‌ போது அபூபக்கர்‌(رضي الله عنه) அவர்கள்‌ மதினாவுக்குப்‌ பக்கத்திலுள்ள ஸூன்‌ஜு என்னும்‌ இடத்தில்‌ இருந்தார்கள்‌. அங்கிருந்து விரைந்து வந்தார்கள்‌. நபியவர்களின்‌ பள்ளிவாயிலுக்கு வந்தபோது, உமர்‌ (رضي الله عنه) ... Read more

3. மரணமடைந்தவருக்குப்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டியவை

இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலின் மூன்றாம் தலைப்பில் கூறுகிறார்: 17. நோயினால்‌ பீடிக்கப்பட்டவர்‌ மரணமடைந்து விட்டால்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டிய பல வேலைகள்‌ உள்ளன. (அ) என்‌ கணவர்‌ அபூஸலமா மரணமடைந்தவுடன்‌ நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ வந்திருந்தார்கள்‌. அப்போது என்‌ கணவரின்‌ கண்‌ திறந்திருந்தது. நபியவர்கள்‌ இலேசாகக்‌ கசக்கிக்‌ கண்ணை மூடிவிட்டு ‘உயிர்‌ கைப்பற்றப்‌ பட்டவுடன் (பிரிந்தவுடன்‌) பார்வை அதனை நோக்கியே இருக்கும்‌’ எனக்‌ கூறினார்கள்‌. ... Read more

ஒருவரின் மரண வேளையில் அருகில் இருக்கும் மற்றவர்கள் செய்ய வேண்டியவை

இந்த நூலின் முதல் பாடத்தை பார்க்க இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார்: நோயாளிக்கு மரணவேளை வந்ததும்‌ அருகில்‌ இருப்பவர்களுக்குச்‌ சில செயல்கள்‌ கடமையாகின்றன. அவருக்குக்‌ கலிமாவை எடுத்துக்‌ கூறி அதனைச்‌ சொல்லும்படி. செய்ய வேண்டும்‌.“உங்களில்‌ யாருக்காவது மரணம்‌ நெருங்கினால்‌ அவருக்கு கலிமாவை எடுத்துக்‌ கூறுங்கள்‌. எவனுடைய பேச்சின்‌ கடைசிச்‌ சொல்‌ “லா இலாஹ இல்லல்லாஹு’ என்றிருக்கிறதோ அவன்‌ சுவனம்‌ புகுவான்‌. அதற்கு முன்னுள்ள பாவச்‌ செயல்களுக்குப்‌ பரிகாரமாகவும்‌ இருக்கும்‌ ... Read more

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர் ... Read more

ஜனாஸா சட்டங்கள் – நோயாளியின்‌ கடமைகள்

மொழிபெயர்ப்பு : S. M. முஸ்தபா மவ்லானா ஜமாலி இமாம் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் (தல்கீஸ் அஹ்காம் அல்ஜனாயிஸ்) எனும் நூலில் நோயாளியின் கடமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்: 1. அல்லாஹ்வின்‌ தீர்ப்பை ஏற்பதும்‌, அவன்‌ தரும் சோதனையில்‌ பொறுமையாயிருப்பதும்‌, தன்‌ அதிபதியான அல்லாஹ்வின்‌ மீது நல்லெண்ணம்‌ வைப்பதும்‌ அவசியமாகும்‌. “முஃமினின் செயல்களைப்‌ பார்த்து வியப்படைகின்றேன்‌. அவனுடைய எல்லாச்‌ செயல்களும்‌ நன்மையே தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த்‌ தவிர வேறு யாருக்கும்‌ கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால்‌ ... Read more

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா?

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்று மட்டும் தான் கருத்தா அல்லது பெருமை, புறக்கணிப்பு, மறுத்தல் போன்ற கருத்துக்களும் இருக்கின்றனவா? பதில் : செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்), நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) என்று இரு பிரிவுகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தோம். குப்ர் என்ற சொல்லுக்கு நிராகரிப்பு அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றன. தொழுகையோடு தொடர்பு படுத்தி குப்ரை இரு வகைப்படுத்தலாம் 1. நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) : தொழுகையை மறுத்து விடுபவர் காபிராகி விடுகிறான் ... Read more

இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது இஸ்திஜ்மார் என்றால் என்ன? மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா? தூய்மை விடயத்தில் சிறந்தது எது? பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று ... Read more

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ ... Read more

வஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி : வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா? பதில் : அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது. குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் ... Read more

கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா? பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني ... Read more