4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை

18. மரணித்தவரின்‌ முகத்தைத்‌ திறந்து பார்ப்பதும்‌ இரு கண்களுக்கு மத்தியில்‌
முத்தமிடுவதும்‌ (ஆர்ப்பாட்டமில்லாமல்‌) அழுவதும்‌ கூடும்‌. இதற்குரிய அதாரங்களாவன
:-
நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ மரணித்த செய்தியை கேட்டு அபூபக்கர்‌ (رضي الله عنه) அவர்கள்‌
குதிரையில்‌ விரைந்து வந்தார்கள்‌. நபியவர்கள்‌ மரணிக்கும்‌ போது அபூபக்கர்‌(رضي الله عنه)
அவர்கள்‌ மதினாவுக்குப்‌ பக்கத்திலுள்ள ஸூன்‌ஜு என்னும்‌ இடத்தில்‌ இருந்தார்கள்‌.
அங்கிருந்து விரைந்து வந்தார்கள்‌.
நபியவர்களின்‌ பள்ளிவாயிலுக்கு வந்தபோது, உமர்‌ (رضي الله عنه) அவர்கள்‌
நபியவர்கள்‌ மரணிக்கவில்லை எனும் கருத்தில் பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்கள்‌.
அபூபக்கர்‌ (رضي الله عنه) அவர்கள்‌ நேரே அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்களின்‌ வீட்டிற்குச்‌
சென்றார்கள்‌. போர்வையால்‌ உடல்‌ முழுவதும்‌ போர்த்தப்பட்டிருந்த நபியவர்களின்‌
முகத்தைத்‌ திறந்து பார்த்தார்கள்‌. இரு கண்களுக்குமிடையில் முத்தமிட்டார்கள்‌. பின்னர்‌
அழுதார்கள்‌. “என்‌ தாயும்‌ தந்தையும்‌ தங்களுக்கு அர்ப்பணமாவார்களாக!
அல்லாஹ்வின்‌ தூதரே! இரண்டு மரணங்களை அல்லாஹ்‌ உங்களுக்கு
இணைக்கமாட்டான்‌. உங்களின்‌ (மறைவுக்குரிய) மரணத்தைப்‌ பெற்று விட்டீர்கள்‌”
எனக்‌ கூறினார்கள்‌.

(புகாரி, நஸயீ, பைஹகி)

இச்செய்தியில்‌ மரணித்தவரின்‌ முகத்தைத்‌ திறந்து பார்த்தலும்‌, முத்தமிடுவதும்‌,
அழுதலும்‌ இடம்‌ பெற்றிருக்‌கின்றன. இதனால்‌ இவை ஆகுமானவையாகும்‌.

ஒரு முறை நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ தங்கள்‌ மகன்‌ இப்ராஹீம்‌ அவர்களுக்குப்‌
பாலூட்டிய பெண்ணின்‌ கணவர்‌ அபூஸைப்‌ அவர்களின்‌ வீட்டுக்குச்‌ சென்று அங்கு
தங்கள்‌ மகனை எடுத்து முகர்ந்து முத்தமிட்டார்கள்‌. அப்போது இப்ராஹீம்‌ மரணத்துடன்‌
போராடிக்‌ கொண்டிருந்தார்‌. நபியவர்களின்‌ கண்களிலிருந்து நீர்‌ வழிந்து
கொண்டிருந்தது.
இதனைக்‌ கண்ட அப்துர்‌ ரஹ்மான்‌ இப்னு அவ்பு (رضي الله عنه) அவர்கள்‌ “அல்லாஹ்வின்‌
தூதரே! நீங்களுமா (அழுகிறீர்கள்‌)?” எனக்‌ கேட்டார்கள்‌. “அன்புடைய மகனே! இது
பாசத்தினால்‌ வரும்‌ கண்ணீராகும்‌. கண்கள்‌ நீரைச்‌ சொரிகின்றன. உள்ளம்‌ வேதனை
அடைகிறது. எனினும்‌ அல்லாஹ்‌ விரும்பும்‌ சொற்களைத்‌ தவிர ஏதும்‌ கூற மாட்டோம்‌.
(மகனே) இப்ராஹீமே! உன்‌ பிரிவிற்காக நாங்கள்‌ துக்கமடைகிறோம்‌” எனக்‌
கூறினார்கள்‌. இந்த நிகழ்ச்சியை அனஸ்‌ (رضي الله عنه) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.
(புகாரி, முஸ்லிம்‌, பைஹகி)

நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ ஜஃபர்‌ (رضي الله عنه) அவர்களின்‌ மரணத்தையொட்டி மூன்று
நாட்கள்‌ வரை அவர்‌ வீடு சென்று அனுதாபம்‌ தெரிவிக்க அனுமதித்தார்கள்‌. அதன்‌ பின்‌
தடுத்துவிட்டார்கள்‌. (இதன்‌ முழு விபரம்‌ அனுதாபம்‌ தெரிவித்தல்‌ என்ற தலைப்பின்‌ கீழ்‌
இன்ஷா அல்லாஹ்‌ விளக்கமாக வரும்‌).

இந்த நூலின் முந்தைய தலைப்பை பார்க்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: