இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது

இஸ்திஜ்மார் என்றால் என்ன? மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா? தூய்மை விடயத்தில் சிறந்தது எது?

பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று முறை துடைக்க வேண்டும். மேலும் இஸ்திஜ்மார் செய்ய தடுக்கப்பட்ட பொருட்களை பயன் படுத்தக் கூடாது, உதாரணமாக சானம், எலும்பு ஆகியவை. மேலும் உணவு போன்ற மதிப்பிற்குரிய பொருட்களையும் பயன் படுத்தக் கூடாது.

மேலும் நீர் இருக்கும் நிலையிலும், இல்லாத நிலையிலும் இஸ்திஜ்மார் செய்வது கூடும். ஆனால் உலமாக்கள், இரண்டையும் சேர்த்து செய்வது சிறந்தது என்று கூறுகின்றனர்.

[-ஷேக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்]

மேலும் மலம்/சிறுநீர் கழித்த பின்பு டிஸ்யூ பேப்பர்களை கொண்டு சுத்தம் செய்வதன் சட்டம் என்ன? சிறுநீர், மலம் கழித்த பின்பு, ஒரே ஒரு கல் கொண்டு மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? என்று ஷேக் அப்துல் அசீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் கேட்கப்பட்டார்.

பதில்: சுத்தம் ஏற்படுத்தும் அனைத்து பொருட்களை கொண்டும் இஸ்திஜ்மார் (மலம், சிறுநீர் கழித்த பின்பு சுத்தம்) செய்யலாம், உதாரனமாக, கூழாங்கல், செங்கல், டிஸ்யூ பேப்பர், அல்லாஹ்வின் பெயர்களை, குர்ஆன் ஆயத்துகள் ஆகியவை இல்லாத காகிதங்கள், ஆகியவற்றை கொண்டு இஸ்திஜ்மார் செய்யலாம்.

ஆனால், சானம், எலும்புகளை கொண்டு மட்டும் செய்யக் கூடாது, ஏனென்றால், நபி صلى الله عليه وسلم அவ்வாறு செய்ய தடுத்தார்கள். “அவை இரண்டும் தூய்மை படுத்தாது” என்றும் கூறினார்கள்.

மற்றோர் ஹதீஸில்
“எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக்கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள் .”
ஸஹீஹ் முஸ்லிம் என்று சல்மான் அல்ஃபாரிசீ رضي الله عنه கூறினார்கள்
ஸஹீஹ் முஸ்லிம்: 437.

இன்னோர் ஹதீஸில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும் என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 767.
அத்தியாயம் : 4.

முன்னர் கூறிய சல்மான் அல்ஃபாரிசீ رضي الله عنه அவா்களின் ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் வருவதைப்போல் மூன்று கற்களுக்கு குறைவாக பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்யக்கூடாது. மூன்று கற்களை பயன் படுத்தியும் அடுத்தும்(நஜீஸ்) நீனாவிட்டால், அசுத்தம் நீங்கி தூய்மை ஆகும் வரை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ்வே தௌஃபீக் வழங்குபவன்.

[ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் மஜ்மூ அல் ஃபதாவா இப்னு பாஸ்]

மௌஸூஅதுல் ஃபிக்ஹிய்யா எனும் ஃபிக்ஹ் களஞ்சிய நூலில் பின் வருமாறு கூறப்படுகிறது:
மலம், சிறுநீர் ஆகியவை, முன் – பின் துவாரங்களை தாண்டி ஏனைய இடங்களில் அதிகமாக ஆகிவிட்டால் இஸ்திஜ்மார் செய்வது போதாது, கண்டிப்பாக கழுவ வேண்டும் என்பதில் நான்கு மத்ஹபின் உலமாக்களும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

ஏனென்றால் இஸ்திஜ்மார், என்பது தேவையை அடிப்படையாக கொண்ட ஒரு சலுகை. இதற்கு அதிகமாக நடந்தால் அசுத்தங்களை வழக்கம் போல் கழுவே வேண்டும்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply